மெரினா ஏர் ஷோ: கதறி துடித்த கார்த்தியின் குடும்பம்! போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் காத்திருந்த ஷாக்
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் நேற்று முன்தினம் நடைபெற்ற விமானப்படை சாகச நிகழ்ச்சியை பார்க்கச் சென்ற ஐந்து பேர் உயிரிழந்த நிலையில், அவர்களது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கார்த்திகேயன் வெறும் வயிற்றில் ஜூஸ் குடித்ததால் ஏற்பட்ட ஏப்பத்தால் உயரிழந்ததாக மருத்துவர்கள் கூறியதால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சென்னை மெரினா கடற்கரையில் நேற்று முன் தினம் இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 11 மணிக்கு இந்த விமான சாகச நிகழ்ச்சி தொடங்கிய நிலையில் மதியம் ஒரு மணிக்கு நிறைவடைந்தது.

இந்திய விமான படையைச் சேர்ந்த 72 விமானங்கள், ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவை இந்த சாகச நிகழ்வில் பங்கேற்றன. தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் நேற்று முன் தினம் சாகச நிகழ்ச்சியை காண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
அதே நேரத்தில் லட்சக்கணக்கானோர் ஒரே நேரத்தில் விமான சாகச நிகழ்ச்சியை காண குவிந்ததால் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டதோடு போக்குவரத்து நெரிசலுக்கு ஏற்பட்டது. பலரும் தங்கள் வீடுகளுக்கு திரும்ப முடியாமல் அவதிப்பட்டனர். மேலும், வெயிலின் தாக்கம் காரணமாக சிலருக்கு உடல் சோர்வு, மயக்கம் உள்ளிட்டவை ஏற்பட்டது. இதனையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஒரு சிலர் திடீரென்று மயக்கமடைந்து மரணம் அடைந்தனர்.
அந்த வகையில் திருவொற்றியூரை சேர்ந்த கார்த்திகேயன், பெருங்களத்தூரை சேர்ந்த சீனிவாசன், கொருக்குப்பேட்டையை சேர்ந்த ஜான், கிண்டியைச் சேர்ந்த தினேஷ் குமார் மற்றும் 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் என மொத்தம் ஐந்து பேர் உயிரிழந்தனர். தமிழ்நாடு அரசின் அலட்சியப் போக்கே இந்த மரணத்திற்கு காரணம் என பலரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் வான்படை சாகச நிகழ்வை பார்க்கச் சென்ற போது உயிரிழந்த கார்த்திகேயனின் உடல் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக உட்படுத்தப்பட்டது. உடற்கூறு ஆய்வு முடிவடைந்ததும் இறப்பிற்கான காரணத்தை ( காஸ் ஆப் டெத்) சொல்வதற்காக அவரது உறவினர்களை மருத்துவர்கள் தனியாக அழைத்துள்ளனர்.
அப்போது நிகழ்ச்சி நடந்த அன்று காலையில் கார்த்திகேயன் சாப்பிடாமல் வெறும் வயிற்றில் இருந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து மெரீனா கடற்கரையில் ஜூஸ் வாங்கி குடித்த போது கார்த்திகேயனுக்கு ஏப்பம் ஏற்பட்டு, இதனால் அடைப்பு ஏற்பட்டு மரணம் ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் கூறியதாகவும், அதை வைத்தே கையெழுத்து போட வேண்டும் என சொன்னதாக சொல்லப்படுகிறது.
கடும் வெயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமடைந்த பிறகு கார்த்திகேயன் உயிரிழந்ததாக சொல்லப்படும் நிலையில், மருத்துவர்கள் கூறும் காரணம் ஏற்புடையதாக இல்லை என அவரது உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து உடற்கூறு ஆய்வு அறிக்கையில் கையெழுத்து போட மறுத்த நிலையில் மற்றொரு தூரத்து உறவினரிடம் கையெழுத்து பெற்று கார்த்திகேயனின் மனைவி மற்றும் தாயின் அனுமதியின்றி அமரர் ஊர்தி வாகனத்தில் அவரது உடலை ஏற்றி வீட்டுக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து முதல் தகவல் அறிக்கையில் கார்த்திகேயனின் மனைவி, தாயிடம் கையெழுத்து வாங்கிய நிலையில், உடலை ஒப்படைக்கும் போது மட்டும் தூரத்து உறவினரிடம் கையெழுத்து வாங்கியது ஏன் எனவும் விமான சாகச கண்காட்சியை பார்த்துவிட்டு பைக் பார்க்கிங் சென்ற கார்த்திகேயன் மயக்கமடைந்ததும், தொடர்ந்து சுமார் 2 மணி நேரம் தாமதமாக ஆம்புலன்ஸ் வந்ததால்தான் அவர் மரணமடைந்த நிலையில் ஜூஸால் ஏற்பட்ட ஏப்பத்தில் மரணமடைந்ததாக கூறுவது நம்ப முடியவில்லை எனக் கூறிய உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து உறவினர்கள் உடலை பெற்றுக் கொண்டனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா












Click it and Unblock the Notifications