பாஜக வெற்றிக்கு ஸ்வீட் கொடுக்க வந்த கவுன்சிலர் உமா ஆனந்தன்.. திகைக்க வைத்த திமுக கவுன்சிலர்கள்
சென்னை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் சென்னை மாநகராட்சி பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன். சென்னை மாநகராட்சி அலுவகத்தில் இன்று காலை அனைத்து கவுன்சிலர்கள் மற்றும் பணியாளர்களுககு இனிப்பு வழங்கினார். அப்போது திமுக கவுன்சிலர்கள் உதயநிதி பிறந்தநாளுக்கானது என்று கூறி, மாறி மாறி இனிப்பு ஊட்டி மகிழ்ந்தனர். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 50 ஆண்டுகளில் இல்லாத ஒரு வெற்றியை பாஜக கூட்டணி பெற்றுள்ளது. பாஜக மட்டுமே தனித்து 132 இடங்களில் வென்றுள்ளது. பாஜக கூட்டணியில் உள்ள சிவசேனாவின் ஷிண்டே கட்சி 57 இடங்களிலும், அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களிலும் வென்றுள்ளன.

காங்கிரஸ் கூட்டணியை பொறுத்தவரை, காங்கிரஸ் கட்சி வெறும் 16 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சி 20 இடங்களிலும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி 10 இடங்களிலும் மட்டுமே வென்றுள்ளது. எஸ்பி கட்சி இரண்டு இடங்களிலும், இதர கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் என 10 பேர் வென்றுள்ளனர்.
பாஜக இந்த வெற்றியின் மூலம் ஆட்சியமைக்கப்போவது உறுதியாகி உள்ளது. தேவேந்திரபட்னாவிஸ் முதல்வராகப்போவதும் கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக பாஜக மேலிடம் இன்னமும் அறிவிக்கவில்லை என்றாலும், எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கலாம் என்கிற நிலையே இருக்கிறது. டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர்களுடன் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனிடையே மகாராஷ்டிராவில் பாஜகவின் இந்த வெற்றியை நாடு முழுவதும் உள்ள பாஜக நிர்வாகிகள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்கிறார்கள். தங்களது நண்பர்கள், உறவினர்கள், கட்சி நிர்வாகிகள் என பலருக்கும் இனிப்பு வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். இதேபோல் மகாராஷ்டிராவில் பாஜகவின் வெற்றியை கொண்டாடும் வகையில் பாஜக கவுன்சிலர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் பலர். சக கவுன்சிலர்கள், எம்எல்ஏக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்து வருகிறார்கள்.
அந்த வகையில் சென்னை மாநகராட்சி பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் இன்று ரிப்பன் மாளிக்கைக்கு வந்தார். அங்கு சக கவுன்சிலர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்களுக்கு இனிப்பு வழங்கினார். மகாராஷ்டிராவில் பாஜக பெற்ற வெற்றியை கொண்டாடும் விதமாக இனிப்பு வழங்குவதாக அப்போது உமா ஆனந்தன் தெரிவித்தார். அப்போது திமுக கவுன்சிலர்கள், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளுக்கான ஸ்வீட்டாக இதனை கருதுகிறோம் என்று கூறினார்கள். இப்படி இரு தரப்பினரும் மாறி மாறி இனிப்புளை ஊட்டி மகிழ்ந்தனர். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.
-
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம்












Click it and Unblock the Notifications