சென்னை மக்களா இப்படி.. அசத்திட்டாங்களே.. மெய்சிலிர்க்க வைத்த படங்களை பாருங்க!
சென்னை: சென்னையில் போக்குவரத்து போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் சிக்னலை மீறி செல்வது பெருமளவு குறைந்துள்ளது. சிக்னலை கொஞ்சம் கூட மீறாமல், கிராஸ் லைனில் சரியாக வாகன ஓட்டிகள் நிற்கும் புகைப்படங்களை வெளியிட்டு போக்குவரத்து போலீசார் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளனர்.
ஹெல்மெட் போடாமல் பல இடங்களில் சாதாரணமாக உங்களால் முன்பு சென்னையில் வண்டி ஓட்டியிருக்க முடியும்ட. போலீஸ் இல்லை என்றால் யார் பிடிக்க போகிறார்கள் என்று பெரும்பாலும் ஹெல்மெட் போடுவதை தவிர்த்து இருப்பீர்கள். அதேநேரம் போக்குவரத்து போலீசார் சோதனை செய்யும் பகுதிகளில் மட்டும் தான் ஹெல்மெட்டுடன் சுற்றுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் சென்னையில் தற்போது களநிலவரம் தலைகீழாக மாறி உள்ளது.

செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டினாலோ, கார்களில் சீட் பெல்ட் அணியாமல் சென்றாலோ, அரை கிலோமீட்டர் சுற்றிச் செல்ல வேண்டிய சிக்னலை கொஞ்சம் கூட யோசிக்காமல் ஒருவழி பாதையில் சென்றாலோ நிச்சயம் இப்போது அபராதம் விதிப்பார்கள். சென்னையில் தானியாங்கி கேமரா உங்களை சுற்றி பல இடங்களில் இருக்கிறது. எனவே போக்குவரத்து விதிகளை மீறி நீங்கள் சென்றால் கண்டிப்பாக போலீசிடம் சிக்குவது உறுதி.
சென்னை போக்குவரத்து போலீசார் கடந்த 5 மாதங்களாக எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக போக்குவரத்து விதிகளை மீறுவதற்கு மக்கள் பயப்படும் நிலை வந்திருக்கிறது. ஏனெனில் கடந்த சில மாதங்களாக ஆபத்தான டிரைவிங், சிக்னலை மதிக்காமல் சென்றது, சிக்னலில் கோட்டை தாண்டி நின்றவர்கள், படிக்கவே முடியாத அளவிற்கு நம்பர் பிளேட் வைத்துள்ளவர்கள், ஹெல்மெட் அணியாமல் சென்றவர்கள், செல்போனில் பேசிய படி சென்றவர்கள் என பலருக்கும் சென்னை போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.
இவை தினசரி நடப்பது தான். ஆனால் சென்னையை பொறுத்தவரை வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞயிறுகளில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வளைத்து வளைத்து பிடிப்பார்கள். மது அருந்துவிட்டு போலீசிடம் மாட்டினால் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் எங்குமே இல்லாத ஒரு விஷயம் சென்னையில் இருக்கிறது என்று ஒன்றை சொல்வது என்றால், ஆன்லைன் அபராதம் முறை தான். பொதுமக்கள் தாங்கள் பார்க்கும் இடத்தில் போக்குவரத்து விதிமீறலில் யாரேனும் ஈடுபட்டிருப்பதை பார்த்தால் உடனே போட்டோ எடுத்து அல்லது வீடியோ எடுத்து சென்னை மாநகராட்சி போக்குவரத்து போலீசாரை ட்விட்டரில் டேக் செய்யலாம். அப்படி செய்தால் உடனே நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
Stopping at STOP LINE
— Greater Chennai Traffic Police (@ChennaiTraffic) August 1, 2023
Simple discipline makes,
Chennai Traffic safer & smarter!#ChennaiTraffic #helmet #NoParking #zebra #RoadSigns #DoNotDrinkAndDrive #NoHonking #NeverOffDuty #InPublicService #Police #YourSafetyOurPriority #GreaterChennaiPolice pic.twitter.com/rlQxLOWEV3
சென்னை மாநகர போக்குவரத்து போலீசாரை டேக் செய்து போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து ஆதாரத்துடன் புகார் அளித்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். நம்பர் பிளேட் தெரியும் வகையில் வாகனத்தின் புகைப்படம், புகைப்படம் எடுக்கப்பட்ட இடம் நேரத்தை சொனனால் போதும், சிசிடிவியை ஆராய்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
சென்னையில் போக்குவரத்து போலீசாரின் பல அதிரடியான நடவடிக்கைகளால் சிக்னலை மீறி செல்வது குறைந்துள்ளது. ஹெல்மெட் அணியாமல் செல்வது குறைந்துள்ளது. சென்னையில் பல விதிமீறல்கள் குறைந்துள்ளது.இந்நிலையில் சென்னை போக்குவரத்து போலீசார் சில புகைப்படங்களை பகிரிந்துள்ளனர். அந்த புகைப்படங்களில் ஸ்டாப் லைனை தாண்டி ஒரு வண்டி கூட நிற்கவில்லை. ஆணி அடித்தது போல அப்படி நிற்கிறார்கள். இந்த புகைப்படங்களை நெட்டிசன்கள் ஆச்சர்யத்துடன் பார்க்கிறார்கள்.












Click it and Unblock the Notifications