15 மாவட்டங்களில்.. இன்று பொளந்து கட்ட போகிறது.. எங்கெல்லாம் இன்று மழை பெய்யும்.. வானிலை வார்னிங்
சென்னை: தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 23.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

24.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
25.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
26.09.2023 மதல் 29.09.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஊருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): உதகமண்டலம் (நீலகிரி), பல்லடம் (திருப்பூர்) தலா சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), மணலூர்பேட்டை
(கள்ளக்குறிச்சி), துறையூர் (திருச்சி), வால்பாறை PTO (கோயம்புத்தூர்) தலா 5. புலிப்பட்டி (மதுரை), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), சிவகங்கை, பெரியளைம் AWS (தேனி), நாகுடி (புதுக்கோட்டை), வட்ராப் (விருதுநகர்), சின்கோனா (கோயம்புத்தூர்) தலா 4, தேவாலா (நீலகிரி), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), பாடலூர் (பெரம்பலூர்), எமரலாடு (நீலகிரி), கொடநாடு (நீலகிரி), சோலையார் (கோயம்புத்தூர்), களகிரி (கிருஷ்ணகிரி), அருப்புக்கோட்டை (விருதுநகர்), பார்வூட் (நீலகிரி). சின்னார் அணை (கிருஷ்ணகிரி), சித்தார் (கன்னியாகுமரி), கிண்ணக்கொரை (நீலகிரி), தேவிமங்கலம் (திருச்சி) தலா 3. வைகை அணை (தேனி), விளாத்திளைம் (தூத்துக்குடி), ஓட்டப்பிடாரம் (தூத்துக்டிை),
பாலமோர் (கன்னியாகுமரி), புவனகிரி (கடலூர்), நத்தம் (திண்டுக்கல்), ஏத்தாப்பூர் (சேலம்), பாண்டவையார் (திருவாரூர்), மணம்பூண்டி (விழுப்புரம்), தலைவாசல் (சேலம்), சிங்கம்புணரி (சிவகங்கை), தாளவாடி (ஈரோடு), அவலாஞ்சி (நீலகிரி), கூடலூர் பஜார் (நீலகிரி), ஆனைமடுவு அணை (சேலம்), பெரியார் (தேனி), ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி), கெட்டி (நீலகிரி), மேல் கூடலூர் (நீலகிரி), அறந்தாங்கி (புதுக்கோட்டை),
ஆவுடையார்கோயில் (புதுக்கோட்டை) தலா 2, பெருஞ்சாணி அணை (கன்னியாமைரி), புத்தன் அணை (கண்னியாமைரி), கண்டடம் (திருப்பூர்), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), பஞ்சப்பட்டி (கரூர்). ஆழியார் (திருநெல்வேலி), சிவலோகம் (கன்னியாகுமரி), வீரபாண்டி (தேனி), Rsd-3 அவலூர்பேட்டை (விழுப்புரம்), உப்பர் அணை (திருப்பூர், திண்டுக்கல், சிறுகுடி (திருச்சி), கொடைக்கானல் (திண்டுக்கல்), தென்பரநாடு (திருச்சி), ஓர்த்தநாடு (தஞ்சாவூர்), பெரியகுளம் (தேனி), மருங்காபுரி (திருச்சி), முதுகுளத்தூர் (ராமநாதபுரம்). அதார் எஸ்டேட் (நீலகிரி). வேதநத்தம் (தூத்துக்குடி), வொர்த் எஸ்டேட் சேரிமுள்ளி (நீலகிரி), பவானி (ஈரோடு), விளதுநகர் AWS (விருதுநகர்), ஆத்தூர் (சேலம்), எட்டயபுரம் (தூத்துக்குடி), தேக்கடி (தேனி), வைப்பார் (தூத்துக்குடி), விருதுநகர், நலுமக்கு (திருநெல்வேலி), சிவகாசி (விருதுநகர்), காங்கேயம் (திருப்பூர்), மஞ்சளாறு (தேனி), பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்) தலா 1

மீனவர்களுக்கான எச்சரிக்கை:
வங்கக்கடல் பகுதிகள்: 26.09.2023 மற்றும் 27.09.2023: இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications