தமிழ்நாடு மாடல்! இந்தியாவிலேயே பெண்கள் வேலை செய்ய பாதுகாப்பான நகரம் சென்னை, திருச்சிதான்! செம ஆய்வு
சென்னை: சென்னைதான் இந்தியாவிலேயே பெண்கள் வேலை பார்க்க பாதுகாப்பான நகரம் என்ற ரிப்போர்ட் வெளியாகி உள்ளது.
முதலீடுகள் ரீதியாகவும், பாதுகாப்பு ரீதியாகவும் சென்னை இந்தியாவில் டாப் நகரங்களில் ஒன்றாக இருக்கிறது. ஜிடிபி அடிப்படையில் மும்பைக்கு அடுத்த இடத்தில் சென்னைதான் இருக்கிறது.
அதோடு தொழிற்சாலைகள் முதலீடுகள், தொழிற்புரிய ஏற்ற நகரங்களில் ஒன்றாக சென்னை உள்ளது. கொரோனாவிற்கு பின்பாக 2022ல் தமிழ்நாட்டில் மிக அதிக அளவில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. எப்போதும் முதலீடுகள் செய்வதற்கு ஏற்ற மாநிலம் என்று பாராட்டப்படும் தமிழ்நாடு இந்த வருடமும் முதலீடுகளில் சாதனை படைத்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த Ford நிறுவனம் சென்னையில் இருந்து வெளியேறிய பின்பும் கூட சென்னையில் முதலீடுகள் சுணங்காமல் அதிகரித்துள்ளன.

சென்னை
இந்த நிலையில்தான் சென்னைதான் இந்தியாவிலேயே பெண்கள் வேலை பார்க்க பாதுகாப்பான நகரம் என்ற ரிப்போர்ட் வெளியாகி உள்ளது. Avtar Group என்று நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல்கள் இடம்பெற்று உள்ளன. மொத்தம் இந்தியாவில் இருக்கும் 111 நகரங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டு இருக்கிறது. பெண்களுக்கான பணி சூழல், இரவு நேரங்களில் வேலை பார்ப்பதற்கான பாதுகாப்பு சூழல், அனைத்து விதமான கல்வி கொண்ட பெண்களுக்குமான பணி வாய்ப்புகள், போக்குவரத்து வசதிகள், சமத்துவம் ஆகிய புள்ளிகளை அடிப்படையாக வைத்து இந்த லிஸ்ட் எடுக்கப்பட்டு உள்ளது.

டாப்
அந்த லிஸ்டில் சென்னை முதலிடம் பிடித்து உள்ளது. டாப் பத்து இடங்களில் 3 இடங்களை தமிழ்நாட்டு நகரங்கள் பிடித்து உள்ளது. 9 மற்றும் 10வது இடங்களை முறை கோவை, மதுரை பிடித்து உள்ளது. முதல் 10 இடங்களில் சென்னை, புனே, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, அகமதாபாத், விசாகப்பட்டினம், கொல்கத்தா, கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய நகரங்கள் உள்ளன. இவை எல்லாம் முதல் வகை நகரங்கள் பட்டியல் ஆகும். அதாவது அதிகம் முன்னேறிய நகரங்கள்.

சாதனை
இரண்டாம் கட்ட நகரங்களின் பட்டியலில் டாப் 10 இடங்களில் முதல் 5 இடங்களை தமிழ்நாடு நகரங்கள்தான் பிடித்து உள்ளன. திருச்சி இதில் முதல் இடத்தில் உள்ளது. புதுச்சேரி 6வது இடத்தில் உள்ளது. இரண்டாம் கட்ட நகரங்களின் பட்டியலில் திருச்சி, வேலூர், ஈரோடு, சேலம், திருப்பூர், புதுச்சேரி, சிம்லா, மங்களூர், திருவனந்தபுரம் மற்றும் பெலகாவி ஆகிய நகரங்கள் 10 இடங்களில் உள்ளன. இரண்டு கட்டமான நகரங்களிலும் தமிழ்நாடு நகரங்கள்தான் முதல் இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மொத்தமாக மாநிலம் என்று பார்த்தால் கேரளா 55.67 மதிப்புகளுடன் முதல் இடத்தில் உள்ளது.

தமிழ்நாடு
தமிழ்நாடு 54.4 மதிப்புகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா 45.5. மதிப்புகளுடன் 3ம் இடத்தில் உள்ளது. தமிழ்நாடு நகரங்கள் எல்லாமே மற்ற நகரங்களுடன் ஒப்பிடும் போதுபெண்களுக்கான பணி சூழல், இரவு நேரங்களில் வேலை பார்ப்பதற்கான பாதுகாப்பு சூழல், அனைத்து விதமான கல்வி கொண்ட பெண்களுக்குமான பணி வாய்ப்புகள், போக்குவரத்து வசதிகள், சமத்துவம் ஆகிய புள்ளிகளில் டாப்பில் உள்ளது. இரண்டாவது இடத்தில் இருக்கும் டெல்லிக்கும் சென்னைக்கும் கிட்டத்தட்ட புள்ளிகளில் 30 புள்ளிகள் வேறுபாடு உள்ளது. தமிழ்நாடு பெண்களுக்கு எவ்வளவு பாதுகாப்பான நகரம் என்பதை உணர்த்தும் விதமாக இந்த முடிவுகள் அமைந்து உள்ளன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
சூடம் ஏற்றி.. தீபாராதனை காட்டி.. விஜய்-க்கு சிலை வைத்து கும்பிடும் திருச்சி தொண்டரின் குடும்பம் - வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
2026 தங்கம் வெள்ளி விலை சரியப்போகுது.. இந்த ஜூனில் வெடிக்க போகும் பலூன்? வல்லுநர்கள் கணிப்பு -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
திருச்சியில் பட்டப்பகலில் கொடூரம்.. 17 வயது பெண்ணை காரில் கடத்தி பலாத்காரம்.. போலீஸ் தீவிர வலைவீச்சு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications