சென்னை வேண்டவே வேண்டாம்.. பெங்களூருவுக்கு செல்லும் பிரபல நிறுவனம்.. சிஇஓ அறிவிப்பு
சென்னை: சென்னையை தலைமையிடமாக கொண்டு ஃபிரகாரியா (Fragaria) என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் சென்னை வேண்டாம் என்று தனது தலைமை அலுவலகத்தை பெங்களூருவுக்கு கொண்டு செல்ல உள்ளது. இதற்கான அறிவிப்பை நிறுவனத்தின் நிறுவனர் ஹர்ஷ் வரதராஜன் அறிவித்துள்ள நிலையில் அதன் பின்னணி பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையை தலைமையிடமாக கொண்டு Fragaria என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் விவசாய பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது. குறிப்பாக ஸ்டாபெர்ரி விவசாயத்தில் அதிக கவனம் செலுத்தி தொழில் செய்து வருகிறது.

ஸ்டாபெர்ரி செடிகள் வெப்ப பகுதிகளை விட குளிர் பிரதேசங்களில் நன்கு செழித்து வளர்ந்து அதிக மகசூலை தரும். ஆனால் இந்த நிறுவனத்தை தமிழ்நாட்டை சேர்ந்த ஹர்ஷ் வரதராஜன் தொடங்கினார். இதனால் சென்னையை தலைமையிடமாக கொண்டு நிறுவனத்தை தொடங்கினார்.
இந்நிலையில் தான் ஃபிரகாரியா நிறுவனம் தனது தலைமை அலுவலகத்தை சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு மாற்றம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ஃபிரகாரியா நிறுவனத்தின் நிறுவனர் ஹர்ஷ் வரதராஜன் தனது லிங்க்ட்இன் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ‛‛ஃபிரகாரியா பெங்களூரை நோக்கி நகர்கிறது. ஒரு தமிழ் பையனாக தமிழ்நாட்டில் இருந்து உலகளாவிய தயாரிப்பை உருவாக்க வேண்டும் என்று கனவு கண்டேன். இதற்கானக சென்னையில் அனைத்து பணிகளையும் செய்தோம்.
அனைத்து சவால்களையும் மீறி பிரிமீயம் ஸ்ட்ராபெரிகளை இங்கு வளர்க்க முடியும் என்று நிரூபித்தோம். ஆனால் காலநிலை, சந்தையை அணுகுதல், விவசாயத்துக்கு ஆதரவான சட்டம், வெளிநாட்டினர் வாழக்கூடிய தன்மை, ஸ்டார்ட்அப் வேகமாக வளரும் சூழல் உள்ளிட்டவை பெங்களூருவுக்கு நகர்வதை தவிர்க்க முடியாததாக்கி உள்ளது.
இருப்பினும் சென்னை எப்போதும் எங்கள் முதல் தாயகமாக இருக்கும். எங்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பண்ணை சென்னையில் தொடரும். எதிர்காலத்திலும் பண்ணைகளை தமிழ்நாட்டுக்கு கொண்டு வருவதற்கான காரணங்கள் கிடைக்கும் என்று நம்புகிறேன்'' என்று கூறியுள்ளார்.
-
தமிழ்நாடு சைடில் நிலம் கிடைப்பதில் சிக்கல்.. பெங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ்வே திட்டம் தாமதம்.. போச்சு -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்!












Click it and Unblock the Notifications