சென்னை போலீஸ் வெளியிட்டது 'படம் அல்ல பாடம்'.. அதுக்கு போட்ட கேப்சன் தான் வேறலெவல்
சென்னை: ஆயிரம் வார்த்தைகளில் சொல்லும் விஷயத்தை ஒரு மீம்ஸ் சொல்லிவிடுகிறது. அதே விஷயத்தை வீடியோ வடிவில் மீம்ஸ் வடிவில் பல ஆயிரம் பேருக்கு உடனே போகிறது. அதனால் வீடியோ வடிவிற்கு மீம்ஸ்கள் மாறி வருகின்றன. சென்னை மாநகர காவல்துறை ஹெல்மெட்டின் அவசியத்தை மக்களுக்கு உணர்த்த விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளது.
சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை, போக்குவரத்து விதிமீறல்களை தடுக்கவும், மக்களுக்கு போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், விபத்துக்களை குறைக்கவும் பல்வேறு விஷயங்களை செய்து வருகிறது.

குறிப்பாக போக்குவரத்து விதிமீறல்களை தடுக்க சென்னை மாநகர போக்குவரத்து போலீசார், ஒவ்வொரு காவல் சரகத்திலும் தினமும் சோதனை நடத்துகிறார்கள். டிராபிக் சிக்னலை தாண்டி செல்வோர், ஹெல்மெட் அணியாமல் செல்வோர், அதிவேகமாக செல்வோர், ஒரு வழிப்பாதையில் செல்வோர், இன்சூரன்ஸ் இல்லாமல் செல்வோர், மதுபோதையில் செல்வோர், சீட் பெல்ட் அணியாமல் செல்வோர், அதிக பாரம் ஏற்றி செல்வோர், தவறான பதிவு எண் கொண்ட வாகனங்கள், ஒரே வாகனத்தில் மூன்று பேர் செல்வது, மதுபோதையில் செல்வோர் ஆகியோர் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
இது தவிர போக்குவரத்து போலீசார் நவீன தனியாங்கி சிசிடிவி கேமராக்கள் உதவியுடன் டிராபிக் சிக்னலை தாண்டி செல்வோர், ஹெல்மெட் அணியாமல் செல்வோர், அதிவேகமாக செல்வோர், ஒரு வழிப்பாதையில் செல்வோரை கண்டுபிடித்து அபராதம் விதிக்கிறார்கள்.
இதுதவிர ட்விட்டர் மூலம் போக்குவரத்து விதிமீறல்களை புகைப்படம் அல்லது வீடியோ மூலம் மக்கள் புகாராக சென்னை போக்குவரத்து போலீசாரை டேக் செய்து சொன்னாலும் நடவடிக்கை எடுக்கிறார்கள். இப்படி தினமும் ஏராளமானோர் புகார்களை தெரிவிக்கிறார்கள். அப்படி தெரிவித்த உடன் நடவடிக்கையும் எடுத்து அதற்கு பதில் அளிக்கிறது சென்னை போலீஸ்.
இது ஒருபுறம் எனில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மக்களிடம் ஒவ்வொரு பகுதி வாரியாக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று மக்கள் கருத்துக்களை கேட்டு நடவடிக்கை எடுத்து வருகிறது. சிறந்த கருத்துக்களை பரிசீலித்து அதனை நடைமுறைப்படுத்தி வருகிறது. சென்னையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைக்கான செயல்களையும் செய்து வருகிறது.
பாத்துக்க... உஷாரு...
— Greater Chennai Traffic Police (@ChennaiTraffic) June 19, 2023
தலைக்கவசம் உங்கள் உயிர் கவசம்
வீட்ல சொல்லிட்டு வாங்க...
ரோட்ல பார்த்து போங்க...#VeetlaSollittuVaanga#RoadlaPaathuPonga@tnpoliceoffl #ChennaiTraffic #helmet #RoadSigns #DoNotDrinkAndDrive #NeverOffDuty #YourSafetyOurPriority #GreaterChennaiPolice pic.twitter.com/T27fE6LSVt
இந்நிலையில் சென்னை போக்குவரத்துபோலீசார் தலைகவசத்தின் (ஹெல்மெட்) அவசியத்தை வலியுறுத்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் தலைகவசம் எவ்வளவு முக்கியம் என்பதை மீம் வீடியோவாக வெளியிட்டுள்ளது. ஒரு பூசணிக்காயை தரையில் உடைக்கும் போது எப்படி உடைகிறது என்பது முதலில் வீடியோவில் வருகிறது.
அதன்பிறகு ஹெல்மெட் அதேபோல் கீழே போடும் போது அது எந்தவிதமான சேதாரமும் இல்லாமல் இருப்பது வீடியாவில் இரண்டாவதாக வருகிறது. இறுதியாக தலைக்கவசத்தின் அவசியம் வீடியோவில் உணர்த்தப்படுகிறது. அதற்கு கேப்சனாக "தலைக்கவசம் உங்கள் உயிர் கவசம்".. "வீட்ல சொல்லிட்டு வாங்க".. "ரோட்ல பார்த்து போங்க".. என்று கூறப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பலரும் வரவேற்றுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications