சென்னையை புரட்டி போடும் ‘சிட்டிஸ்' திட்டம்.. குழந்தைகளுக்குத்தான் முக்கியம்.. இதை என்னன்னு பாருங்க!
சென்னை: 'சிட்டிஸ்' திட்டத்தின் கீழ் சென்னையில் உள்ள பள்ளிகளை நவீனமாக்க முடிவு செய்துள்ளனர். சென்னை பள்ளிகள் இதன் மூலம் ரூ.36 கோடி செலவில் நவீனம் செய்யப்பட உள்ளன .
இதன் மூலம் 28 பள்ளிகளில் தொடங்கப்பட்ட சிட்டி இன்வெஸ்ட்மென்ட்ஸ் டு இன்னோவேட், இன்டக்ரேட் மற்றும் சஸ்டைன் (CITIIS - சிட்டிஸ்) திட்டம் மேலும் 15 பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இது போக சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை விரிவுபடுத்துவதற்காக மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்திடம் இருந்து கூடுதலாக ரூ.80 கோடி கோரவும் சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில், வகுப்பறைகளில் உள்கட்டமைப்பு, கற்பித்தல் முறை, ஆசிரியர் பயிற்சி, விளையாட்டு போன்ற முழுமையான மாற்றத்தை CITIIS ஏற்படுத்தும். மொத்தமாக பள்ளிகளின் திட்டத்தை மாற்றும் விதமாக இந்த திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. இதன் மூலம் ஜூன் 30, 2023 இல் முடிவடைந்த CITIIS 1.0ஐ நீட்டிக்கும் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் ஜூன் 30, 2024 வரை இந்த திட்டத்தை நீட்டிக்க முடிவு செய்துள்ளது.
திட்டத்தை நீட்டிக்கும் முடிவு: திட்டத்தை நீட்டிப்பதற்கான திட்டம் பல்வேறு காரணங்களுக்காக எடுக்கப்பட்டது. டிஜிட்டல் உள்கட்டமைப்பை பள்ளிகளில் ஏற்படுத்த வேண்டும், வகுப்பறைகளை ஸ்மார்ட்டாக மாற்ற வேண்டும், பள்ளி மேலாண்மை அமைப்பு, பள்ளிக்குள் இணைய வசதி ஏற்படுத்துவது, ஹைடெக் லேப் மற்றும் ஸ்மார்ட் போர்டுகள் ஆகியவைகளை அமைப்பது போன்ற காரணங்களுக்காக இந்த திட்டத்தை நீட்டிக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
இந்தத் திட்டம் ஏற்கனவே 18 வளாகங்களில் உள்ள 28 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் 15 பள்ளிகளில் திட்டம் செயல்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது. மொத்த திட்டச் செலவு ரூ.95.25 கோடி, இதில் ரூ.19.05 கோடி (20%) சென்னை ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் மூலம் செய்யப்பட உள்ளது. மீதமுள்ள பணம், ஏஜென்ஸ் ஃபிரான்சைஸ் டி டெவலப்மென்ட் (AFD) மூலம் நிதியுதவி செய்யப்படுகிறது, இதில் மாநில அரசு 50 சதவிகித கடனை செலுத்தும், மத்திய அரசு மீதம் உள்ள 50 சதவிகித கடனை செலுத்தும்.
பள்ளிகள் மாற்றம்: இது தமிழ்நாட்டில் இடைநின்ற மாணவர்களை வீடுதேடி சென்று காரில் அழைத்து வந்த ஆட்சியர் ஒருவர் கவனம் பெற்றுள்ளார். இவரின் மூலம் ஒரே நாளில் 328 பேர் பள்ளியில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
தமிழ்நாட்டில் மாணவர்கள் இடைநிற்றலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தின்படி புதிய கல்வி ஆண்டில் வகுப்புகளுக்கு வராத மாணவர்கள் லிஸ்ட் எடுக்கப்பட்டு அதை பற்றி ஆலோசனை செய்யப்படும். அவர்களை மீண்டும் பள்ளிக்கு கொண்டு வருவது பற்றி ஆலோசனை செய்யப்படும்.
மாற்றுத் திறன் குழந்தைகள் இருந்து, அவர்கள் வகுப்புகளுக்கு சேராமல் இருந்தால் அவர்களை மீண்டும் வகுப்புகளுக்கு சேர்த்துக்கொள்வது குறித்து ஆலோசனை செய்யப்படும். இது போன்ற சிறப்பு தேவை கொண்ட மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு நடைபெறுவதை உறுதி செய்வது தொடர்பாகவும் இதில் ஆலோசனை செய்யப்படும்.
அதேபோல் இல்லம் தேடி கல்வி திட்டத்தை இன்னும் சிறப்பாக செயல்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும். அதன்படியே இந்த வருடமும் ஆலோசனைகள் செய்யப்பட்டு பள்ளிகளுக்கு வராத மாணவர்களின் லிஸ்ட் எடுக்கப்பட்டது. அவர்களிடம் பள்ளிக்கல்வித்துறை சார்பாக ஆலோசனைகள் கூட செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications