இபி ஸ்மார்ட் மீட்டரை விடுங்க.. இனி தண்ணீருக்கும் வரும் மீட்டர்.. சென்னையில் அதிரடி முடிவு! முக்கியம்
சென்னை: சென்னை மாநகராட்சி மெட்ரோ குடிநீர் இணைப்பில் புதிதாக ஸ்மார்ட் மீட்டர் பொறுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. தண்ணீர் பயன்படுத்தும் அளவை கணக்கிட ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு துறைகள் டிஜிட்டல் மயமாகி வருகிறது.டாஸ்மாக் தொடங்கி மின்சாரத்துறை வரை எல்லாம் டிஜிட்டல் மயமாகி வருகிறது. உதாரணமாக தமிழ்நாடு முழுக்க விரைவில் ஸ்மார்ட் மீட்டர் விரைவில் பொருத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்ட பின் மாதம் மாதம் மின் கட்டணம் வசூலிக்கப்படும். 2 மாத நடைமுறை கைவிடப்படும்.

தமிழ்நாட்டில் வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணிகள் நடந்து வருகின்றன. தமிழ்நாட்டில் முதலில் சோதனை முயற்சியாக தி நகரில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டது. இந்த திட்டத்தின்படி சுமார் 1.10 லட்சம் வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டது. இந்த சோதனை முயற்சி வெற்றிபெற்றுள்ளது.
இதை அடுத்து சென்னையின் பிற பகுதிகளுக்கு கொண்டு செல்ல முடிவு செய்துள்ளனர். அதன்பின் தமிழ்நாடு முழுக்கவும் நடைமுறை படுத்த முடிவு செய்துள்ளனர். இதற்காக ஸ்மார்ட் மீட்டர் வாங்கும் டெண்டர் பணிகள் நடந்து வருகின்றன. 3 கட்டமாக தமிழ்நாடு முழுக்க ஸ்மார்ட் மீட்டர்களை பொறுத்த முடிவு செய்துள்ளனர்.
ஸ்மார்ட் மீட்டர்கள் பொதுவாக துல்லியமாக மின்சாரத்தை கணக்கிட உதவும். தற்போது மின்சாரத்தை கணக்கிட அதற்காக மின்வாரிய ஊழியர்கள் வீட்டுக்கு நேரில் வந்து அளவீடு செய்வார்கள் . அவர்கள் கொடுக்கும் குறிப்பை வைத்தே மின்சாரம் கணக்கிடப்படும்.
ஆனால் ஸ்மார்ட் மீட்டர் அப்படி அல்ல. ஸ்மார்ட் மீட்டர் வந்துவிட்டால் நாம் பயன்படுத்தும் மின்சாரம் தொடர்பான ரீடிங் நமக்கு காட்டுவது மட்டுமின்றி மின்சார துறை அலுவலகத்திற்கும் காட்டும். ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கு இது துல்லியமாக அப்டேட் செய்யப்படும். இதனால் மின்சார ஊழியர்கள் வீட்டிற்கு வராமலே அளவு எடுக்க முடியும்.
மேலும் யூனிட் விவரங்கள் மிக மிக துல்லியமாக இருக்கும். இதனால் மின்சாரத்தை துல்லியமாக கணக்கிட்டு, மக்களுக்கு துல்லியமாக கட்டணம் நிர்ணயம் செய்ய 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்தை தமிழ்நாடு அரசு கொண்டு வர உள்ளது. தி நகரில் நிறைவேற்றப்பட்ட திட்டம் தமிழ்நாடு முழுக்க அடுத்து கொண்டு வரப்பட உள்ளது.
ஸ்மார்ட் மீட்டர்: இந்த நிலையில்தான் சென்னை மாநகராட்சி மெட்ரோ குடிநீர் இணைப்பில் புதிதாக ஸ்மார்ட் மீட்டர் பொறுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. தண்ணீர் பயன்படுத்தும் அளவை கணக்கிட ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட உள்ளது.

அதன்படிஇந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து அடுக்குமாடி கட்டிடங்களிலும் தண்ணீர் மீட்டர்களை நிறுவ மெட்ரோ வாட்டர் திட்டமிட்டுள்ளது. அதன்படி அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் தங்கள் நுகர்வு அடிப்படையில் விரைவில் தண்ணீருக்கு பணம் செலுத்துவார்கள்.
தற்போது மக்கள் மீட்டர் இல்லாத தண்ணீருக்கு மாதம் ரூ.84 கட்டணமாக செலுத்தி வருகின்றனர். எவ்வளவு தண்ணீர் பயன்படுத்தினாலும் இதுவே கட்டணமாக இருந்து வந்தது. அதேபோல் கடைகளில் மீட்டர் பொருத்தப்பட்டு உள்ளது. தற்போது 24,000 மீட்டர்கள் வணிக நிறுவனங்களில் பொருத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் கட்டணம் வசூல் சரி செய்யப்பட்டு 2021-22ல் ₹57 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
இனி வரும் நாட்களில் குடியிருப்பு கட்டிடங்களிலும் இதேபோல் மீட்டர்கள் பொருத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
-
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications