சென்னையில் மே மாதம் இந்த 18 நாட்களில் 37 டிகிரி செல்சியஸை தாண்டவில்லை ஏன்?.. வெதர்மேன் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மே மாதம், முதல் 18 நாட்களில், 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை கூட சென்னை நகரம் தாண்டவில்லை என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறுகையில் சென்னையில் மே மாதம், முதல் 18 நாட்களில் 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை கூட தாண்டவில்லை. வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவாகி அது புயலாக மாறி பின்னர் ஒடிஸா- மேற்கு வங்க கடற்கரையோரம் நகரும்.

அதன் பின்னர்தான் சென்னையில் வெப்பநிலை அதிகரிக்கும். அநேகமாக மே மாதம் கடைசியில் சில நாட்கள் அதிக வெப்பநிலை இருக்க வாய்ப்புள்ளது.

40 டிகிரி

40 டிகிரி

இதுவரை 3 ஆண்டுகள் மட்டுமே சென்னையில் 40 டிகிரி செல்சியஸை விட குறைவான வெப்பநிலை இருந்துள்ளது. அவை 2018, 2004, 1995 ஆகிய 3 ஆண்டுகள் ஆகும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர்

செப்டம்பர்

ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை வங்கக் கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்தத்தால் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள பகுதிகள் தவிர்த்து தமிழகம் முழுவதும் மழை பெய்யாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அரக்கோணம்

அரக்கோணம்

தமிழகத்தில் கோடைக் காலமான இந்த மே மாதம் வெயில் வாட்டி எடுத்தாலும் 37 சென்டிகிரேட்டை தாண்டவில்லை. ஆனால் வேலூர், திருத்தணி, அரக்கோணம் உள்ளிட்ட வெப்பத்தால் தகிக்கிறது.

சென்னையில் மழை

சென்னையில் மழை

எனினும் சென்னை மக்கள் மழையை எதிர்பார்த்துக் காத்து கொண்டிருக்கிறது. வரும் 23 ஆம் தேதி வங்கக் கடலில் புதிய காற்றழுத்தம் தொடங்கவுள்ளது. அதற்கு முன்னதாக மே 19 முதல் 22-ஆம் தேதி வரை சென்னையில் மழை பெய்யும் என வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+