Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையே ஜொலி ஜொலிக்குது.. புத்தம் புதிய பொலிவுடன் ரெடியான மீனம்பாக்கம் ஏர்போர்ட்.. குஷியில் மக்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை விமான நிலையத்தில் புத்தம் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு, இன்று முதல் செயல்பாட்டுக்கும் கொண்டுவரப்பட்டுள்ளது.. இது பயணிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

சென்னை ஏர்போர்ட்டில் ஒருங்கிணைந்த சர்வதேச முனையம், டெர்மினல் 2-ஐ (டி 2) கடந்த ஏப்ரலில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.. இதையடுத்து, இந்த புதிய முனையத்தின் சேவைகள், கடந்த ஜூலை 7-ம் தேதியிலிருந்தே நடைமுறைக்கு வந்துவிட்டது.

Chennai Airport Domestic Terminal 1, Terminal 4 inauguration today and Passengers are Very Happy

ஆனால், பழைய சர்வதேச முனையத்தின் டெர்மினல் 4, நல்ல நிலையில் இருப்பதால், அந்த இடத்தை கூடுதல் உள்நாட்டு விமான முனையமாக பயன்படுத்த, இந்திய விமான நிலைய ஆணையம் முடிவு செய்தது.

உள்நாட்டு முனையம்: அதன்படி, சர்வதேச முனையமாக இருந்த, டெர்மினல் 4-ஐ, உள்நாட்டு முனையமாக மாற்றி அமைக்கும் பணிகளும் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று நவம்பர் 15-ம் தேதி முதல் இந்த புதிய உள்நாட்டு முனையம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

சென்னை ஏர்போர்ட்டை பொறுத்தவரை, உள்நாடுகளுக்கு பயணம் செய்ய அதிகளவிலான மக்கள் வருவார்கள்.. இதனால் எப்போதுமே கூட்ட நெரிசல் காணப்படும்.. இதற்காக முன்னதாக கிளம்பி வந்தாலும்கூட, நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலைமை உள்ளது.. அதுவும், பண்டிகை நாட்கள் என்றால் கேட்கவே வேண்டாம். நீண்ட வரிசையில் காத்திருந்து பயணம் செய்ய வேண்டிய நிலைமை உள்ளது..

போர்டிங் செய்ய நீண்ட வரிசையில் நிற்க வேண்டி உள்ளது.. ஆனால், இதற்குமே போதிய வசதிகள் இருப்பதில்லை.. அதனால்தான், பெங்களூர் போன்ற இடங்களை போலவே, சென்னை ஏர்போர்ட்டிலும் வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்று பயணிகள் தொடர்ந்து கோரிக்கைகளை விடுத்து வந்தனர். பயணிகளின் இந்த கோரிக்கைதான், பரிசீலிக்கப்பட்டு, இன்று முதல் உள்நாட்டு முனையத்தில் இன்று முதல் 2 பிரிவுகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

செயல்பாடுகள்: நேற்றைய தினம், இதற்கான சோதனைகள் அதாவது, விமானங்கள் தரையிறங்குவது, புறப்படுவது போன்றவை நடத்தப்பட்ட நிலையில், இன்று செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

அந்தவகையில், புதிய உள்நாட்டு முனையம் டெர்மினல் 4 முழு அளவில் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இங்கிருந்து ஏர் இந்தியா, அதை சார்ந்த விமானங்கள் முழுமையாக இயக்கப்பட உள்ளன. மேலும், பயன்பாட்டிலுள்ள உள்நாட்டு முனையம் டெர்மினல் 1ல் இண்டிகோ உள்ளிட்ட மற்ற விமான நிறுவன விமானங்களும், உள்நாட்டு விமானங்களும் இயக்கப்பட உள்ளன..

பெருத்த நம்பிக்கை: இப்போது, சென்னை உள்நாட்டு விமான நிலையம், டெர்மினல் 1, டெர்மினல் 4 என்று இரு முனையங்களாக பிரிக்கப்பட்டுள்ளதால், பயணிகளுக்கு இட நெருக்கடி இல்லாமல் இருக்கும் என்கிறார்கள் அதிகாரிகள்.. அத்துடன் கூடுதல் இடவசதிகளும் கிடைக்கும் என்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, சென்னை உள்நாட்டு விமான பயணிகளின் வசதிக்காக, மேலும் கூடுதலாக, உள்நாட்டு விமான சேவைகள் இயக்கப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

புதிய உள்நாட்டு முனையமான டெர்மினல் - 4 ல், ஏர் இந்தியா, மற்றும் அதை சார்ந்த அலயன்ஸ் ஏர் விமானங்கள் இயக்கப்படும் டெர்மினல் - 1ல், இண்டிகோ உள்ளிட்ட மற்ற விமான நிறுவனங்களின் விமானங்கள் இயக்கப்படும் என்றும் கூறியிருக்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+