இர்பான் சர்ச்சை எதிரொலி..கருக்கலைப்பு..! சென்னையில் பிரபல மருத்துவமனைக்கு சீல்! ஆடிப்போன நோயாளிகள்!
சென்னை: சென்னையில் கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் அமைந்துள்ள CADENCE மருத்துவமனையில் கருவின் பாலினத்தை கண்டறிந்து தெரிவித்ததாகவும், அனுமதியின்றி மனநல சிகிச்சை அளித்ததாகவும் எழுந்த புகாரையடுத்து அம்மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது.
தனது மனைவியின் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை வெளிநாட்டில் தெரிந்து கொண்டதோடு அதனை வீடியோவாகவும் வெளியிட்டார் பிரபல யூட்யூபரான இர்ஃபான். அவரது இர்பான்ஸ் வியூ யூடியூப் சேனலில் இந்த வீடியோ வெளியான நிலையில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்தனர்.

அதே நேரத்தில் இதுபோன்று கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிந்து அதை பொதுவெளியில் வெளியிடுவது தவறு என்றும் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்தது.
சுகாதாரத்துறை: இது தொடர்பாக இர்பானுக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியதோடு அந்த வீடியோவை நீக்க வேண்டும் என யூடியூப் நிறுவனத்திற்கும் இர்பானுக்கும் நோட்டீஸ் அனுப்பியதாக தகவல் வெளியானது. இந்நிலையில் கருவின் பாலினத்தை அறிவிப்பது சட்டப்படி குற்றம் எனவும், விதிமீறலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக மருத்துவத்துறை எச்சரித்தது.
கேடான்ஸ் மருத்துவமனை: மேலும் கருவின் பாலினத்தை அறிவதும் அறிவிக்கும் செயலில் ஈடுபடும் நபர்கள், ஸ்கேன் சென்டர்கள், மருத்துவமனைகள் மீது இந்த அரசு கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் என எச்சரிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னையில் கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் அமைந்துள்ள CADENCE மருத்துவமனையில் கருவின் பாலினத்தை கண்டறிந்து தெரிவித்ததாகவும், அனுமதியின்றி மனநல சிகிச்சை அளித்ததாகவும் எழுந்த புகாரையடுத்து அம்மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது.
சட்டவிரோத கருக்கலைப்பு: இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில்,"கடந்த 06.01.2024 அன்று பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துதுறை இயக்குநர் மற்றும் மருத்துவர் களத்தூர் ரவிகிருஷ்ணா ஆகியோரிடமிருந்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் சென்னையில் கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் அமைந்துள்ள CADENCE மருத்துவமனையில் சட்டவிரோத கருக்கலைப்பு நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.
விளக்கம்: விசாரணை குழுவினர் 02.05.2024 அன்று மேற்கொள்ளப்பட்ட நேரடி ஆய்வில் மேற்காணும் மருத்துவமனையில் Scan பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்பதும் மரு.முரளி உரிய அனுமதியின்றி Scan செய்ததும், மாதாந்திர அறிக்கைகளை அரசிடம் சமர்ப்பிக்காமல் இருந்ததும், மேலும் கர்ப்பிணி பெண்களிடம் பெறக்கூடிய Form-F முறையாக பராமரிக்கப்படாததும் கண்டறியப்பட்டது. மேற்காணும் குறைபாடுகளைத் தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகத்திடம் மாவட்ட அமலாக்க அலுவலர், PCPNDT Act, 1994 அவர்களால் உரிய விளக்கம் கோரப்பட்டது.
பணியாளர்கள் இல்லை: 17.05.2024-ம் நாளிட்ட Cadence மருத்துவமனையின் விளக்க கடிதமானது குறைபாடுகளுக்கு தொடர்பில்லாமலும் திருப்தியின்றியும் அமைந்தது. அதனைத் தொடர்ந்து விசாரணைக் குழுவானது 23.05.2024 அன்று Cadence மருத்துவமனையில் மீண்டும் நேரடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வில் மருத்துவமனையில் நிர்வாகம் மேற்கொள்ள முறையான பணியாளர்கள் இல்லை
மருத்துவமனைக்கு சீல்: மேலும் உரிய அனுமதி பெறாமல் மருத்துவர்கள் பணியாற்றியதும், உரிய அனுமயின்றி கருக்கலைப்பு செய்வதும் மகளிர் நலன் மற்றும் குடும்ப கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சைகள் முறையான மகளிர் நலன் மற்றும் மகப்பேறு மருத்துவர்கள் இல்லாமல் செய்யப்பட்டதும், அவசர காலங்களில் மயக்கவியல் நிபுணர். பொது நல மருத்துவர் மற்றும் அவசரகால மருத்துவர்கள் இல்லாததும் கண்டறியப்பட்டது. இதனையடுத்து பொது மக்களின் நலன் கருதி Cadence மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட பதிவுச்சான்றிதழை தற்காலிகமாக நீக்கம் செய்து மருத்துவமனை மூடப்பட்டது." என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications