ஊருக்கு போறீங்களா.. "சென்னை பஸ்" சென்னைக்கே வரப்பிரசாதம் தெரியுமா.. அதென்ன புதுஸா இருக்கே? இதை படிங்க
சென்னை: சென்னை பஸ் செயலி பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இந்த செயலியின் பயன்பாடு மற்றும் செயல்பாடுகள் குறித்து தெரியுமா? வாங்க பார்க்கலாம்.
புதிதாக ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு பேருந்துகளில் வந்திறங்கும் மக்கள், அங்கிருந்து பஸ் ஏறி, எப்படி தங்களது இருப்பிடத்திற்கு செல்வது என்று தெரியாமல் தவிக்க நேரிடுகிறது.
இதனால், தவறான பஸ்களில் ஏறிவிடுகிறார்கள்.. அத்துடன், தவறான பஸ் ஸ்டாப்களில் இறங்கியும் விடுகிறார்கள்.. பயணிகளின் இந்த சிரமத்தை போக்கும் விதமாகவே, தமிழ்நாடு அரசின் மாநகர போக்குவரத்துக் கழகம் ஒரு புதிய செயலியை சமீபத்தில் உருவாக்கியுள்ளது. அதன் பெயர் "சென்னை பஸ்" செயலியாகும்..

சிக்கலே இல்லை: இந்த ஆப் மூலம், பொதுமக்கள் தங்கள் இருப்பிடத்தை அறிந்துகொள்ள முடியும்.. மாநகர பேருந்துகளின் தற்போதைய இருப்பிடத்தையும், அடுத்த பேருந்த நிலையத்தையும், அது எத்தனை மணி நேரத்தில் வந்து சேரும் என்பதையும், அது சென்று சேரும் இருப்பிடம் எதுவென்பதையும், பொதுக்கள் அறிந்து கொள்ள முடியும். இதற்கு யாருடைய உதவியும் தேவையில்லை.. நாம் எங்கே போக வேண்டுமோ, அங்கே எந்தவிதமான சிக்கலும் இல்லாமல், சரியான நேரத்தில் நம்மால் சென்றுவிட முடியும்.
இதில், "பஸ் ரூட்" என்ற ஆப்ஷன் உள்ளது.. அதை தேர்வு செய்து, நீங்கள் செல்ல வேண்டிய பஸ் நம்பரை பதிவிடும்போது, இயக்கப்படும் பஸ்கள் எல்லாமே அதில் காட்டப்படும்... பிறகு, Search Route option-ல் பாதை விருப்பத்தையும் தேர்வு செய்து, அவை வந்து சேரும் நேரத்தையும் பயணிகள் அறிந்துகொள்ளலாம்.
பஸ்களின் ரூட்கள்: 1 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள அனைத்து பேருந்துகளின் நிகழ் நேர இருப்பிடத்தையும் இதன்மூலம் அறியலாம்.. இதிலுள்ள "டிரிப் பிளானர்" என்ற இன்னொரு ஆப்ஷனை பயன்படுத்தி, பஸ்ஸின் ரூட்களை அறிந்து கொள்ள முடியும்.
அதேபோல, அவசர நிலை ஏற்பட்டால் பயணிகள் தங்களுக்கு தெரிந்தவர்களின் செல்போன் நம்பருக்கோ அல்லது காவல் துறை அதிகாரிகளுக்கோ பேரிடர் சமிக்ஞைகளையும் இந்த ஆப் மூலம் அனுப்பலாம்.. இந்த செயலியின் வலது மூலையில் வைக்கப்பட்டுள்ள SOS பட்டன் மூலமாக "அவசர கால சமிக்ஞைகள்" மூலம் உடனடியாக போலீசுக்கு தெரிவிக்கலாம்.
ஆப்ஷன்கள் வசதி: "எங்களை தொடர்புகொள்ளவும்" என்ற ஆப்ஷனும் இதிலுள்ளது.. அதன்படி, பயணிகள் தங்கள் புகார்களை இதில் பதிவிடலாம். தமிழ் மற்றும் ஆங்கிலம் என்று 2 மொழிகளிலும் ஆப்ஷன்கள் உண்டு.. ஆனால், ஆண்ட்ராய்டு போனில் மட்டுமே இந்த செயலியை பயன்படுத்த முடியும்... இந்த செயலியானது 3,233 பெருநகரப் போக்குவரத்துக் கழக (MTC) பேருந்துகளின் இயக்கத்தை கண்காணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
Search Route option-யை க்ளிக் செய்து குறிப்பிட்ட வழித்தட எண்களில் இயங்கும் அனைத்து பேருந்துகளின் விபரங்களையும் அறிந்து கொள்ள முடியும். நிகழ்நிலை இருப்பிட விவரத்தின் பகிர்வு (Live Location) மூலமாக பயணம் செய்யும் பயணிகள், தங்கள் இருப்பிட விவரத்தினை பாதுகாப்பு கருதி தங்களது உறவினர்களுக்கு மெசேஜ் மூலமாக அனுப்பும் வசதியும் இதில் உள்ளது.
பெரும் வரவேற்பு: இந்த செயலி, பயணிகளுக்கு குறிப்பாக, தனியாக பயணிக்கும் பெண் பயணிகள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பாதுகாப்பான முறையில் பயணம் மேற்கொள்ள ஏதுவாக அமைந்துள்ளது. இதனால் பெருத்த வரவேற்பு இந்த சென்னை பஸ் செயலிக்கு கிடைத்து வருகிறது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications