நடுநடுங்க வைத்த சவுகார்பேட்டை.. கொலையாளிகள் 3 பேருக்கும் நவம்பர் 27-ம் தேதி வரை நீதிமன்ற காவல்
3 பேரை சுட்டுக் கொன்ற கொலையாளிகள் 3 பேருக்கு நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது
சென்னை: சென்னை சவுகார்பேட்டையில் 3 பேரை சுட்டுக் கொன்ற வழக்கில் கைதான 3 பேருக்கும் நவம்பர் 27-ம் தேதி வரை நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை, சௌகார்பேட்டை விநாயக மேஸ்திரி தெருவை சேர்ந்தவர் தலித்சந்த்.. 74 வயதாகிறது.. மனைவி பெயர் புஷ்பா பாய்.. அவருக்கு 70 வயதாகிறது.

இவருக்கு ஷீத்தல் என்ற மகன், பிங்கி என்ற மகள் உள்ளனர்.. மகன் ஷீத்தலுடன் ஒரு அப்பார்ட்மென்ட்டில் குடியிருந்து வந்தார். ஷீத்தல் கல்யாணமாகி மனைவியை பிரிந்தவர். மனைவி பெயர் ஜெயமாலா.. சமீப காலமாக கணவனுடன் சண்டை போட்டுக் கொண்டு புனேவில் இருக்கிறார்.
எல்லா சொத்துக்களையும் 2 குழந்தைகளுக்கு மட்டும் எழுதி தர கேட்டு வந்தார்.. அதற்கு மாமனார் மறுக்கவும்தான், தன்னுடைய 2 அண்ணன்கள், சித்தப்பா, மாமா என 5 பேருடன் வீட்டிற்குள் நுழைந்த ஜெயமாலா, மாமனார், மாமியார், கணவனை சுட்டு தள்ளினார்.
இது சம்பந்தமாக விசாரணையை மேற்கொண்ட போலீசார், கொலை செய்துவிட்டு புனேவுக்கு காரில் தப்பி சென்று கொண்டிருந்த 3 பேரை விரட்டி மடக்கி பிடித்தனர்.. இந்த வழக்கில் கைலாஷ், ரவீந்திரநாத், விஜய் உத்தம் என்ற 3 பேர் புனேவில் கைதாகினர்.. அவர்கள் தமிழகம் அழைத்து வரவழைக்கப்பட்டு சைதாப்பேட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், சம்பந்தப்பட்ட மெயின் குற்றவாளி ஜெயமாலா எங்கே என்று தெரியவில்லை... புனேவில் மாயமாகி உள்ளஅவரை பிடிக்க நம் போலீசார் அங்கு முகாமிட்டு வருகின்றனர்.. இன்று அல்லது நாளைக்குள் ஜெயமாலாவையும் கைது செய்து இங்கே அழைத்து வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications