ஆடி மாதம்: சென்னையில் தனியாக இருந்த புது மாப்பிள்ளை.. இளம்பெண் மீது சபலம்! கடைசியில் இப்படியா ஆகனும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆடி மாதம் பிறந்ததும் மனைவி தாய் வீட்டுக்கு சென்றதால் சென்னையில் தனியாக இருந்து வந்த நபர் தன் வீட்டின் கீழ் தளத்தில் வசித்து வரும் 22 வயது இளம்பெண் மீது சபலம் கொண்டு அவரிடம் காதல் வலை வீசியது கடைசியில் அவருக்கே வினையாக மாறியது. இந்த விவகாரம் பூதாகரம் ஆகிய நிலையில் இளம்பெண் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை சூளைமேட்டில் அப்படி என்ன நடந்தது? காதல் வலை விரிக்கப்பட்ட இளம்பெண்ணே எப்படி கைது ஆனார் என்பது உள்ளிட்டவற்றை விவரமாக இங்கு காணலாம்.

Chennai Choolaimedu Aadi Month Newlywed man alone develops lust for young woman it ends disastrously

புது மாப்பிள்ளை

சென்னை சூளைமேடு பகுதியில் வசித்து வருபவர் தர்ஷன் வயது 32 (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு கடந்த 6 மாதத்திற்கு முன்பு தான் திருமணம் நடந்துள்ளது. மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில் தற்போது ஆடி மாதம் பிறந்துள்ளதால், கடந்த 17 ஆம் தேதி இவரது மனைவி தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். இதனால் தர்ஷன் மட்டுமே வீட்டில் வசித்து வந்துள்ளார்.

மனைவி ஊருக்கு சென்றதால் தனியாக இருந்த தர்ஷனுக்கு குடியிருப்பின் கீழே உள்ள வீட்டில் வசித்து வந்த 22 வயது இளம்பெண் சினேகா (பெயர் மாற்றம்) மீது சபலம் ஏற்பட்டுள்ளது. சினேகாவிடம் அவ்வப்போது பேச்சு கொடுத்துள்ளார். அவரும் பேசியதால் அப்படியே போன் நம்பர் கேட்டு இருக்கிறார். சினேகாவும் தர்ஷனிடம் செல்போன் நம்பரை கொடுத்ததாக கூறப்படுகிறது.

நானும் உங்களை லவ் பண்ணுறேன்..

இதையடுத்து தர்ஷன் சினேகாவுக்கு போன் செய்து அவ்வப்போது பேசி காதல் வலை விரித்துள்ளார். அப்படி தர்ஷன் பேசியதை சினேகா தனது செல்போனில் ரெக்கார்ட் செய்து வைத்துள்ளார். பின்னர் இதனை தனது தோழியிடம் கூறியிருக்கிறார். அப்போது அவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு பிளான் போட்டுள்ளனர். தர்ஷனை நாம் இதை வைத்து மிரட்டி பணம் கறந்துவிடலாம் என யோசித்துள்ளனர்.

அதன்படி, தர்ஷனுக்கு போன் செய்த சினேகா, "நானும் உங்களை லவ் பண்ணுறேன்.. நீங்க ஃப்ரியா இருந்தால் எனது தோழி வீட்டுக்கு வாங்க" என கடந்த 27 ஆம் தேதி போனில் அழைத்ததாக கூறப்படுகிறது. அதன்படி தர்ஷனும் சினேகாவின் தோழி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது தர்ஷனிடம் செல்போனில் பதிவான ரெக்கார்டை போட்டு காண்பித்துள்ளார். நீங்கள் எங்களுக்கு பணம் தர வேண்டும் இல்லையெனில் உங்கள் மனைவிக்கு அனுப்பி விடுவோம் என மிரட்டியுள்ளனர்.

5 லட்சம் பணம் கேட்டு மிரட்டல்

இதற்கு சினேகாவின் தோழி மற்றும் அவரது கணவர், அவருடைய நண்பர், மற்றொரு தோழியும் துணையாக இருந்துள்ளனர். பின்னர் 5 பேரும் சேர்ந்து தர்ஷனை வீட்டு சிறையில் வைத்து 5 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அவ்வளவு பணம் இல்லை என்றதால் பணத்தை ஏற்பாடு செய்து விட்டு வா.. இல்லையென்றால் போலீசில் புகார் கொடுத்து உன் மானத்தை வாங்கிவிடுவோம் என மிரட்டி அனுப்பியுள்ளனர்.

பின்னர் 29 ஆம் தேதி அங்கு சென்ற தர்ஷனை சினேகாவில் வீட்டு வாடகை உள்ளிட்ட செலவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என சொல்லி அனுப்பி இருக்கிறார்கள். இதனால் மன வேதனை அடைந்த தர்ஷன் மனைவியிடமே கண்ணீர் மல்க அனைத்து விவரங்களையும் சொல்லி இருக்கிறார். அவரது மனைவியோ, நீங்கள் எதற்கும் கவலைப்படாதீர்கள் என நம்பிக்கை அளித்ததோடு சூளைமேடு போலீஸ் நிலையத்தில் கடந்த 4 ஆம் தேதி புகார் அளித்தார்.

அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் தர்ஷனை அடித்து சித்ரவதை செய்ததோடு பணம் கேட்டு மிரட்டல் விடுத்த சினேகா உள்பட 5 பேரையும் கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+