Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலை! "தமிழகத்தில் தான் பணிகள் தாமதம்.." கட்கரி மேஜர் தகவல்! எப்போது முடியும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை- பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலையில் தமிழகத்தில் சில முக்கியப் பகுதிகள், குறிப்பாக ஸ்ரீபெரும்புதூர் அருகே அமைக்கப்படும் ட்ரம்பெட் இன்டர்சேஞ்ச் கட்டுமானப் பணிகள் பல்வேறு காரணங்களால் தாமதமாகி வருகின்றன. திடீர் மழை, நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல்கள் மற்றும் வடிவமைப்பு மாற்றங்கள் ஆகியவை தாமதத்திற்கான காரணங்களாகக் கூறப்படுகின்றன.

தென்னிந்தியாவின் இரு முக்கிய நகரங்களான சென்னை மற்றும் பெங்களூர் நகரங்களை இணைக்கும் வகையில் புதிய எக்ஸ்பிரஸ் சாலையை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான கட்டுமானத்தைப் பிரதமர் மோடி கடந்த 2022ம் ஆண்டு தொடங்கி வைத்தார். 2023ம் ஆண்டு இறுதியிலேயே இந்தப் பணிகளை முடிக்கத் திட்டமிடப்பட்டது.

Chennai Bangalore Expressway Faces Hurdles in Tamil Nadu Says Minister Nitin Gadkari

சென்னை பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலை

இருப்பினும், பல்வேறு காரணங்களால் கட்டுமான பணிகள் தொடர்ந்து தாமதம் ஆகி வருகிறது. இதற்கிடையே நடந்து வரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் இது தொடர்பாக திமுக ராஜ்ய சபா எம்பி பி.வில்சன் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்குப் பதிலளித்த மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, குடியாலா முதல் ஸ்ரீபெரும்புதூர் வரையிலான எக்ஸ்பிரஸ் சாலையின் மூன்றாம் கட்டப் பணிகள் தாமதமாக நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.

குடியாலா - வாலாஜாபேட்டை

குறிப்பாக, குடியாலா முதல் வாலாஜாபேட்டை வரையிலான முதல் பேக்கேஜ் கடந்தாண்டு மே மாதமே முடிந்திருக்க வேண்டும். ஆனால், இப்போது வரை அது முடியவில்லை. தற்போது 86.22% மட்டுமே கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளது. இந்தப் பணிகள் வரும் அக்டோபர் மாதம் தான் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ச்சியான மழை, ரயில்வே பாதைகளுக்கு மேல் அமைக்கப்படும் மேம்பாலங்களுக்கான அனுமதி கிடைப்பதில் தாமதம் காரணங்களாகச் சொல்லப்படுகிறது. மேலும், தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் மற்றும் உச்ச நீதிமன்றக் கட்டுப்பாடுகள் காரணமாகக் கடன் பெறும் பகுதியில் ஏற்பட்ட தடைகளும் கட்டுமான பணிகளைத் தாமதப்படுத்தியதாகக் கூறப்படுகின்றன.

அரக்கோணம் - காஞ்சிபுரம்

அரக்கோணம் முதல் காஞ்சிபுரம் வரையிலான இரண்டாம் பேக்கேஜ் நிலைமை தான் மோசமான நிலையில் உள்ளன. அந்தப் பகுதியில் இதுவரை 53.56% பணிகள் மட்டுமே முடிந்துள்ளன. கூடுதல் உயர் அழுத்த மின்சாரக் கம்பிகளை மாற்றுவதில் ஏற்பட்ட நிலம் மற்றும் பயிர்ச் சேதத்திற்கான இழப்பீடு பிரச்சினைகள் மற்றும் ஒப்பந்ததாரர் எதிர்கொள்ளும் நிதி நெருக்கடி இந்தத் தாமதத்திற்கான காரணமாகச் சொல்லப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் 2026 மார்ச் மாதம் தான் பணிகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காஞ்சிபுரம்- ஸ்ரீபெரும்புதூர்

காஞ்சிபுரம் முதல் ஸ்ரீபெரும்புதூர் வரையிலான கடைசி பேக்கேஜ் (Package IV) ஓரளவுக்கு பரவாயில்லை எனச் சொல்லலாம். இந்தப் பகுதியில் 78.11% நிறைவடைந்துள்ளன. ஆனால் தொடர்ச்சியான மழை, அங்குள்ள பொருட்களை இடம் மாற்றுவதில் ஏற்படும் தாமதம், கடன் பெறுவதில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக இப்பணிகளும் தாமதமாகி வருகின்றன. இந்தாண்டு டிசம்பர் மாதம் தான் பணிகள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ட்ரம்பெட் இன்டர்சேஞ்ச்

அதேபோல ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி அருகே NH-48 உடன் எக்ஸ்பிரஸ் சாலையை இணைக்கும் ட்ரம்பெட் இன்டர்சேஞ்ச் திட்டமும் தாமதமாகி வருகிறது.. இந்தப் பணிகளை அடுத்த மாதம், அதாவது ஆகஸ்டில் முடிப்பதே ஒரிஜினல் திட்டம். ஆனால், இப்போது வரை வெறும் 18.82% மட்டுமே கட்டுமானம் முடிவடைந்துள்ளது. அடித்தளத்தில் வடிவமைப்பு மாற்றங்கள் மற்றும் இந்தியன் ஆயில் குழாய் இடமாற்றம் செய்யப்பட வேண்டியிருப்பதால் இந்தத் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்தப் பகுதியில் எவ்வளவு?

குடிபாலா முதல் வாலாஜாபேட்டை- 86.22%

அரக்கோணம் முதல் காஞ்சிபுரம் வரை - 53.56%

காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் - 78.11%

ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி அருகே அமையும் டிரம்பெட் இன்டர்சேஞ்ச் - 18.82%

262 கி.மீ தூரம் கொண்ட இந்த எக்ஸ்பிரஸ் சாலை பயன்பாட்டிற்கு வரும் போது இது சென்னை பெங்களூர் பயண நேரத்தைக் கணிசமாகக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+