ஸ்டாலின் குடும்பம் பற்றி ஆபாச கருத்து! கைதுக்கு தயாரான போலீஸ்.. 6 பிரிவில் வழக்கு.. என்ன நடந்தது?
சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின் குடும்பம் குறித்து அவதூறு பரப்பிய நபர்கள் மீது 6 பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவின் சைபர் க்ரைம் போலீசார் அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அவரது மனைவி கிருத்திகா உதயநிதி பற்றி அவதூறாக கருத்து பரப்பப்பட்ட நிலையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி கைது நடவடிக்கைக்கு தயாராகி வருகின்றனர்.
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினரை சிலர் சமூக வலைதளங்களில் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர். குறிப்பாக கடந்த சில நாட்களாக ஸ்டாலின் மகனும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி கிருத்திகா உதயநிதி பற்றி வலைதளங்களில் அவதூறான கருத்துக்கள் பரப்பப்பட்டது.

எக்ஸ் பக்கத்தின் ட்விட்டர் ஸ்பேஸில் நடக்கும் உரையாடல் போன்ற வடிவில் வெளியான ஆடியோவில் உதயநிதி மற்றும் அவரது மனைவி கிருத்திகா உதயநிதி குறித்து ஆபாசமான கருத்துகளை சிலர் பேசியிருந்தனர். இதுதொடர்பான ஆடியோவுக்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் தான் சம்பவம் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசார் 6 பிரிவுகளில் அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைதள பக்கங்களை கண்காணிக்கும் காவலர் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை என்பது எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி நற்பெயருக்கு கலங்கம் விளைவித்தல், பெண்ணின் நாகரீகத்தை குலைக்கும் வகையில் செயல்படுதல், ஆபாசமாக பேசுதல், தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு உள்பட 6 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்போது வரை அவதூறு பரப்பியவர்கள் யார் என்பது தெரியவில்லை. இருப்பினும் அந்த கருத்துகள் பதிவிடப்பட்ட வலைதள பக்கங்களின் அடிப்படையில் அடையாளம் தெரியாத நபர்களை போலீசார் கைது செய்ய தீவிரமாக இறங்கி உள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications