ரூமில் நிர்வாணமாக இருந்த நடிகைகள்.. வசமாக சிக்கிய இளம் பிசினஸ்மேன்.. சென்னையில் பரபரப்பு
தொழிலபதிபரை ஏமாற்றி பணம் பறித்த 2 பேரை கைது செய்துள்ளனர்
சென்னை: தொழிலதிபர் ஒருவரை, 2 பைனான்சியர்கள் நடிகைகளை வைத்து ஏமாற்றி பணம் கறந்துள்ளனர்.. இந்த சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.
சென்னை திநகரை சேர்ந்தவர் ராஜா.. இவர் ஒரு இளம் தொழிலதிபர்.. சென்னை உட்பட தமிழகம் முழுவதும் சூப்பர் மார்க்கெட்கள் வைத்திருக்கிறார். இதுதவிர திருச்சியில் பெரிய ஷாப்பிங் மால் ஒன்றும் இருக்கிறது.
தொழிலதிபர் ராஜாவுக்கு 2016ல், ரமேஷ், கார்த்திக் ஆகியோர் தி.நகரில் இயங்கி வரும் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் அறிமுகமானார்கள்.. அவர்கள் 2 பேருமே பைனான்சியர்கள்..

நண்பர்கள்
ராஜாவும் அவர்களுடன் நெருங்கி பழகி வந்துள்ளார்... அப்போதுதான், ராஜாவுக்கு பல கோடி வருமானம் வருவது அந்த பைனான்சியர்களுக்கு தெரிந்துள்ளது. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் நண்பர் ஒருவரின் பிறந்த நாள் விழாவுக்கு தி.நகரில் உள்ள ஸ்டார் ஹோட்டலுக்கு ராஜாவை அழைத்திருக்கிறார்கள்.. மதுவிருந்தும் அங்கு நடத்தப்பட்டுள்ளது..

பர்த்டே
அந்த பர்த்டே பார்ட்டியில் நடிகைகள், துணை நடிகைகள் என ஏராளமானோர் வந்திருக்கிறார்கள்.. கேக் வெட்டி முடிக்கப்பட்டுவிட்டது.. பிறகு நண்பர்களுடன் சேர்ந்து ராஜா தண்ணி அடித்துள்ளார்.. போதை தலைக்கேறிவிட்டதும், அதே ஹோட்டல் ரூம் ஒன்றில் ராஜாவை பைனான்சியர்கள் 2 பேரும் தங்க வைத்துள்ளனர். பிறகு குடிபோதையில் இருந்த ராஜாவின் ரூமுக்குள் நிர்வாணமாக நடிகைகளை அனுப்பி வைத்துள்ளனர்..

நிர்வாணம்
ராஜாவுடன் அந்த நடிகைகள் ஒன்றாக இருப்பது போன்று டிசைன் டிசைனாக போஸ் கொடுத்துள்ளனர்.. அதை வீடியோவாகவும், போட்டோக்களாகவும் எடுத்து வைத்து கொண்டனர். அதன்பிறகு எதுவுமே தெரியாதது போல் வீடுகளுக்கு கிளம்பி சென்று விட்டனர். பிறகு, கடந்த செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் அந்த பைனான்சியர்கள் 2 பேரும் ராஜாவின் செல்போனுக்கு அதை வீடியோ அனுப்பி வைத்துள்ளனர்.. போதையில் நிர்வாண நிலையில் இருந்த நடிகைகளுடன் தான் ஒன்றாக இருப்பது போன்ற வீடியோவை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்துள்ளார்..

வீடியோ
இதனால் இதைபற்றி உடனடியாக பைனான்சியர்களிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் மிரட்ட ஆரம்பித்தனர்.. நாங்கள் இதை உங்க வீட்டில் உள்ளவர்களுக்கு அனுப்பாமல் இருக்க வேண்டும் என்றால் 2 கோடி தர வேண்டும் என்று மிரட்டியுள்ளனர். பிறகு ஒரு வழியாக பேரம் பேசி 50 லட்சம் பணம் தருவதாக ராஜா ஒப்புக்கொண்டார். அந்த பணத்தை வாங்க பைனான்சியர் ரமேஷ், தன்னுடைய கார் டிரைவர் மோகனை ராஜா வீட்டிற்கு அனுப்பியுள்ளார்... அந்த சமயத்தில் தன்னுடைய பாதுகாப்புக்காக, ராஜா வீடியோ ஒன்றை ரகசியமாக எடுக்க முடிவு செய்தார்..

டிரைவர்
கார் டிரைவர் மோகன் வீட்டிற்கு வந்ததுமே, பணத்தை எண்ணி ஒரு பையில் போட்டுக் கொண்டனர்.. கிளம்பி செல்லும்போது, எங்களுக்கு ஒரே தவணையாக 2.50 கோடி வேண்டும் இல்லாவிட்டால், துணை நடிகைகளுடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டுவிடுவோம் என்று மறுபடியும் மிரட்டினர்.. இது அத்தனையும் ராஜா எடுத்த வீடியோவில் பதிவாகி விட்டது. இதற்கு பிறகு, வீடியோ ஆதாரத்தை எடுத்து கொண்டு, சென்னை கமிஷனர் அலுவலகத்தில் ராஜா புகார் தந்தார்.

புகார்
இந்த புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்க கமிஷனர் உத்தரவிட்டதையடுத்து, பைனான்சியர்கள் 2 பேரையும் போலீசார் சென்னைக்கு வரவழைத்து கைது செய்தனர்.. நிர்வாணமாக ரூமுக்குள் சென்ற அந்த நடிகைகள் யார்? எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது? என்பது குறித்தெல்லாம் விசாரணை நடந்து வருகிறது... மேலும், அந்த நடிகைகள் மற்றும் துணை நடிகைகள் மீதும் வீடியோ ஆதாரத்தின்படி நடவடிக்கை எடுக்க போலீசார் முயன்று வருவதாக கூறப்படுகிறது.
-
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்?












Click it and Unblock the Notifications