செங்கல்பட்டே சிலிர்க்குது.. சென்னை பூரிக்குது.. "மஞ்ச கலர்" பால் பாக்கெட்டில் ஆவினின் அதிரடி பாருங்க
சென்னை: ஆவின் பால் நிறுவனம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.. இது சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் தந்து வருகிறது.
சமீபகாலமாகவே, பல்வேறு மாவட்டங்களில் ஆவின் பால் தட்டுப்பாடு நிலவ ஆரம்பித்துள்ளதாக புகார்கள் வெடித்து வருகின்றன.. அதுமட்டுமல்லாமல், இந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் தலையிட வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகளும் கோரிக்கைகளை விடுக்க துவங்கின.

இதுகுறித்து பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஒருமுறை விளக்கம் தந்திருந்தார்.. அதில், "பால் கொள்முதல் குறைந்திருப்பதும், ஆவின் பால் பதப்படுத்தும் நிலையங்களில் போதிய எண்ணிக்கையில் பணியாளர்கள் இல்லாததும் தான் ஆவின் பால் வழங்கல் பாதிப்புக்கு காரணம்.. ஆவின் பாலுக்கு இனி தட்டுப்பாடு ஏற்படாது.. அனைத்து மாவட்டங்களிலும் ஆவின் பால் சரியான நேரத்தில் வழங்கப்படும்" என்று அமைச்சர் கூறினார்.
பற்றாக்குறை: ஆனாலும், பற்றாக்குறையும், தட்டுப்பாடும், தொடர்ந்து நீடித்தே வரும்நிலையில், அடுத்த அதிரடியை ஆவின் கையில் எடுத்துள்ளது.. அதன்படி, மிக குறைந்த கொழுப்பு சத்துள்ள பாலை தயாரித்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் விற்பனை செய்ய போகிறதாம்.. அதுவும் விலை எவ்வளவு தெரியுமா? புதிய வகை மஞ்சள் நிற பாக்கெட் 500 மி.லி. 19 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.
திமுகவின் தேர்தல் வாக்குறுதிப்படி, லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைக்கப்பட்டதால்தான், பச்சை நிற பால் பாக்கெட் வாயிலாக, ஆவினுக்கு லிட்டருக்கு, 12 ரூபாய் வரை இழப்பு ஏற்படுகிறது. அதேபோல, ஆரஞ்ச் நிற பால் பாக்கெட் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுவதால், லிட்டருக்கு, 16 ரூபாய் வரை இழப்பு ஏற்படுகிறது
மஞ்சள் நிற பாக்கெட்: எனவேதான், குறைந்த கொழுப்பு சத்து கொண்ட நீல நிற பால் பாக்கெட் விற்பனை வாயிலாக, 6 ரூபாயும், அதிக கொழுப்பு சத்துள்ள பாலை தயாரித்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விற்பனை செய்ய, ஆவின் முடிவெடுத்து உள்ளதாக தெரிகிறது. மஞ்சள் நிற பாக்கெட்டில் தரப்பட உள்ள இந்த பால், 500 மி.லி., 19 ரூபாய்க்கு கிடைக்கும் என்பதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து ஆவின் நிர்வாக இயக்குனர் வினீத் சொல்லும்போது, "இருமுறை சமன்படுத்தப்பட்ட பாலில் கொழுப்புசத்து குறைவு என்பதால், அதை குடிப்பதற்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர். மற்ற மாவட்டங்களில், இந்த பால் பாக்கெட்விற்பனை பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. சென்னை மக்களின் தேவைக்காக, விரைவில் இது விற்பனை செய்யப்பட உள்ளது" என்றார்.
பால் பாக்கெட்கள்: அந்தவகையில், இந்த பால் பாக்கெட்கள் விரைவில் விற்பனைக்கு விரைவில் வரும் என்று ஆவின் அறிவித்துள்ளதால், ஆவின் நிறுவனத்துக்கும் வருமானம் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. அத்துடன் முழுக்க முழுக்க சென்னை மக்களின் தேவைக்கெனவே, இப்படி ஒரு ஏற்பாடு தயாராகி உள்ளதால், இந்த மஞ்சள் நிற பாக்கெட்டை எதிர்நோக்கி சென்னைவாசிகள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications