கண்டெய்னர் கடத்தல்.. ரூ.35 கோடி சுருட்டலுக்கு உடந்தையாக இருந்த சென்னை மாநகர பேருந்து ஓட்டுநர் கைது!
சென்னை: கண்டெய்னர் கடத்தல் தொடர்பாக சென்னை மாநகர பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். செப். 7 ஆம் தேதி சென்னை துறைமுகத்தில் இருந்து ரூ.35 கோடி மதிப்புள்ள எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுடன் கண்டெய்னர் கடத்தப்பட்டது. ஏற்கனவே 6 பேர் கைதான நிலையில், கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக மாநகர பேருந்து ஓட்டுநர் சங்கரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மயிலாப்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தனியார் நிறுவனம் ஒன்று சென்னை துறைமுகத்தில் சரக்குகளை கையாளும் பணியை செய்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து கண்டெய்னரில் வரும் சரக்குகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு பத்திரமாக அனுப்பி வைப்பது இந்த நிறுவனத்தின் பிரதான வேலை.

இந்த நிலையில், பெங்களூரைச் சேர்ந்த ஒரு பிரபல தனியார் நிறுவனத்திற்கு சீனாவில் இருந்து 40 அடி கண்டெய்னரில் லேப்டாப், நோட் பேட் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் கப்பலில் அனுப்பி வைக்கப்பட்டது. இது கடந்த 7-ம் தேதி சென்னை துறைமுகத்தை வந்தடைந்தது. பெங்களூரைச் சேர்ந்த நிறுவனம் கண்டெய்னரை ஏற்றி வர கடந்த 11 ஆம் தேதி ட்ரெய்லர் லாரியை அனுப்பியது
ட்ரெய்லர் லாரி டிரைவர், சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தின் யார்டுக்கு சென்று பார்த்த போது கண்டெய்னரை காணவில்லை. இது தொடர்பாக தன்னை அனுப்பிய பெங்களூர் நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு அவர் தகவல் தெரிவித்தார். இதையடுத்து, பெங்களூரைச் சேர்ந்த தனியார் நிறுவன அதிகாரிகள், வெளிநாடுகளில் இருந்து சரக்குகளை கையாளும் மயிலாப்பூர் தனியார் நிறுவன உயர் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு ரூ.35 கோடி மதிப்பிலான எலெக்ட்ரானிக் பொருட்களில் இருந்த கண்டெய்னர் எங்கே போனது என விசாரித்துள்ளனர்.
இதையடுத்து, இது தொடர்பாக மயிலாப்பூர் நிறுவன ஆபரேஷன் மேலாளர் இசக்கியப்பன் துறைமுகம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். கண்டெய்னர் டிராக்கிங் ரிப்போர்ட்டை ஆய்வு செய்தபோது, வேறொரு ட்ரெய்லரில் ரூ.35 கோடி மதிப்பிலான எலெக்ட்ரானிக் பொருட்கள் இருந்த கண்டெய்னர் எடுத்துச் செல்லப்பட்டது தெரியவந்தது.
தொடர் விசாரணையில் மைலாப்பூர் நிறுவனத்தில் பணியாற்றும் இளவரசன் என்பவர் திருட்டுக் கும்பலுடன் சேர்ந்து இந்த மோசடி வேலையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து துறைமுகம் காவல் ஆய்வாளர் சிலம்புச் செல்வன் தலைமையிலான போலீசார், திருவள்ளூர் மணவாளன் நகரில், பதுக்கி வைக்கப்பட்டிருந்த எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் இருந்த கண்டெய்னரை மீட்டனர். அதில் இருந்த 5,207 லேப்டாப்புகள் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்களும் மீட்கப்பட்டன.
இந்தச் சம்பவம் தொடர்பாக ட்ரெய்லர் லாரி உரிமையாளர் திருவள்ளூர் மணிகண்டன் (30), லாரிகளை ஏற்பாடு செய்யும் இடைத்தரகர்கள் திருவொற்றியூர் ராஜேஷ் (39), நெப்போலியன் (46), சிவபாலன் (46) , திண்டுக்கல் முத்துராஜ் (46), ட்ரெய்லர் லாரி டிரைவர் விழுப்புரம் பால்ராஜ் (32) ஆகிய ஆறு பேரை கைது செய்தனர்.
சம்பந்தப்பட்ட மைலாப்பூர் நிறுவன ஊழியர் இளவரசன், சங்கரன், டாக்குமென்ட் தயாரிப்பாளர் விக்கி ஆகிய மூன்று பேரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், சங்கரன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை மாநகர போக்குவரத்துக் கழக டிரைவராக பணியாற்றி வந்த சங்கரன், இந்த கடத்தலில் உடந்தையாக இருந்தது விசாரணையில் தெரியவந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு!












Click it and Unblock the Notifications