ஜிஎஸ்டி சாலையில் சூப்பர் பணிகள்.. குரோம்பேட்டைக்கு டிசம்பரில் விடிவு காலம் பிறக்க போகுது
சென்னை: சென்னையின் புறநகர் பகுதிகளில் நடைபெற்று வரும் குடிநீர் குழாய் பணிகள், பாதாள சாக்கடை பணிகள் மற்றும் சாலை பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதுபற்றி பல்வேறு அதிகாரிகளுடன் அண்மையில் ஆய்வும் நடத்தினார் இந்நிலையில் குரோம்பேட்டை ராதா நகர் ரெயில்வே சுரங்கப்பாதை டிசம்பர் மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு வரும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்..
சென்னையை அடுத்த குரோம்பேட்டை ஓஎம்ஆருக்குபோடப்பட்ட புதியசாலைக்கு பின்னர், கடந்த 20 வருடங்களில் மிகப்பெரிய வளர்ச்சி பெற்றுள்ளது. குரோம்பேட்டையை பொறுத்தவரை ஜிஎஸ்டி சாலை, ரயில் நிலையம், ஓஎம்ஆரை இணைக்கும் சாலை, குன்றத்தூர், போரூரை இணைக்கும் சாலை எல்லாமே ஒரே இடத்தில் இருக்கிறது. இதன் காரணமாக மாம்பலம், புரசைவாக்கத்திற்கு அடுத்தபடியாக சென்னையின் வணிக மையமாக குரோம்பேட்டை மாறி உள்ளது. தாம்பரம் மாநகராட்சியின் ஒரு அங்கமாக உள்ள குரோம்பேட்டை தான், தாம்பரத்தின் மிகப்பெரிய வணிக மையம் ஆகும்.

ஜிஎஸ்டி சாலையில் உள்ள குரோம்பேட்டையில் தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. குரோம்பேட்டை பல்லாவரத்தை இணைக்கும் மேம்பாலத்திலேயே சிக்னல் போடும் அளவிற்கு போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக இருக்கிறது. இதனால் குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் ஒரு பகுதியில் உள்ள மக்கள் மறுபக்கம் போவது என்பது பெரும் சவாலாக உள்ளது.
மறுபக்கம் ரயில் தண்டவாளத்தை கடந்து வர வேண்டும் என்றால், பல்லாவரம் மேம்பாலத்தில் ஏறித்தான் வர வேண்டிய நிலை இருக்கிறது.. இல்லை என்றால், அஸ்தினாபுரம் மேம்பாலத்தில்ஏறித்தான் வரும் நிலை இருக்கிறது. இதனால் அன்றாடம் குரோம்பேட்டை மக்கள் கடும் நெரிசலில் சிக்கி தவிக்கிறார்கள். மழை பெய்தால் பெரும் துயராக மாறுகிறது.
இந்த பிரச்சனைக்கு தீர்வு காண சென்னையை அடுத்த குரோம்பேட்டை ராதா நகர் ரெயில்வே சுரங்கப்பாதை பணி ரூ.28 கோடியே 99 லட்சத்தில் நடைபெற்று வருகிறது. 2010-ம் ஆண்டு தொடங்கிய இந்த பணிகள் பல்வேறு காரணங்களால் தடைப்பட்டு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. ராதா நகர் பகுதியில் பணிகள் முடிவடைந்த நிலையில் ஜி.எஸ்.டி. சாலை பகுதியில் கடும் சிரமத்துக்கு இடையே சுரங்கப்பாதை பணிகள் நடைபெற்று வருகிறது. சுமார் 75 சதவீத பணிகள் முடிவுற்றுவிட்டது. இந்த பணிகள் காரணமாக குரோம்பேட்டை ரயில் நிலைய முகப்பில் மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று குரோம்பேட்டை ராதா நகர் ரெயில்வே சுரங்கப்பாதை பணிகளை ஆய்வு செய்தார். அப்போது அமைச்சர் தா.மோ.அன்பரசன், சிறப்பு திட்ட செயலாக்கத்துறை செயலாளர் தாரேஷ் அகமது, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ், திட்ட செயலாக்கத்துறை துணைச் செயலாளர் பிரதாப், தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் பாலசந்தர், நெடுஞ்சாலை துறை தலைமை பொறியாளர் ஜவகர் முத்துராஜ், மாநகராட்சி மண்டல குழு தலைவர் ஜோசப் அண்ணாதுரை உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
சுரங்கப்பாதை பணிகளை விரைவாக முடிக்க உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டார். அதற்கு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு வரும் டிசம்பர் மாதத்துக்குள் ரெயில்வே சுரங்கப்பாதையை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உறுதி அளித்தனர்.
-
சென்னையில் மாறிய ரூல்ஸ். அடுக்குமாடி வீடுகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்களுக்கு மாநகராட்சி அதிரடி -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications