மத்திய சென்னையில் மீண்டும் வெல்லும் தயாநிதி மாறன்! பாஜக ஓட்டு சதவீதம் இதுதான் - தந்தி டிவி Exit poll
சென்னை: மத்திய சென்னை லோக்சபா தேர்தலில் மீண்டும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக தந்தி டிவி நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு ஒவ்வொரு வேட்பாளர்களும் பெறும் வாக்கு சதவீதம் தொடர்பான விபரம் வெளியாகி உள்ளது.
நம் நாட்டில் மொத்தம் 543 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இதில் மத்தியில் ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 272 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இந்நிலையில் தான் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டது.

முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடந்தது. இதில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிக்கு அன்றைய தினம் ஓட்டுப்பதிவு நடந்தது. அதன்பிறகு 6 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்தது. இன்று 7 வது மற்றும் கடைசி கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
இதில் பதிவாகி உள்ள ஓட்டுகள் ஜுன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. அன்றைய தினம் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படுகிறதா? இல்லாவிட்டால் மீண்டும் பாஜக ஆட்சியை தொடர்கிறதா? என்பது தெரிந்துவிடும். இந்நிலையில் தான் இன்று லோக்சபா தேர்தல் முடிவடைந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய பல்வேறு கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன.
அதன்படி தந்தி டிவி நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பின் முடிவுகள் தொகுதி வாரியாக வெளியாகி வருகிறது. அந்த வகையில் மத்திய சென்னை லோக்சபா தொகுதியில் திமுகவில் சிட்டிங் எம்பி தயாநிதி மாறன், அதிமுக கூட்டணியில் தேமுதிகவில் பார்த்தசாரதி, பாஜகவில் வினோஜ் பி செல்வம், நாம் தமிழர் கட்சியின் கார்த்திகேயன் போட்டியிட்டுள்ளனர்.
இதில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறனுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் திமுகவுக்கு 41 சதவீத வாக்குகள் கிடைக்கும் என தந்தி டிவி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த தொகுதியில் பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் 2வது இடத்தை பிடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு 26 சதவீத ஓட்டுகள் கிடைக்கும். அதற்கு அடுத்தப்படியாக அதிமுக கூட்டணியின் தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதி 3வது இடத்தை பிடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications