அண்ணா சாலை அதிருது.. M, T, V பாஸ் இருக்கா? சென்னையில் வண்டிகளை திருப்புறாங்க.. வாகன ஓட்டிகள் கவனிங்க
சென்னை: சேப்பாக்கத்தில் நடக்கும் ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளை முன்னிட்டு இன்று உட்பட போட்டி நடக்கும், 7 நாட்களுக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பும் வெளியாகியிருக்கிறது.
வருடா வருடம் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும், ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17-வது சீசன் கடந்த 22ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது.

நேற்று வரை மொத்தம் 21 போட்டிகள் முதற்கட்டமாக நடைபெற்றுள்ளன.. வரும் மே மாதம் வரை போட்டிகள் நடைபெற உள்ளன. சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் களம் காண்கின்றன.
மாற்றம்: இந்நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ள, ஏப்ரல் 08, 23, 28 மற்றும் மே 1, 12, 24, 26 ஆகிய 7 நாட்களுக்கு சேப்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது . போட்டி நடைபெறும் நேரமான மாலை 5 மணி முதல் இரவு 11 வரை மட்டும் இந்த போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதுகுறித்த அறிவிப்பு இதுதான்:
"விக்டோரியா ஹாஸ்டல் சாலையில் பாரதி சாலை வழியாக வாகனங்கள் வரலாம். ஆனால், வாலாஜா சாலையிலிருந்து வர அனுமதியில்லை.. பெல்ஸ் ரோட்டில் தற்காலிக ஒன்வேயாக மாற்றப்பட்டு பாரதிசாலை, பெல்ஸ் ரோடு சந்திப்பிலிருந்து வாகனங்கள் செல்லலாம். ஆனால் வாலாஜா, பெல்ஸ் சந்திப்பிலிருந்து பெல்ஸ் சாலைக்கு செல்ல அனுமதி இல்லை
மாநகர பேருந்துகள்: கண்ணகி சிலை வழியாக வரும் மாநகர பேருந்துகள் பெல்ஸ் சாலை செல்லாது. ரத்னா கபே வழியாக திருவல்லிக்கேணி நெடுஞ்சாலைக்கு சென்று இலக்கை அடையும் ரத்னா கபே ஜங்ஷனிலிருந்து வரும் வண்டிகள் பாரதிசாலை, பெல்ஸ் ரோடு சந்திப்பில் திரும்பி பெல்ஸ் ரோடு வழியாக வாலாஜா சாலை செல்லலாம். பாரதிசாலை, பெல்ஸ் ரோடு சந்திப்பில் இருந்து கண்ணகி சிலை செல்ல அனுமதி இல்லை.
அண்ணாசாலை வழியாக வரும் M, T, V எழுத்துகள் கொண்ட பார்க்கிங் பாஸ் உள்ள வாகனங்கள் பாரதி சாலை வழியாக விக்டோரியா ரோடு சென்று தங்கள் வாகன நிறுத்தத்தை அடையலாம்.
அறிவிப்புகள்: B & R பார்க்கிங் பாஸ் வண்டிகள் வாலாஜா சாலை வழியாக அந்தந்த நிறுத்தங்களுக்கு செல்லலாம்... அனுமதி அட்டை இல்லாத வாகனங்கள் PWD எதிராக உள்ள கடற்கரை உட்புறச்சாலையில் உள்ள வாகன நிறுத்தத்தில் வாகனங்களை நிறுத்தலாம்" என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications