கேட்கவே கஷ்டமா இருக்கு.. சென்னை அப்பார்ட்மென்ட்டில் மைதிலியிடம் நெருங்கிய மகளின் காதலன்! அசையாத பெண்
சென்னை: சென்னை முகப்பேர் அப்பார்ட்மென்ட்டில் நடந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை தந்து வருகிறது.. அதேபோல, அண்ணாநகர் ஐஏஎஸ் அகாடமியில் படித்து வரும் மாணவர்களும் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்களாம். என்ன காரணம்?
சென்னை முகப்பேர் கிழக்கு சர்ச் ரோட்டில் அமைந்துள்ளது ஒரு அடுக்குமாடி குடியிருப்பு.. இங்கு மைதிலி என்ற 60 வயது பெண் வசித்து வருகிறார்.. இவர் கருத்து வேறுபாடு காரணமாக தன்னுடைய கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.. மைதிலிக்கு 26 வயதில் ரித்திகா என்ற மகள் இருக்கிறார். இந்த பெண், போரூரில் ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

ஷியாம் (28) என்ற இளைஞரை ரித்திகா காதலித்து வந்துள்ளார்.. இதனால் இருவருமே அடிக்கடி வெளியில் ஊர் சுற்றுவதையே வழக்கமாக வைத்திருந்துள்ளனர்.. இதன்காரணமாக, இரவில் வீட்டுக்கு லேட்டாக வந்துள்ளார் ரித்திகா.
தாய் கண்டிப்பு: இதனால் மகளை மைதிலி கண்டித்தார்.. இரவில் லேட்டாக வீட்டுக்கு வரக்கூடாது, இரவு நேரங்களில் அதிக நேரம் வெளியில் ஊர் சுற்றக்கூடாது என்று அறிவுறுத்தி வந்துள்ளார்.. ஆனால், ரித்திகாவின் நடவடிக்கையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை.. தினந்தோறும் இரவு வீட்டுக்கு லேட்டாகவே வந்து கொண்டிருந்தார். இதனால், மகளை கடிந்து கொண்டார் மைதிலி.,.
எப்போது பார்த்தாலும் தன்னுடைய அம்மா அட்வைஸ் செய்வது, ரித்திகாவுக்கும் பிடிக்கவில்லை. இதனால், தாய்க்கும், மகளுக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு, மனக்கசப்பும் வந்துள்ளது.
ரித்திகா: இந்ந்நிலையில் நேற்றைய தினமும் ரித்திகா, ஷியாமுடன் வெளியில் சென்று, பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்துள்ளார்.. பிறகு, இரவு 9 மணிக்கு வீட்டுக்கு வந்துள்ளார் ரித்திகா.. அப்போது மைதிலி, மீண்டும் ரித்திகாவை சத்தம் போட்டுள்ளார்.. இதனால், தாய்க்கும், மகளுக்கும் கடுமையான வாக்குவாதம் வெடித்தது. ஒருகட்டத்தில் கோபம் அடைந்த ரித்திகா, ஷியாமுக்கு போன் செய்து, தன்னுடைய அம்மா திட்டுவது பற்றி முறையிட்டுள்ளார்.. அத்துன், உடனே கிளம்பி, தன்னுடைய வீட்டுக்கு வருமாறும் அழைத்துள்ளார்.
இதைக்கேட்டதும் ஆத்திரமடைந்த ஷியாம், உடனடியாக காதலியின் அப்பார்ட்மென்ட்டுக்கு வந்து, மைதிலியிடம் தகராறு செய்தார். "நீங்கள் எப்படி அவளை திட்டலாம்" என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.. இதனால் இருவருக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டு அதுவே கைகலப்பாக மாறிவிட்டது.
அசையாத மகள்: ஒருகட்டத்தில் ஷியாம், கீழே தள்ளி விட்டு மைதிலியின் கழுத்தையும் நெரித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மைதிலி, ஷியாமின் பிடியில் இருந்து தப்புவதற்கு முயன்றார். ஆனால் ஷியாம் விடாமல் கழுத்தை நெரித்து கொண்டேயிருந்தார்.. இறுதியில் மைதிலி துடிதுடித்து இறந்துவிட்டார். இவ்வளவையும் மகள் அசையாமல் பார்த்துக் கொண்டே நின்றார்.. பிறகு, அங்கிருந்து ஷியாம் ஓடிவிட்டார்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஜெ.ஜெ.நகர் போலீசார், அப்பார்ட்மென்ட்டுக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.. அத்துடன், தலைமறைவாக இருந்த ஷியாமையும் கைது செய்தனர்.. தற்போது, ஷியாம் மற்றும் ரித்திகாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். ஷியாமை தூண்டிவிட்டது ரித்திகா என்றும், மைதிலியின் கொலையில் ரித்திகாவும் உடந்தையாக இருந்தார் என்பது உறுதியானால், அவரையும் போலீசார் கைது செய்ய வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்.
அதிர்ச்சி: காதலிக்காக மைதிலியின் கழுத்தை நெரித்த ஷியாம், அண்ணா நகரில் உள்ள IAS அகாடமி ஒன்றில் தங்கி இருந்து, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை எழுதுவதற்கு தயாராகி வந்துள்ளார்.. இப்போது ரித்திகாவினால், கொலை வழக்கில் சிக்கி ஜெயிலுக்கு சென்றுள்ளதை கேள்விப்பட்டு, ஐஏஎஸ் அகாடமியில் ஷியாமுடன் படித்து வந்த மாணவர்கள் அதிர்ச்சியில் உள்ளார்களாம்.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்!












Click it and Unblock the Notifications