தென்னிந்தியாவை புரட்டிப் போடும் சென்னை பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலை.. திடீரென வந்த புது பிரச்சனை! ஷாக்
சென்னை: தென்னிந்தியாவில் இப்போது எதிர்பார்க்கும் மிக முக்கியமான சாலை திட்டமாகச் சென்னை பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலை திட்டம் இருக்கிறது. இதற்கான கட்டுமானம் எதிர்பார்த்த அளவுக்கு வேகமாக நடக்கவில்லை. இதனால் திட்டமிட்டபடி அடுத்தாண்டு ஜூன் மாதத்திற்குள் கட்டுமானம் முடிவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தென்னிந்தியாவின் இரு முக்கிய நகரங்களாகச் சென்னை மற்றும் பெங்களூர் இருக்கிறது.. இந்த இரு முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் முக்கிய எக்ஸ்பிரஸ் சாலை திட்டம் உருவாக்கப்பட்டது.

பெங்களூர் புறநகரில் உள்ள ஹோஸ்கோட்டில் தொடங்கும் இந்த எக்ஸ்பிரஸ் சாலை மாலூர், பங்கார்பேட்டை, கேஜிஎஃப், பலமனேர், சித்தூர், ராணிப்பேட்டை வழியாக ஸ்ரீபெரும்புதூரில் நிறைவடைகிறது.
சென்னை- பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலை: இந்த சாலை திறக்கப்பட்டால் சென்னை- பெங்களூர் இடையேயான பயண தூரம் 2.5 மணி நேரமாகக் குறையும். இந்த சாலை தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா என மூன்று மாநிலங்கள் வழியாகச் செல்கிறது. சென்னை பெங்களூர் இடையே மொத்தம் 262 கிமீ ஆகும்.. தமிழ்நாட்டில் 85 கிமீ செல்லும் இந்த சாலை, ஆந்திராவில் 71 கிலோமீட்டரும் கர்நாடகாவில் 106 கிலோமீட்டரும் இருக்கிறது.
தென்மாநிலங்களில் கேம் சேஞ்சராக இருக்கும் இந்த சாலை கட்டி முடிக்கப்பட்டால் அது மொத்தமாகப் புரட்டிப் போடுவதாக இருக்கும். இந்த எக்ஸ்பிரஸ் சாலை கட்டுமானம் எந்தளவுக்கு இருக்கிறது.. இந்த சாலை கட்டுமானத்திற்கு எவ்வளவு செலவாகியுள்ளது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
10 தொகுப்புகள்: தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் செல்லும் இந்த சென்னை பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலை கட்டுமானம் எதிர்பார்த்த அளவுக்கு வேகமாக நடக்கவில்லை. இந்த சாலை 10 தொகுப்புகளாகப் பிரித்து பணிகள் நடந்து வருகிறது. இதில் பகுதிகளில் கட்டுமானம் 50% கீழ் தான் முடிந்துள்ளது. இதனால் திட்டமிட்டபடி அடுத்தாண்டு ஜூன் மாதத்திற்குள் திட்டம் முடிவடையுமா என்பதில் சந்தேகமே நிலவி வருகிறது.
எத்தனை சதவிகிதம்: இதில் கர்நாடகாவின் பெங்களூர்- மாலூர் வரையிலான பகுதியில் கட்டுமானம் சிறப்பாக நடந்தது. இந்த பகுதியில் சுமார் 85 சதவீத கட்டுமானம் முடிந்துவிட்டது. இந்த பகுதிக்கு மட்டும் ரூ.2,761 கோடி செலவாகிறது. அடுத்து கர்நாடகாவின் மாலூர்- பங்காரப்பேட்டை வரையிலான பகுதியில் சுமார் 82% கட்டுமானம் முடிந்துள்ளது. இதற்கு சுமார் ரூ.1,496 கோடி செலவாகிறது. அடுத்து பங்காரப்பேட்டை -பேத்தமங்களா வரையிலான பகுதியில் 1,047 கோடி ரூபாய் செலவில் சுமார் 80% கட்டுமானம் முடிந்துள்ளது.
இந்த மூன்று தொகுப்புகளில் கட்டுமானம் மிகச் சிறப்பாகவே இருக்கிறது. ஆனால், அதன் பிறகு வரும் மற்ற பகுதிகளில் தான் கட்டுமானம் பெரியளவில் இல்லை. கர்நாடகாவின் பெத்தமங்களா முதல் ஆந்திராவின் பைரெட்டிபள்ளே வரை ரூ.1,306 கோடி செலவில் 42 சதவீத கட்டுமானம் நிறைவடைந்துள்ளது.
தமிழ்நாடு: ஆந்திராவின் பைரெட்டிபள்ளே பங்காரிம்பாளையம் இடையே பகுதியில் 15 சதவீதம் மட்டுமே கட்டுமானம் முடிந்துள்ளது. இந்த பகுதிக்கு மொத்த ஆகும் செலவு ரூ.2,171 கோடியாகும். ஆந்திராவின் பங்காரிம்பாளையம்- குடுபாலா இடையேயான பகுதிக்கு ரூ.1,288 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த பகுதியில் 48 சதவீதம் கட்டுமானம் முடிந்துள்ளது.
ஆந்திராவின் குடுபாலா முதல் தமிழகத்தில் வாலாஜாபேட்டை வரையிலான பகுதிக்கு ரூ.1,028 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு 48 சதவீதம் கட்டுமானம் முடிந்துள்ளது. அதேபோல வாலாஜாபேட்டை-அரக்கோணம் இடையே 55% (மதிப்பீடு ரூ.843 கோடி), அரக்கோணம்- காஞ்சிபுரம் இடையே 42% (மதிப்பீடு ரூ.1,155 கோடி), காஞ்சிபுரம்- ஸ்ரீபெரும்புதூர் இடையே 47% (மதிப்பீடு ரூ.2,948 கோடி) மட்டுமே கட்டுமானம் நிறைவடைந்துள்ளது.
கர்நாடகாவில் மட்டுமே கட்டுமானம் வேகமாக நடந்து வருகிறது. அதேநேரம் தமிழ்நாடு, ஆந்திராவில் எதிர்பார்த்த அளவுக்குக் கட்டுமானம் வேகமெடுக்கவில்லை. இதன் காரணமாகவே கட்டுமானம் திட்டமிட்டபடி முடியாது எனக் கூறப்படுகிறது.
-
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications