சென்னை, திருவள்ளூர் மாவட்ட அரசு பள்ளிகளுக்கு அறிவிப்பு.. பள்ளிக்கல்வித்துறை அதிரடி.. மாணவர்களே ரெடி?
சென்னை: சென்னை மற்றும், திருவள்ளூர் மாவட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு இன்று விடுக்கப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக பள்ளிகளுக்கு அறிவிக்கப்பட்ட விடுமுறை நாட்களை ஈடுசெய்யும் வகையில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் மாதம் முதல் வாரத்தில், வங்க கடலில் உருவான மிக்ஜாம் புயல் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பெருமழையை கொட்டி தீர்த்தது. இதன்காரணமாக, இந்த 4 மாவட்டங்களுமே கடுமையாக பாதிக்கப்பட்டன. இதையொட்டி, இந்த 4 மாவட்டங்களில் செயல்படும் பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
அமைச்சர் அதிரடி: இந்த விடுமுறை நாட்களை ஈடுசெய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அப்போது அறிவித்திருந்தார்.
இதையடுத்து, அரையாண்டு விடுமுறை முடிந்து கடந்த 2ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. மேற்கண்ட அறிவிப்பின்படி சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்துவது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை, தொடக்க கல்வித்துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது.
மாணவர்கள்: ஏற்கனவே, 10, பிளஸ் 2 வகுப்புகளுக்கு மார்ச் மாதம் பொதுத்தேர்வு தொடங்க உள்ள நிலையில், அந்த வகுப்புகளில் படிக்கின்ற மாணவர்கள் விரும்பினால் அவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இப்படிப்பட்ட சூழலில், இந்நிலையில், ஜனவரி மாதம் பொங்கல், குடியரசு தினம் உள்ளிட்ட அரசு விடுமுறை நாட்கள் வருவதையடுத்து, மீதமுள்ள வார நாட்களில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்தவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி, ஜனவரி மாதத்தில் 6ம் தேதி, 20ம் தேதியும், பிப்ரவரி மாதத்தில் 3, 17ம் தேதிகளிலும் பள்ளிகள் செயல்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
மீண்டும் அறிவிப்பு: அதன்படியே, சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளும் இன்று சனிக்கிழமை செயல்படும் என்று பள்ளி கல்வித்துறை மீண்டும் ஒருமுறை அறிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் மற்றும் மழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு பல நாட்கள் விடுமுறை அளிக்கபட்ட நிலையில், அதை ஈடுகட்டவே இன்று பள்ளிகள் செயல்படுகின்றன.












Click it and Unblock the Notifications