Chennai Broadway: பிராட்வே பஸ் ஸ்டான்ட் இன்று முதல் இடமாற்றம்! பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்?
சென்னை: சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் மறுசீரமைப்பு மற்றும் உள்கட்டமைப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் இன்று முதல் அங்கிருந்து பேருந்துகள் இயங்காது, அதற்கு பதிலாக தீவுத்திடல், ராயபுரம் பேருந்து நிலையங்களிலே இருந்து பேருந்துகள் இயங்கும் என மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மாநகர் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
பிராட்வே பேருந்து முனையம் மறுசீரமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு பணிகள் நடைபெற இருப்பதால், இன்று முதல் பிராட்வே பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்ட பேருந்துகள் இராயபுரம் மற்றும் தீவுத்திடலில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருக்கும் பேருந்து முனையத்திலிருந்து இயக்கப்படும். இராயபுரம் பேருந்து முனையத்திலிருந்து இயக்கப்படும் தடங்களின் விவரம் பின்வருமாறு: 11, 21, 26, 52, 54, 60, 10E, 11G, 11M, 155A, 17E, 17K, 188C, 188ET, 18A, 18A CUT, 18B, 18D, 18E, 18K, 18P, 18R, 18RX, 18X, 21C, 26B, 26G, 26K, 26M, 26R, 51D, 51J, 52B, 52G, 52K, 54G, 54L, 5C, 60A, 60D, 60G, 60H, 88C, 88K, 88K ET, 9M ET, A51, D51 ET, E18, E51, M51R.
ஈ.வெ.ரா சாலை வழியாக இயக்கப்படும் வழித்தடங்கள்: 101CT, 101X, 53E, 53P, 71D, 71E, 71H, 71V, 120, 120CT, 120F, 120G, 120K, 150.
அண்ணாசாலை
அண்ணாசாலை மற்றும் ஈவெரா சாலை வழியாக இயக்கப்படும் பேருந்துகள் தத்தம் புறப்படும் இடத்திலிருந்து இராயபுரம் நோக்கி செல்லும் போது ஏற்கனவே அமைந்துள்ள Nurse Quarters பேருந்து நிறுத்தத்திலும், North Fort சாலையில் அமைந்துள்ள உயர்நீதி மன்றம் பேருந்து நிறுத்ததிலும் நின்று பயணிகளை இறக்கி, இராஜாஜி சாலை வழியாக ராயபுரம் தற்காலிக பேருந்து முனையம் செல்லும்.
ராயபுரம் பேருந்து நிலையம்
ராயபுரம் தற்காலிக பேருந்து முனையத்திலிருந்து ஈ.வே.ரா சாலை மற்றும் அண்ணாசாலை வழியாக இயக்கப்படும் பேருந்துகள் பாரிஸ் கார்னர் சிக்னல், North Fort சாலையில் ஏற்கனவே அமைந்துள்ள உயர்நீதி மன்றம் பேருந்து நிறுத்தத்தில் நின்று பயணிகளை ஏற்றி அதன் அடிப்படை வழித்தடத்தில் இயக்கப்படும்.
தீவுத்திடல் பேருந்து
தீவுத்திடல் பேருந்து முனையத்திலிருந்து இயக்கப்படும் தடங்களின் விவரம் பின்வருமாறு: 6, 13, 60E,102, 109, 102C, 102K, 102P, 102S, 102X, 109A, 109X, 21G, 21L, 21E ET.
பீச்ஸ்டேசன் வழியாக இயக்கப்படும் பேருந்துகள்: 1, 4, 44, 330, 33L, 38A, 38G, 38H, 44C, 44CT, 4M, 560, 56D ET, 56J, 56K, 56P, 570, 57F, 57H, 57J, 57M, 8B, C56C, C56C ET, 557A ET.
மண்ணடிக்கு பேருந்து
மண்ணடி வழியாக இயக்கப்படும் வழித்தடங்கள்: 33B, 56C, 56F. ஈ.வேரா சாலை வழியாக இயக்கப்படும் வழித்தடங்கள்: 15, 20, 155, 156, 17D, 20A, 20D, 50ET, 50M
வேப்பேரி வழியாக இயக்கப்படும் பேருந்துகள்: 35, 42, 242, 1428, 142P, 35C, 428, 420, 42D, 42M, 640, 64K, 64K ET, 7E, 7H, 7K, 7M, 7M ET.
கடற்கரை வழியாக செல்லும் பேருந்துகள்
பீச் ஸ்டேசன் வழியாக இயக்கப்படும் பேருந்துகள் தத்தம் புறப்படும் இடத்திலிருந்து தீவுத்திடல் நோக்கி செல்லும் போது பாரிஸ் கார்னர் சிக்னல், North Fort சாலையில் ஏற்கனவே அமைந்துள்ள உயர்நீதி மன்றம் பேருந்து நிறுத்தத்தில் நின்று பயணிகளை இறக்கிவிட்டு முத்துசாமி மேம்பாலம் வழியாக தீவுத்திடல் தற்காலிக பேருந்து முனையத்திற்கு செல்லும்.
முத்துசாமி மேம்பாலம்
மண்ணடி சாலை வழியாக இயக்கப்படும் பேருந்துகள் தத்தம் புறப்படும் இடத்திலிருந்து தீவுத்திடல் நோக்கி செல்லும் போது Esplanade சாலையின் வலதுபுறம் சென்று முத்துசாமி மேம்பாலம் வழியாக தீவுத்திடல் தற்காலிக பேருந்து முனையத்திற்கு செல்லும்.
வேப்பேரி வழியாக இயக்கப்படும் பேருந்துகள்
ஈ.வெ.ரா. சாலை மற்றும் வேப்பேரி வழியாக இயக்கப்படும் பேருந்துகள் தத்தம் புறப்படும் இடத்திலிருந்து தீவுத்திடல் நோக்கி செல்லும் போது, ஏற்கனவே அமைந்துள்ள Nurse quarters பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கி வலது புறம் திரும்பி முத்துசாமி மேம்பாலம் வழியாக தீவுத்திடல் தற்காலிக பேருந்து முனையத்திற்கு செல்லும்.
காமராஜர் சாலை வழியாக
காமராஜர் சாலை வழியாக இயக்கப்படும் பேருந்துகள் தத்தம் புறப்படும் இடத்திலிருந்து பாரிஸ் கார்னர் சிக்னல் இடதுபுறம் திரும்பி ஏற்கனவே அமைந்துள்ள பாரிஸ் கார்னர் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கி NSC Bose சாலை, Esplanade சாலை வழியாக தீவுத்திடல் தற்காலிக பேருந்து முனையம் செல்லும்.
தீவுத்திடல் தற்காலிக பேருந்து நிலையம்
தீவுத்திடல் தற்காலிக பேருந்து முனையத்திலிருந்து பீச் ஸ்டேசன் வழியாக இயக்கப்படும் பேருந்துகள் முத்துசாமி மேம்பாலம் வழியாக சென்று இடது புறம் திரும்பி Esplande சாலை. NSC Bose சாலையில் ஏற்கனவே அமைந்துள்ள ரங்கவிலாஸ் பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும்.
வேப்பேரி
ஈ.வெ.ரா. சாலை மற்றும் வேப்பேரி வழியாக இயக்கப்படும் பேருந்துகள் முத்துசாமி மேம்பாலம் வழியாக வலது புறம் திரும்பி ஏற்கனவே அமைந்துள்ள அரசு பொது மருத்துவமனை(G.H.) பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி அதன் அடிப்படை வழித்தடத்தில் இயக்கப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
காமராஜர் சாலை வழியாக இயக்கப்படும் பேருந்துகள் முத்துசாமி மேம்பாலம், Esplanade சாலையில் வலதுபுறம் திரும்பி NSC Bose சாலையில் ஏற்கனவே அமைந்துள்ள Dare House பேருந்து நிறுத்தத்தில் நின்று பயணிகளை இறக்கி ஏற்றி மீண்டும் பாரிஸ் கார்னர் வழியாக அதன் அடிப்படை வழித்தடத்தில் இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications