தமிழகத்தில் இங்கெல்லாம் வெப்பநிலை அதிகமாக இருக்கும்.. இதுதான் காரணம்.. வெதர்மேன் சொன்ன விளக்கம்!
தமிழகத்தில் முக்கியமான சில இடங்களில் இன்று வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் முக்கியமான சில இடங்களில் இன்று வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பநிலை அதிகரித்து வருகிறது. ஆம்பன் புயல் தமிழகத்தை தாக்காமல் மேற்கு வங்கம் நோக்கி சென்றது. இதனால் தமிழகத்திற்கு வெப்ப காற்று வந்தது. இந்த வெப்ப காற்று காரணமாக தமிழகத்தில் வெப்பநிலை அதிகரித்துள்ளது.
முக்கியமாக சென்னையில் நாளுக்கு நாள் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக அங்கு 42 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை நிலவி வருகிறது.

வெதர்மேன் போஸ்ட்
இந்த நிலையில் தமிழகத்தில் முக்கியமான சில இடங்களில் இன்று வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். அதில், கன்னியாகுமரி மற்றும் திருவனந்தபுரத்தில் இன்று காலை நல்ல மழை பெய்தது. ஆனால் தற்போது கொஞ்சம் மழை குறைந்துள்ளது. மேற்கு தமிழ்நாடு உள் மாவட்டங்களில் இடி, மின்னல் இருக்கும். ஆனால் சென்னையில் இன்றும் வெப்பநிலை அதிகமாக இருக்கும்.

சென்னை நிலை
ஆனால் கடந்த 3 நாட்கள் வெப்பநிலை இருந்த அளவிற்கு இன்று சென்னையில் வெப்பநிலை இருக்காது. தமிழகத்தில் வடகடலோர மாவட்டங்கள், அதன் அருகே உள்ள மாவட்டங்களில் வெயில் அதிகமாக இருக்கும். சென்னையிலும் வெப்பநிலை அதிகமாக இருக்கும். சென்னையில் கடலோர பகுதிகளில் கொஞ்சம் வெப்பநிலை குறைவாக இருக்கும். ஆனால் சென்னை ஏர்போர்ட், போரூர், அம்பத்தூர், மதுரவாயல், பூந்தமல்லி ஆகிய பகுதிகளில் வெயில் அதிகமாக இருக்கும்.

அதிக வெப்பம்
இங்கு கடல் காற்று வர தாமதம் ஆகும். இதனால் அங்கு வெப்பநிலை அதிகமாக இருக்கும். அதேபோல் உள் வடமாவட்டங்களில் வெப்பநிலை அதிகமாக இருக்கும். அதன்படி தமிழகத்தில் வேலூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை , திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் வெப்பநிலை அதிகமாக இருக்கும். அதேபோல் பாண்டிச்சேரி, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களிலும் வெப்பநிலை அதிகமாக இருக்கும்.

புயல் கடந்தது
அதே சமயம் ஆம்பன் புயல் கரையை கடந்துள்ள நிலையில் தமிழகத்தில் மேற்கு மாவட்டங்களில் இன்று இடிக்க வாய்ப்புள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். ஆம்பன் புயல் தற்போது மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் இடையே கரையை கடந்தது. 160 கிமீ வேகத்தில் இந்த புயல் கரையை கடந்தது ஆம்பன் புயல் காரணமாக மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் கனமழை பெய்து மோசமாக பாதிக்கப்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications