மும்பை நிழல் உலக தாதா சோட்டா ராஜனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை.. சென்னை சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மும்பை நிழல் உலக தாதா சோட்டா ராஜனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2002ஆம் ஆண்டு ஆள்மாறாட்டம் செய்து மோசடியாக பாஸ்போர்ட் பெற்ற வழக்கில் சோட்டா ராஜனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வேறு குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்ட சோட்டா ராஜன் தற்போது ஆயுள் தண்டனை கைதியாக திஹார் சிறையில் உள்ளார்.

மும்பை குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் மும்பை போலீசாரால் தேடப்பட்டு வந்தவர் சோட்டா ராஜன். தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய கூட்டாளியாக இருந்து பின்னர் விலகியவர். கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் இந்தியக் காவல் துறைக்கு சிம்மசொப்பனமாக விளங்கியவர். பின்னர் இண்டர்போல் உதவியுடன் 2015 ஆம் ஆண்டு இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்டார் சோட்டா ராஜன்.

Chennai CBI Court Sentences Chhota Rajan to 7 Years in 2002 Fake Passport Case

சோட்டா ராஜன் சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தை ஏமாற்றி, போலி ஆவணங்கள் மூலம் இந்திய பாஸ்போர்ட் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. சிபிஐ நடத்திய விசாரணையில் அவர் மீதான குற்றச்சாட்டு உண்மை கண்டறியப்பட்டது. ராஜேந்திர சதாசிவ் நிகல்ஜி என்ற இயற்பெயர் கொண்ட சோட்டா ராஜன், சென்னையில் Vijaya Kadam என்ற போலி பெயரில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்துள்ளார்.

பள்ளி மாற்றுச் சான்றிதழ், ரேஷன் கார்டு, உள்ளிட்ட போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்துள்ளார். வயது மற்றும் முகவரி தொடர்பான போலி ஆதாரங்களை பயன்படுத்தி அவர் மோசடியாகப் பாஸ்போர்ட் பெற்றது நிரூபிக்கப்பட்டது.

கடந்த 2004 ஆம் ஆண்டு, சிபிஐ இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. விசாரணை முடிவில், சிபிஐ சிறப்பு நீதிமன்றம் குற்றம் நிரூபிக்கப்பட்டதாக தெரிவித்து சோட்டா ராஜனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. மேலும், ரூபாய் 55,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

மும்பை போலீசாருக்கு நீண்டகாலம் தண்ணி காட்டி வந்த சோட்டா ராஜன் கடந்த 2015 ஆம் ஆண்டு இண்டர்போல் உதவியுடன் இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டார். ஏற்கனவே வேறு குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்ட சோட்டா ராஜன் தற்போது ஆயுள் தண்டனை கைதியாக டெல்லி திஹார் சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+