இரவு நேரம் பைக் டாக்சி சில்மிஷம்.. சென்னையில் அக்கப்போரு.. இது வேறயா? நம்பவே முடியல.. வீடியோ அலர்ட்
சென்னை: சென்னையில் பைக் டாக்ஸி ஓட்டும் இளைஞர்களை குறி வைத்து மோசடி நடப்பதாக பகீர் புகார் கிளம்பியிருக்கிறது. இது தொடர்பான வீடியோ ஒன்றும் இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை தந்துவருகிறது.
ஒருவர் மட்டுமே பயணிக்க வசதியாக பைக் டாக்சிகள் பல்வேறு நகரங்களில் இயங்கி வருகின்றன.. இதனால், எளிதாகவும், விரைவாகவும், பயணிக்க முடிகிறது. நினைத்த நேரத்தில், நினைத்த இடத்துக்கு பயணிகளால் பைக் டாக்ஸி மூலம் செல்ல முடிகிறது.

பைக் டாக்சி: ஆனால்,அதேசமயம், பைக் டாக்சிகள் பெண்களுக்கு பாதுகாப்பானதாக இல்லை என்ற புகார்கள் வெடித்தன.. பாலியல் சீண்டல்கள் இந்த பைக் டாக்சிகள் மூலமாக நடப்பதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. எனவே, இதற்காகவே ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் பைக் டாக்சிகள் பெரிய அளவில் மக்களுக்கு உதவவில்லை என்று கூறவும், கர்நாடகாவில் பைக் டாக்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுவிட்டது.
எனினும், பைக் டாக்ஸிக்கு அனுமதியே இல்லாத நிலையில் அதில் 2 பேரை ஏற்றிச்செல்வதாகவும், பெர்மிட்டே இல்லாமல் இப்படியொரு காரியத்தில் ஈடுபட்டு வருவதாகவும் அடுத்தடுத்த புகார்கள் வந்தவண்ணம் உள்ளன.
யோகேஸ்வரன்: சென்னையில்கூட யோகேஸ்வரன் என்ற டிரைவர் சிக்கினார். திருமணமான யோகேஸ்வரன் ஒரு டிவி சேனலில் வேலை பார்த்து வந்திருக்கிறார். இவரது நடவடிக்கை சரியில்லாமல், வேலையை விட்டு துரத்திவிட்டார்கள். இதற்கு பிறகு பைக் டாக்ஸி ஓட்ட ஆரம்பித்துள்ளார். இரவில் பைக்டாக்சி ஓட்டினால் போனஸ் அதிகமாக கிடைக்கும், சாலையும் வெறிச்சோடி இருக்கும் என்பதால் அவர் இரவு நேரத்தில் பைக் டாக்சி ஓட்டி வந்தார்.
அப்போது, இரவில் பணி முடிந்து வீட்டுக்கு செல்லும் இளம்பெண்களை பைக் டாக்சியில் இவர் ஏற்றி செல்லும்போது, அவர்களை தொட்டு சில்மிஷத்திலும் ஈடுபட்டு வந்துள்ளார்... இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் அவர் 50-க்கும் மேற்பட்ட இளம்பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தரும்போதுதான், போலீசில் சிக்கினார் யோகேஸ்வரன்.
இப்படி, ஒருசில பைக் டாக்ஸி ஓட்டுநர்களால் பாலியல் குற்றங்கள் பெருகி வந்தநிலையில், பைக் டாக்சி டிரைவர்களே, பல்வேறு மோசடிகளுக்கு ஆளாகியிருப்பதாக இதோ சென்னையில் நடந்த கொடுமையை பாருங்கள்.
வார்னிங்: இளைஞர் ஒருவர் வீடியோ வெளியிட்டு எச்சரிக்கையும் விடுத்திருக்கிறார். இந்த மோசடி பெரும்பாலும் இரவு நேரங்களில் நடைபெறுவதாக கூறி அந்த இளைஞர், மக்களுக்கு அலர்ட் விடுத்திருக்கிறார்.
அந்த வீடியோவில்,''எல்லோருக்கும் ஒரு முக்கியமான விஷயம். ஒரு பெரிய ஸ்கேம் நடந்திருக்கிறது. ஏதோ ஒரு லொகேஷனுக்கு வண்டியை புக் பண்ணிட்டு அங்கு சென்றதுமே, என்னுடைய சிஸ்டர் வராங்க.. அவர்களை இந்த இடத்தில் ட்ராப் பண்ணனும் என்று சொல்லிவிட்டு, அந்த இடத்திற்கு போவதற்கு முன்னாடி நான் ஜி-பேயில் உங்களுக்கு 3000 ரூபாய் அனுப்பி வைக்கிறேன்.
ஜி-பே: அவர்களிடம் ஜி-பே கிடையாது, கார்டும் கிடையாது. நீங்க அவங்கள அங்க இறக்கி விட்டுட்டு ஏடிஎம்ல காசு எடுத்து கொடுத்துடுங்க என்று கேட்கிறார்கள். சரி என்று நாம் சொன்னவுடனே நம்மிடம் போலியாக கிரெடிட் ஆன மாதிரி ஒரு மெசேஜை காட்டிவிட்டு, உடனே என்னுடைய சிஸ்டர் இப்பொழுது வரவில்லை எனவே நான் கொடுத்த காசை ரிட்டன் ஜி-பே பண்ணிடுங்க என சொல்கிறார்கள்.
இதில் விவரம் தெரியாத பலர் உடனே சம்பாதித்து வைத்த காசில் 3,000 ரூபாயை அவர்களுக்கு அனுப்பி விடுகிறார்கள். இதேபோல தான் இன்று எனக்கும் நடந்தது. நானும் ரேபிட்டோ தான் ஓட்றேன். இந்த மாதிரி ஒருவர் சொல்லும் பொழுது எனக்கு ரொம்ப டவுட்டா இருந்தது. இதுகுறித்து என் கூட என்னை போலவே ரேபிட்டோ ஓட்டும் சக ஓட்டுநரிடம் கேட்டேன். அவரும் எனக்கும் இதேபோல் நடந்தது என்று தெரிவித்தார்.
ரேபிட்டோ: உங்களுக்கும் இதுபோல் நடந்திருந்தால் கண்டிப்பாக இந்த வீடியோவை ஷேர் செய்யுங்கள். உங்கள் சர்க்களில் யாராவது ரேபிட்டோ ஓட்டுபவர்கள் இருந்தால் அவர்களுக்கு இதை தெரியப்படுத்துங்கள். அவர்களும் ஜாக்கிரதையாக இருக்கட்டும்'' என தெரிவித்துள்ளார். இந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை தந்துவரும் நிலையில் இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications