Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காலையிலேயே.. பட்டைய கிளப்ப போகும் "சென்னை".. மிரள வைக்கும் மீனம்பாக்கம் ஏர்போர்ட்.. அடேங்கப்பா வசதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை விமான நிலையத்தில் இரு முனையங்களாக, உள்நாட்டு முனையம் நாளை முதல் பயன்பாட்டுக்கு வரவுள்ள நிலையில், இன்றைய தினம் இதற்கான சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

சென்னை ஏர்போர்ட்டில், புதிய ஒருங்கிணைந்த சர்வதேச முனையத்தை, 2.21 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில், ரூ.2,467 கோடி திட்டத்தில் 2 கட்டங்களாக கட்டுவதற்கு, இந்திய விமான நிலைய ஆணையம் கடந்த 2018-ல் முடிவு செய்தது.. 1.36 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில், ரூ.1,260 கோடி செலவில் முதல் கட்ட பணிகளும் நடந்து முடிந்தன.

Chennai Airport Domestic Terminal 1, Terminal 4 inauguration tomorrow and Do you know what are the Benefifts

புதிய முனையம்: இந்த ஒருங்கிணைந்த சர்வதேச முனையம், டெர்மினல் 2-ஐ (டி 2) கடந்த ஏப்ரலில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.. இதையடுத்து, இந்த புதிய முனையத்தின் சேவைகள், கடந்த ஜூலை 7-ம் தேதியிலிருந்தே நடைமுறைக்கு வந்துவிட்டது. ஆனால், பழைய சர்வதேச முனையத்தின் டெர்மினல் 4, நல்ல நிலையில் இருப்பதால், அந்த இடத்தை கூடுதல் உள்நாட்டு விமான முனையமாக பயன்படுத்த, இந்திய விமான நிலைய ஆணையம் முடிவு செய்தது.

அதன்படி, சர்வதேச முனையமாக இருந்த, டெர்மினல் 4-ஐ, உள்நாட்டு முனையமாக மாற்றி அமைக்கும் பணிகளும் நடந்து முடிந்துள்ள நிலையில், நாளை அதாவது நவம்பர் 15-ம் தேதி இந்த புதிய உள்நாட்டு முனையம் செயல்பாட்டுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு முனையம்: இந்நிலையில், இன்றைய தினம் சோதனை அடிப்படையில், விமானங்கள் தரையிறங்குவது, புறப்படுவது போன்றவை நடத்தப்பட்டன.. அதன்படி, அந்தமானில் இருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானம் இன்று காலை 10.20 மணிக்கு 126 பயணிகளுடன், சென்னை புதிய உள்நாட்டு முனையம் டெர்மினல் 4ல் தரையிறங்கியது..

அப்போது, அதிலிருந்த பயணிகளை, அதிகாரிகள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். அதேபோல, இன்று காலை 11.10 மணிக்கு, சென்னையில் இருந்து பெங்களூருக்கு 154 பயணிகளுக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானம் புறப்பட்டது..

உள்நாட்டு முனையம்: ஆக, நாளை அதிகாலையில் இருந்தே, புதிய உள்நாட்டு முனையம் டெர்மினல் 4 முழு அளவில் செயல்பாட்டிற்கு வருகிறது. இங்கிருந்து ஏர் இந்தியா, அதை சார்ந்த விமானங்கள் முழுமையாக இயக்கப்பட உள்ளன. மேலும், பயன்பாட்டிலுள்ள உள்நாட்டு முனையம் டெர்மினல் 1ல் இண்டிகோ உள்ளிட்ட மற்ற விமான நிறுவன விமானங்களும், உள்நாட்டு விமானங்களும் இயக்கப்பட உள்ளன..

இப்போது, சென்னை உள்நாட்டு விமான நிலையம், டெர்மினல் 1, டெர்மினல் 4 என்று இரு முனையங்களாக பிரிக்கப்பட்டுள்ளதால், பயணிகளுக்கு இட நெருக்கடி இல்லாமல் இருக்கும் என்கிறார்கள் அதிகாரிகள்.. அத்துடன் கூடுதல் இடவசதிகளும் கிடைக்கும் என்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, சென்னை உள்நாட்டு விமான பயணிகளின் வசதிக்காக, மேலும் கூடுதலாக, உள்நாட்டு விமான சேவைகள் இயக்கப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Chennai Airport Domestic Terminal 1, Terminal 4 inauguration tomorrow and Do you know what are the Benefifts

புகார்கள்: வழக்கமாக, உள்நாடுகளுக்கு பயணம் செய்ய அதிகளவிலான மக்கள் வருவதால் கூட்டம் அலைமோதுகிறது... இதனால், முன்னதாக வந்தாலும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலைமை உள்ளதாக தெரிகிறது. அதுவும், பண்டிகை நாட்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து பயணம் செய்ய வேண்டிய நிலைமையும் உள்ளது..

இதைத்தவிர, பயணிகள் போர்டிங் செய்ய நீண்ட வரிசையில் நிற்க வேண்டி இருப்பதாகவும், போதிய வசதிகள் அங்கு இல்லை என்றும் புகார் கிளம்பின... எனவே, பெங்களூரு போன்ற இடங்களை போலவே, சென்னை ஏர்போர்ட்டிலும் வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்தபடியே இருந்த நிலையில், இந்த குறைகள் அனைத்துமே இப்போது தீரும் என்கிறார்கள் அதிகாரிகள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+