சட்டசபை தேர்தல் களத்தில் உதயநிதியின் தளபதி.. எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் அண்ணா நகர் தொகுதி!
சென்னை: தலைநகர் சென்னையின் முக்கிய தொகுதியாக இருக்கும் அண்ணா நகர், உதயநிதி ஸ்டாலினின் முன்னணி தளபதியாக விளங்கும் சிற்றரசு களமிறங்குவதால் அதிகம் எதிர்பார்க்கப்படும் தொகுதியாகியுள்ளது. அதிமுக சார்பில் கோகுல இந்திரா, தவெக சார்பில் ராம் குமார், நாதக சார்பில் சங்கர் ஆகியோர் களமிறங்கி உள்ளனர்.
அண்ணா நகர் சட்டசபை தொகுதி, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி 2 முறை வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆன தொகுதி. அவருக்குப் பின், பேராசிரியர் அன்பழகன், ஆற்காடு வீராசாமி ஆகியோர் அங்கு வெற்றி பெற்றுள்ளனர். 2011ல் கோகுல இந்திரா அண்ணா நகர் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். கடந்த 2 சட்டசபை தேர்தல்களிலும் திமுக சார்பில் எம்.கே. மோகன் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆக உள்ளார்.

இந்த முறை, அண்ணா நகர் எம்.எல்.ஏ மோகனின் மகன் கார்த்திக் மோகன் சீட் கேட்டு, தொகுதிக்குள் சுற்றிச் சுழன்று பணியாற்றி வந்தார். கார்த்திக் மோகன், முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனுக்கு நெருக்கமானவர். எனினும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் வலதுகரமாகத் திகழும் சிற்றரசுவுக்கு அண்ணா நகர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
சிற்றரசு, ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட விரும்பிய நிலையில், அங்கு, மருத்துவர் எழிலன் மீண்டும் சீட் பெற்றார். இதையடுத்து, அண்ணா நகரை குறி வைத்தார் சிற்றரசு. அங்கு சிட்டிங் எம்.எல்.ஏவின் மகனான கார்த்திக் மோகன் ஏற்கனவே தீவிரமாக பணியாற்றி வருவதால் தலைமை யோசித்தது. எனினும், உதயநிதியின் கை சறுக்குமா? உதயநிதி ஸ்டாலின் ஆதரவுடன் அண்ணா நகர் வேட்பாளர் ஆனார் சிற்றரசு.
வில்லிவாக்கம் தொகுதியில் தவெக சார்பில் ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் நிலையில், அவரை எதிர்த்து அங்கு களமிறக்கப்பட்டுள்ளார் கார்த்திக் மோகன். கடைசி நேரத்தில் அவர் வில்லிவாக்கம் தொகுதிக்கு மாற்றப்பட்டு, அண்ணா நகர் தொகுதி வேட்பாளராக சிற்றரசு அறிவிக்கப்பட்டார். ஏற்கனவே இரண்டு முறை திமுக கோலோச்சும் அண்ணா நகர் தொகுதியில், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தமிழக துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினுக்கு எல்லாமுமாக இருப்பவர் சிற்றரசு. சென்னை மேற்கு மாவட்டச் செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார் சிற்றரசு. இந்த மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் தான், உதயநிதியின் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி வருகிறது.
ஆரம்பம் முதலே உதயநிதி ஸ்டாலினின் தீவிர ஆதரவாளராக அறியப்பட்ட சிற்றரசு, சென்னை மேற்கு மாவட்டத்தின் இளைஞரணி அமைப்பாளராக இருந்தார். பின்னர் மாவட்ட செயலாளர் ஆனார். சென்னை மேயர் பொறுப்புக்கு உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என சிற்றரசு விருப்ப மனு அளித்தது கட்சியினரின் மத்தியில் அப்போது பெறும் கவனம் பெற்றது.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலிலேயே சிற்றரசு போட்டியிடப்போவதாக கூறப்பட்ட நிலையில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவாக தீவிர களப்பணியில் ஈடுபட்டார். இப்போதும், உதயநிதி ஸ்டாலினின் நிழல் போல சேப்பாக்கம் தொகுதியை வலம் வந்து கொண்டிருக்கிறார் சிற்றரசு.
கடந்த உள்ளாட்சி தேர்தலின்போது, சிற்றரசுவுக்கு சென்னை மாநகராட்சி கவுன்சிலர் சீட் வழங்கப்பட்டபோதே, அவர் துணை மேயர் ஆக்கப்படுவார் என திமுக தரப்பில் பேசப்பட்டது. எனினும், அப்போது அவர் பணிகள் குழு தலைவர் ஆக்கப்பட்டார். இந்நிலையில் தான், அவருக்கு எம்.எல்.ஏ சீட்டை உறுதி செய்து தந்தார் உதயநிதி ஸ்டாலின்.
திமுக சென்னை மேற்கு மாவட்ட செயலாளரும், உதயநிதியின் முன்னணி தளபதிகளுள் ஒருவருமான சிற்றரசு தனது தேர்தல் பரப்புரையை இன்று தொடங்கினார். கடந்த சில நாட்களாக உதயநிதி ஸ்டாலினுடன் சேப்பாக்கம் தொகுதியில் வலம் வந்த சிற்றரசு இன்று முதல் தான் போட்டியிடும் அண்ணா நகர் தொகுதியில் களமிறங்கி உள்ளார்.
முதல் நாள் பிரச்சாரத்தை இன்று தொடங்கினார் சிற்றரசு. மறுபக்கம், அதிமுகவின் கோகுல இந்திரா, தவெக வேட்பாளர் ராம் குமார், நாதக வேட்பாளர் சங்கர் ஆகியோரும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். அண்ணா நகரில் உதயநிதி ஸ்டாலினின் தளபதி சிற்றரசு வாகை சூடுவாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் யார்? வெளியானது உத்தேச பட்டியல்! இன்றிரவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
திருச்சியில் மாஸ்டர் பட வில்லன் பவானி பாணியில் ஸ்கெட்ச்.. திமுக கவுன்சிலர் வழக்கில் ட்விஸ்ட் -
திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் சொத்து பறிமுதல் ரத்து.. அமலாக்கத்துறை வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி! -
வில்லிவாக்கம் தொகுதி திமுக பொறுப்பாளர்கள் கூட்டத்தில், மனைவியுடன் பங்கேற்ற ஸ்டாலின் மருமகன் சபரீசன் -
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அம்போ! ஊதிய உயர்வும் அம்போ! தேர்தல் நேரத்தில் பறந்த கண்டனம்! -
அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ! தினகரன் அதிர்ச்சி -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
திமுக கூட்டணிக்கு 172 முதல் 178 இடங்கள்.. அதிமுக சறுக்கல்.. அப்போ தவெக.. வெளியான பரபர சர்வே! -
அதிமுக கோட்டையில் ஓட்டை போடும் திமுக.. கொங்கு மண்டலத்தில் மாறும் களம்! Poll Tracker கருத்துக்கணிப்பு -
விஜய் கட்சியால் எந்த பாதிப்பும் இல்லை.. திமுகவின் வெற்றி பிரகாசமா இருக்கு.. நேரடியாக சொன்ன சபரீசன்! -
மதுரை தெற்கு தொகுதி.. புதூர் பூமிநாதன் vs ராம ஸ்ரீனிவாசன்.. பலம் என்ன? பலவீனம் என்ன?












Click it and Unblock the Notifications