சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரெடியாகிறது சிங்கார சென்னை 2.0.. புதுப்பொலிவு அடையும் தலைநகர்.. முதல்வரின் "ப்ராஜெக்ட் ப்ளூ" திட்டம்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாடு தலைநகர் சென்னையை புதுப்பொலிவாக மாற்றும் வகையில் 10 அதிரடி திட்டங்களை கொண்டு வரும் முடிவில் தமிழ்நாடு அரசு இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

Recommended Video

    புதுப்பொலிவுன் Chennai! CM Stalinன் Project Blue திட்டம்! | OneIndia Tamil

    தற்போது தமிழ்நாட்டில் லாக்டவுனை பயன்படுத்தி சென்னையை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. சென்னையின் பழைய பொலிவை மீட்டு எடுக்கும் வகையில், தெரு தெருவாக அமைச்சர்கள், திமுக எம்எல்ஏக்கள் சுத்தப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ஜெட் வேகம்.. 6 மாநிலங்களில் பெட்ரோல் விலை சதமடித்து சாதனை.. டெல்லியில் லிட்டர் ரூ.95-ஐ தாண்டியது! ஜெட் வேகம்.. 6 மாநிலங்களில் பெட்ரோல் விலை சதமடித்து சாதனை.. டெல்லியில் லிட்டர் ரூ.95-ஐ தாண்டியது!

    கிட்டத்தட்ட 8800 டன் குப்பைகள் சென்னையில் சுத்தப்படுத்தப்பட்டு அகற்றப்பட்டு இருக்கின்றன. இந்த நிலையில் சென்னையை பல்வேறு புதிய திட்டங்களை கொண்டு வர உள்ளனர்.

    சிங்கார சென்னை 2.0

    சிங்கார சென்னை 2.0

    சென்னையை மீண்டும் சிங்கார சென்னையாக மாற்றும் சிங்கார சென்னை 2.0 திட்டத்தை தமிழ்நாடு அரசு விரைவில் கையில் எடுக்க உள்ளது. சர்வதேச நகரங்கள் இருப்பது போல சென்னையை வண்ணமயமாக மாற்ற முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. அதோடு சென்னை சாலைகளை சுத்தமாக்குவதோடு, அதை உலக தரத்திற்கு மாற்றவும் திட்டங்கள் வகுக்கப்பட்டு உள்ளது.

    ப்ராஜெக்ட் ப்ளூ

    ப்ராஜெக்ட் ப்ளூ

    இதில் முதல் மற்றும் முக்கியமான திட்டம் ப்ராஜெக்ட் ப்ளூ ஆகும். இது சென்னையின் அணைத்து கடலோர பகுதிகளையும் அழகுபடுத்தும் திட்டம் ஆகும். அதோடு இங்கு புதிதாக பீச்கள், நீர் விளையாட்டு அமைப்புகள், கடல் கண்காட்சியாக, சுற்றுலா தளங்கள் அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு எடுத்து இருக்கிறது. சென்னையின் சுற்றுலா வளத்தை மேம்படுத்தும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ப்ராஜெக்ட் ப்ளூ மிகப்பெரிய திட்டமாக இருக்கும் என்கிறார்கள்.

    விளக்கு

    விளக்கு

    அதோடு சென்னையின் அனைத்து சாலைகளும் புதுப்பிக்கப்பட்ட உள்ளன. விரைவில் இதற்கான பணிகள் நடக்க உள்ளன. சாலைகள் அனைத்திலும் வெளிநாடுகளில் இருப்பது போல வண்ண விளக்குகள் அமைக்கும் திட்டம் உள்ளது. மூன்றாவதாக சென்னையின் அனைத்து பாலங்கள், சப் வே அனைத்தும் புதுப்பிக்கப்பட்டு, மாற்றி அமைக்கப்பட உள்ளன.

    மாற்றம்

    மாற்றம்

    அதேபோல் கிண்டி, எக்மோரில் பேருந்து நிலையங்களை புதுப்பிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அண்ணா நூலகத்தை மொத்தமாக புதுப்பிக்கும் திட்டம் உள்ளது. மேலும் அண்ணா நகர் டவர் பார்க்கில் புதிய வசதிகளை ஏற்படுத்தும் திட்டங்களை தமிழ்நாடு அரசு வைத்து இருப்பதாக தகவல்கள் வருகின்றன. சென்னையில் மிகப்பெரிய விளையாட்டு காம்ப்ளக்ஸ் அமைக்கப்படும் என்கிறார்கள்.

    பார்க்

    பார்க்

    அனைத்து விதமான விளையாட்டு மீதும் கவனம் செலுத்தும் வகையில் சர்வதேச தரத்தில் இந்த விளையாட்டுயகம் அமைக்கப்பட உள்ளது. பெங்களூரில் பல்வேறு தெருக்களில் நிறைய பார்க்குகள், மினி பாரஸ்ட் அமைக்கப்பட்டு இருப்பது போல, சென்னையிலும் அமைக்கப்பட உள்ளது,. இது போக குழந்தைகள் வரும் வகையில் அறிவியல் மற்றும் கணித பூங்காக்களும் சென்னையில் அமைக்கப்படும்.

    இ வாகனம்

    இ வாகனம்

    அதேபோல் சென்னையில் டெஸ்லா போன்ற இ வாகனங்களை பயன்படுத்த ஊக்குவிக்க உள்ளனர். இதற்கான சார்ஜிங் வசதி உட்பட அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தும் முடிவில் உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான நிதி ஒதுக்கீடும், அதிகாரபூர்வ அறிவிப்பையும் முதல்வர் ஸ்டாலின் விரைவாக வெளியிடுவார் என்று தகவல்கள் தெரிவிகின்றன.

    English summary
    Chennai 2.0: Tamilnadu government plans to renovate the capital completely with new plans and projects.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X