பஸ் டிக்கெட் எடுக்க காசு வேண்டாம்.. யுபிஐ போதும்.. நடத்துனர்களுக்கு புது பயிற்சி.. தமிழக அரசின் மூவ்
சென்னை: தமிழ்நாடு பேருந்துகளில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை அதிகரிக்கப்பட உள்ளது. இதற்கான பயிற்சி ஒரு சில பேருந்துகளில் நடத்துனர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
விரைவில் முழுமையாக டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மாற்றப்படும். அதிக அளவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள மக்கள் ஊக்குவிக்கப்பட உள்ளனர். அதேபோல் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை வாங்க நடத்துனரும் ஊக்குவிக்கப்பட உள்ளனர்.

சென்னையில் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் என்று அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக தனியாக செயலி உருவாக்க டெண்டர் கோரியது சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம்.
QR கோடு மூலம் அனைத்து பொது போக்குவரத்துகளிலும் ஒரே டிக்கெட்டில் பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி முதல் கட்டமாக சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளுக்கு ஏப்ரல் முதல் வாரத்தில் தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் முறை கொண்டு வரப்பட்டு உள்ளது. வரும் நாட்களில் மற்ற நகரங்களுக்கு இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும். 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் சென்னையில் உள்ள பேருந்துகளில் எல்லாம் பயணிகள் தகவல் அமைப்பு வழங்கப்படும். அதாவது பேருந்துகளில் தானியங்கி மூலம் எந்த நிறுத்தம் என்ற அறிவிப்பு வெளியிடப்படும். இது போக உலக வங்கி மற்றும் ஜேர்மன் வங்கியான KfW ஆகியவற்றிலிருந்து நிதியுதவியுடன் 1,500 மின்சார பேருந்துகளை வாங்க திட்டமிட்டுள்ளதாகவும் மாநகராட்சி நிர்வாக இயக்குனர் கூறுகிறார்.
பேருந்துகளில் இருக்கும் கருவி ஒன்றை ஸ்கேன் செய்து நாம் டிக்கெட் எடுக்கலாம். மாநகர பேருந்து கார்டுகள் எதிர்காலத்தில் வழங்கப்படும். அதை இதில் டேப் செய்தும் டிக்கெட் எடுக்கலாம்.
நாம் செல்லும் தூரத்திற்கு ஏற்றபடி டிக்கெட் வழங்கப்படும். வெளிநாடுகளில் இப்படி டேப் செய்யும் முறை ஏற்கனவே அமலில் உள்ளது. அதே முறை சென்னையிலும் கொண்டு வரப்பட உள்ளது.
ஊக்குவிக்க முடிவு: தமிழ்நாடு பேருந்துகளில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை அதிகரிக்கப்பட உள்ளது. அதிக அளவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள மக்கள் ஊக்குவிக்கப்பட உள்ளன. அதேபோல் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை வாங்க நடத்துனரும் ஊக்குவிக்கப்பட உள்ளனர்.
அதன் பொருட்டு டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மூலம் அதிக டிக்கெட் விற்பனை செய்யும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக நடத்துநர்களுக்குப் பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் Credit Card, Debit Card, QR Code மூலமாக டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் அதிகபட்சமான மின்னணு பண பரிவர்த்தனை மூலம் பயணச் சீட்டு வழங்கும் நடத்துநர்களுக்கு பரிசு வழங்கப்படும். நடத்துநர்களை ஊக்குவிக்கும் விதமாக பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
ஒரே டிக்கெட்: விரைவில் மெட்ரோ வழங்க உள்ள ஸ்மார்ட் கார்டுகளை இப்படிப்பட்ட பேருந்துகளிலும் பயன்படுத்தும் வசதி விரைவில் வர உள்ளது. சென்னையில் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல பேருந்து, மெட்ரோ, மின்சார ரயில் உள்ளிட்ட மூன்று ஆப்ஷன்கள் மக்களுக்கு உள்ளன. ஆனால் இது மூன்றிற்கும் மக்கள் தனி தனியாக டிக்கெட் எடுத்து வருகிறார்கள். மக்கள் தனித்தனியாக பயணச்சீட்டு பயன்படுத்தும் நிலையில் இவை அனைத்துக்கும் ஒரே பயணச்சீட்டை பயன்படுத்தும் முறையை கொண்டு வர தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதாவது ஒரே டிக்கெட்டை பயன்படுத்தி இந்த மூன்றிலும் பயணிக்க முடியும்.












Click it and Unblock the Notifications