சென்னையிலேயே.. அதிமுக ‘விக்கெட்’ காலி.. மாஜி எம்.எல்.ஏவை பாஜகவுக்கு தட்டித் தூக்கிய அண்ணாமலை!
சென்னை: லோக்சபா தேர்தல் நெருங்கும் சூழலில் கட்சி தாவல்கள் அதிகரித்து வரும் நிலையில், மயிலாப்பூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ ராஜலெட்சுமி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்தார். இது அதிமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக அதிமுக பாஜக கூட்டணி தொடர்ந்த நிலையில், திடீரென அந்த கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக அறிவித்தது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அதிமுகவை தொடர்ந்து சீண்டி வந்த நிலையில், இனி பாஜக கூட்டணியில் அதிமுக இருக்காது என அதிரடி முடிவை எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. வரும் லோக்சபா தேர்தலில், அதிமுக, பாஜக தனித்தனி அணிகளாக களமிறங்குகின்றன.

லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு முக்கிய நிர்வாகிகள் தாவும் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் தமிழகத்தில் அதிமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலரை பாஜக தங்களது அணிக்கு இழுத்து வருகிறது.
அண்மையில் அதிமுகவைச் சேர்ந்த 14 முன்னாள் எம்.எல்.ஏக்கள், காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த 1 முன்னாள் எம்.எல்.ஏ, ஒரு திமுக முன்னாள் எம்.பி ஆகியோர் டெல்லிக்குச் சென்று பாஜகவில் இணைந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் எம்ஜிஆர் காலத்தில் எம்.எல்.ஏவாக இருந்தவர்கள். அதைத்தொடர்ந்து, விளவங்கோடு சிட்டிங் காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி பாஜகவில் இணைந்தார்.
இதனையடுத்து இன்று அதிமுக முன்னாள் எம்எல்ஏ ராஜலட்சுமி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய அமைச்சர்கள் முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைந்துக்கொண்டார். சென்னை தியாகராய நகரில் வசித்து வருபவர் வழக்கறிஞர் ராஜலட்சுமி. இவர் ஜெயலலிதா மீதான பற்றின் காரணமாக அக்கட்சியில் தீவிரமாக பணியாற்றி வந்தார். அவருக்கு கடந்த 2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வாய்ப்பு வழங்கப்பட்டது.

2011 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் கே.வி.தங்கபாலுக்கு எதிராக அதிமுக சார்பில் களம் இறங்கினார் ராஜலட்சுமி. இந்த தேர்தலில் 29,204 வாக்குகள் வித்தியாசத்தில் ராஜலட்சும் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனார். இந்நிலையில், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் முக்கியத்துவம் வழங்கப்படாமல் இருந்து வந்த நிலையில் அவர் இன்று பாஜகவில் இணைந்துள்ளார்.
சென்னை கமலாலயத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர்கள் கிஷன் ரெட்டி, விகே சிங் ஆகியோர் முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார் ராஜலட்சுமி. அவருக்கு பாஜகவின் உறுப்பினர் அட்டையை அண்ணாமலை வழங்கினார். அடுத்தடுத்து அதிமுக முக்கிய பிரமுகர்கள் பாஜகவில் இணைந்து வருவது அதிமுகவினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜலட்சுமி பாஜகவில் இணைந்துள்ளது பற்றி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, "சென்னை மயிலாப்பூர் தொகுதி முன்னாள் அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர் சகோதரி திருமதி. ராஜலட்சுமி அவர்கள், மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நல்லாட்சியால் ஈர்க்கப்பட்டு, அவரது கரங்களை வலுப்படுத்த, மாண்புமிகு மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, மத்திய இணை அமைச்சர் விகே சிங் மற்றும் தமிழக பாராளுமன்ற தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் மற்றும் தமிழக பாஜக மூத்த தலைவர்கள் முன்னிலையில் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்கள்.
சகோதரி திருமதி. ராஜலட்சுமி அவர்களை மனதார வரவேற்பதோடு, சாமானிய மக்களுக்கான பாரதப் பிரதமரின் அரசியல் பணிகளுக்கு, அவரது மேலான பங்களிப்பையும் கோருகிறேன்." எனத் தெரிவித்துள்ளார் அண்ணாமலை.
-
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications