உஸ் அப்பாடி! இனி கிளாம்பாக்கம் செல்வது ரொம்ப சிம்பிள்! நோ காம்ப்ளிகேஷன்! செம அப்டேட்!
சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னை கடற்கரை- தாம்பரம் வரை இயக்கப்பட்டு வரும் மின்சார ரயில்கள் இன்று முதல் இரவு நேரங்களில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை கோயம்பேட்டிலிருந்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் என்னதான் பிரம்மாண்டமாக இருந்தாலும் மற்ற பகுதிகளில் இருந்து செல்வதற்கு பொது போக்குவரத்து இணைப்புகள் இல்லை என்பது பயணிகளின் குறையாகவே இருந்து வருகிறது.

இதனால் சென்னையின் நடுபகுதியில் பேருந்து நிலையம் அமைத்தால் அனைத்து தரப்பினருக்கும் வசதியாக இருந்திருக்கும் என்றெல்லாம் ஆரம்பத்தில் ஆட்சேபனைகள் எழுந்தன. இந்த நிலையில்தான் கடந்த ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: இதையடுத்து தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, மதுரை, தூத்துக்குடி, நெல்லை, திருவண்ணாமலை, திருச்சி, செங்கோட்டை, விழுப்புரம், தஞ்சை உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையத்தின் மதிப்பு ரூ 400 கோடியாகும். பேருந்து நிலையத்திற்கு எளிதாக வந்து செல்ல வசதியாக வண்டலூர் அருகே புதிய ரயில் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு கட்டுமான பணிகளும் தொடங்கப்பட்டன.
அது போல் மெட்ரோவை கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் தொடர்பாக தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா நேற்று முன் தினம் செய்தியாளர்களை சந்தித்தார்.
கட்டுமான பணிகள் : அவர் பேசுகையில் கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தை பொருத்தவரை அதன் கட்டுமான பணிகள் வேகமாகவே நடந்து வருகிறது. அங்கு அடுத்த மாதங்களில் ரயில் நிலையம் கட்டி முடிக்கப்பட்டு பயணிகளின் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்றார்.
இந்த நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு செல்லும் பயணிகளின் சிரமத்தை குறைக்கும் வகையில் அவர்களுக்கு பொது போக்குவரத்து இணைப்பை அதிகரிக்கும் வகையில் சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் வரை செல்லும் 5 மின்சார ரயில்கள் திங்கள்கிழமை முதல் கூடுவாஞ்சேரி வரை நீட்டிக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கடற்கரை: இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை கடற்கரையில் இருந்து இன்று முதல் இரவு 7.19, 8.15, 8.45, 8.55, 9.40 ஆகிய நேரங்களில் புறப்படும் தாம்பரம் வரை செல்லும் மின்சார ரயில்கள் கூடுவாஞ்சேரி வரை இயக்கப்படும். மறுமார்க்கமாக, இந்த ரயில்கள் கூடுவாஞ்சேரியில் இருந்து இரவு 8.55, 9.45, 10.10, 10.25, 11.20 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வந்தடையும்.
சென்னை கடற்கரை- கூடுவாஞ்சேரி: மார்ச் முதல் ஞாயிற்றுக்கிழமை தோறும் சென்னை கடற்கரையில் இருந்து இரவு 7.20, 8.20, 8.40, 9.00, 9.50 ஆகிய நேரங்களில் புறப்படும் தாம்பரம் செல்லும் மின்சார ரயில்கள் கூடுவாஞ்சேரி வரை இயக்கப்படும். மறுமார்க்கமாக, இந்த ரெயில்கள் கூடுவாஞ்சேரியில் இருந்து இரவு 8.55, 9.50, 10.10, 10.35, 11.20 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வந்தடையும். இவ்வாறு ரயில்வே கூறப்பட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications