அஜித், விஜய் படத்துக்கே டஃப் தரும் போலயே.. மின்னல் வேகத்தில் விற்று தீரும் வந்தே பாரத் டிக்கெட்கள்
சென்னை: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை கோவை வந்தே பாரத் ரயில் சேவையைப் பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். இதற்கு மக்களிடையே மிகப் பெரிய ஆதரவு கிடைத்தே வருகிறது. டிக்கெட்கள் அனைத்தும் மிக வேகமாக விற்றுத் தீர்ந்து வருகிறது.
உலகளவில் மிகவும் விரிவான ரயில் நெட்வொர்க்கை கொண்ட ஒரு நாடாக இந்தியா இருக்கிறது. இந்தியாவில் கிட்டதட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கும் ரயில் சேவை இருக்கிறது.
விலையும் குறைவு, டாய்லெட் உள்ளிட்ட வசதிகள் இருப்பதால் மக்களும் ரயில்களையே பயன்படுத்த விரும்புகிறார்கள். ஆனால், தொழில்நுட்ப ரீதியாக இந்தியாவில் ரயில்கள் பின்தங்கியே இருப்பதாக விமர்சனங்கள் இருந்து கொண்டே தான் இருந்தது,

வந்தே பாரத்: இதைப் போக்கும் வகையில் வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டன. முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிவேக ரயிலான இந்த வந்தே பாரத், முற்றிலும் குளிர்சாதன வசதி கொண்டது மேலும், தானியங்கி கதவுகள், அதிவேக வைபை உள்ளிட்ட பல வசதிகளைக் கொண்டுள்ளது. இந்தியாவில் இப்போது 10+ வழித்தடங்களில் மட்டுமே இந்த வந்தே பாரத் இயங்கி வருகிறது.
மிக விரைவில் நாடு முழுக்க வந்தே பாரத் ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரைச் சென்னை- பெங்களூர்- மைசூர் இடையே வந்தே பாரத் ரயில் இருந்த நிலையில், இரண்டாவது ரயிலாகச் சென்னை - கோவை இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனைப் பிரதமர் நரேந்திர மோடி நேற்றைய தினம் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

சென்னை- கோவை: இதுவரை அனைத்து வந்தே பாரத் ரயில்களிலும் 16 பேட்டிகள் இருந்த நிலையில், சென்னை கோவை வந்தே பாரத் ரயிலில் 8 பேட்டிகள் மட்டுமே இருக்கும். இதில் இரண்டு வகையான பெட்டிகள் இருக்கிறது. ஏசி சேர் கார் கிளாஸில் சென்னையில் இருந்து கோவை செல்ல 1365 ரூபாய் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதேநேரம் சுழலும் சேர்களை கொண்ட எக்ஸிகியூடிவ் கிளாஸில் டிக்கெட் விலை 2485 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஏசி காரில் 450 டிக்கெட்களும் எக்ஸிகியூடிவ் கிளாஸில் 56 டிக்கெட்களும் இருக்கிறது. காலையில் கோவையில் இருந்து சென்னைக்கும் மாலை சென்னையில் இருந்து கோவைக்கும் இந்த ரயில் இயக்கப்பட உள்ளது. கோவையில் இருந்து காலை 6 மணிக்குப் புறப்படும் வந்தே பாரத் 11.50க்கு சென்னை வந்தடையும். இடையில் திருப்பூர் (காலை 6.35), ஈரோடு (காலை 7.12), சேலம் (காலை 7.58) ரயில் நிலையங்களில் மட்டுமே இது நிற்கும்.
அதேபோல மறுபுறம் 2.25 மணிக்குச் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு, இரவு 8.15 மணிக்குக் கோவை சென்றடையும். இது சென்னையில் இருந்து கோவைக்கு வெறும் 5.50 மணி நேரத்தில் செல்ல உள்ளது. இது இப்போது அந்த வழித்தடத்தில் இயங்கும் ரயில்களைக் காட்டிலும் ஒரு மணி நேரம் வேகமாகச் செல்கிறது. மேலும், இந்த ரயில் புதன்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்களும் இயக்கப்படுகிறது.

விற்று தீர்ந்த டிக்கெட்கள்: நேற்றைய தினம் சென்னை கோவை வந்தே பாரத் ரயில் தொடங்கிய நிலையில், இதற்கு மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. முதல் இரண்டு நாளுக்கான டிக்கெட் வெறும் 30 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தது. மக்கள் வந்தே பாரத் ரயிலில் பயணிக்க மிகவும் ஆர்வமாக இருக்கும் நிலையில், வரும் ஏப்ரல் 16ஆம் தேதி வரை அனைத்து டிக்கெட்களும் விற்றுத் தீர்த்து வருகிறது.
சென்னையில் இருந்து கோவை செல்லும் வந்தே பாரத் ரயிலில் வரும் ஏப்ரல் 16ஆம் தேதி வரை டிக்கெட்கள் வெயிட்டிங் லிஸ்டில் தான் இருக்கிறது. வரும் நாட்களில் அதற்கு பிந்தைய நாட்களுக்கான டிக்கெட்களும் விற்றுத் தீரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, நேற்றைய தினம் பிரதமர் முன்னிலையிலேயே முதல்வர் ஸ்டாலின் வந்தே பாரத் டிக்கெட் விலையைக் குறைக்கக் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications