சென்னை சென்ட்ரலுக்கு கிடைத்த அங்கீகாரம்! கூடவே வந்த திருச்சி.. இது கெத்து தான்! என்ன மேட்டர் பாருங்க
சென்னை: நாட்டிலேயே பழமையான ரயில் நிலையங்களில் ஒன்றான சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு முக்கியமான அங்கீகாரம் கிடைத்துள்ளது.
தமிழகத்தில் இருக்கும் பரபரப்பான ரயில்வே ஸ்டேஷன் என்றாலே பலருக்கும் நினைவுக்கு வருவது சென்னை சென்டிரல் ரயில் நிலையம் தான். காலை, மாலை, இரவு என எப்போது சென்னை சென்ட்ரலுக்கு சென்றாலும் அங்கே ஆள் நடமாட்டம் இருந்து கொண்டே தான் இருப்பார்கள்.

மேலும், தமிழகத்தில் மிகவும் பழமையான ரயில் நிலையங்களில் ஒன்றாகவும் இது இருக்கிறது. சுமார் 150 ஆண்டுகள் பழமையானதாக இருக்கிறது இந்த சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்..
தலைநகர் சென்னை: தலைநகர் சென்னையில் இருந்து நாட்டின் பல முக்கிய நகரங்களுக்கும் நேரடி ரயில் சேவை உள்ளது. டெல்லி, கொல்கத்தா என முக்கிய நகரங்களுக்கும் நேரடி ரயில் சேவை இருக்கிறது. இதனால் சென்னை சென்ட்ரல் எப்போதும் கூட்ட நெரிசலுடன் பரபரப்பாக இருக்கும். சென்னையில் எழும்பூர், தாம்பரத்தில் இருந்தும் ரயில்கள் இயக்கப்பட்டாலும், சென்னை சென்ட்ரல் எப்போதும் கூட்டம் குறையவே குறையாது.
இதற்கிடையே சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு மற்றொரு முக்கிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. FSSAI எனப்படும் இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் தென்னக ரயில்வேயில் மொத்தம் ஆறு ரயில் நிலையங்களுக்கு Eat Right Station என்ற சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல், திருச்சி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சூர், எமகும்பகோணம் ஆகிய ரயில் நிலையங்களுக்கும் திருச்சி மண்டல பயிற்சி நிலையத்திற்கும் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஓ.எம்.ஆர் சாலைக்கு வந்தாச்சு விடிவுகாலம்! மேஜர் பிரச்சனைக்கு வந்தாச்சு தீர்வு! இனி சல்லுனு பறக்கலாம்
சான்றிதழ்: சமீபத்தில் இந்த சான்றிதழ்களை FSSAI தெற்கு மண்டல இயக்குநர் வி.கே. பஞ்சம் வழங்கினார். கேட்டரிங் யூனிட்கள், உணவு விடுதிகள், கியோஸ்க்குகள், சில்லறை விற்பனை நிலையங்கள் என ரயில் நிலையங்களில் இருக்கும் அனைத்து உணவு விற்பனையாளர்களும் பாதுகாப்பான முறையில் உணவைத் தயார் செய்து பயணிகள், அதிகாரிகளுக்கு வழங்குகின்றன. இதை உறுதி செய்வதே இந்த 'ஈட் ரைட் ஸ்டேஷன்' என்ற அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த சான்றிதழைப் பெற விரும்பும் விற்பனையாளர்கள், இந்திய உணவுப் பாதுகாப்புத் தர ஆணையத்தின் மூலம் பயிற்சி பெற வேண்டும். அதைத் தொடர்ந்து தணிக்கையும் நடத்தப்படும். அந்த தனிக்கையில் பெறும் மார்க் அடிப்படையில் சான்றிதழ் வழங்கப்படும். இந்த சான்றிதழ்கள் இரண்டு ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
எதற்கு உதவும்: நாம் வெளியே செல்லும் போது, அதிலும் குறிப்பாக ரயில் நிலையங்களில் சாப்பிடும் போது ஒரு முறைக்கு இரண்டு முறை யோசிப்போம். இந்த உணவகம் பாதுகாப்பானது தானா.. இதில் நம்பி சாப்பிடலாமா என்பது பலருக்கும் சந்தேகமாக இருக்கும். அந்த பிரச்சினைக்குத் தான் இந்த 'ஈட் ரைட் ஸ்டேஷன்' சான்றிதழ் ஒரு தீர்வை தருகிறது. இனி இந்த 'ஈட் ரைட் ஸ்டேஷன்' சான்றிதழ் இருந்தால் தைரியமாக நாம் அங்கே சாப்பிடலாம்.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications