கோவையில் காபி, சேலத்தில் டிபன், சென்னையில் லஞ்ச், மோடி துவங்கி வைத்த வந்தே பாரத் ரயிலின் சிறப்புகள்
சென்னை: சென்னை - கோவை வழிதடத்தில் வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி சென்னை சென்ட்ரலில் இருந்து தொடங்கி வைத்துள்ளார். தமிழ்நாட்டிற்குள் மட்டும் ஓடும் முதல் புல்லட் ரயிலாக பார்க்கப்படும் சென்னை கோவை வந்தே பாரத் ரயில் கட்டணம், சிறப்பு அம்சங்கள் மற்றும் இயக்கப்படும் நேரம், உணவு கட்டணம் ஆகியவற்றை இப்போது பார்ப்போம்.
சென்னை கோவை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில், வாரத்தில் புதன்கிழமை தவிர பிற 6 நாட்கள் இயங்க உள்ளது. சென்னை -கோவை இடையே 3 ரயில் நிலையங்களில் இந்த ரயில் சேலம், ஈரோடு, திருப்பூர் ரயில் நிலையங்களில் நின்று செல்ல உள்ளது. தினமும் காலை 6 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் 'வந்தே பாரத்' எக்ஸ்பிரஸ் ரயில் (எண்: 20644) காலை 11.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சென்றடையும்.

ரயில் அட்டவணை
இந்த கோவை-சென்னை வந்தே பாரத் ரயில் காலை 6.35 மணிக்கு திருப்பூரை அடையும். அங்கிருந்து 6.37 மணிக்கு புறப்பட்டு காலை 7.12 மணிக்கு ஈரோடு செல்லும். அங்கிருந்து காலை 7.15 மணிக்கு புறப்பட்டு காலை 7.58 மணிக்கு சேலம் செல்லும். சேலத்தில் இருந்து 8 மணிக்கு புறப்பட்டு காலை 11.50 மணிக்கு சென்னை சென்ட்ரலை அடைய உள்ளது.

சென்னை முதல் கோவை நேரம்
மறுமார்க்கமாக சென்னை சென்ட்ரலில் இருந்து மதியம் 2.25 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் மதியம் இரவு 8.15 மணிக்கு கோவை ரயில் நிலையத்தை அடையும். முன்னதாக இந்த ரயில் சேலத்துக்கு மாலை 5.48 மணிக்கு வந்து 5.50 மணிக்கு புறப்படும். ஈரோட்டுக்கு மாலை 6.32 மணிக்கு வந்து மாலை 6.35 மணிக்கு புறப்பட்டு செல்லும். அதை தொடர்ந்து 7.13 மணிக்கு திருப்பூர் செல்லும் ரயில் அங்கிருந்து 7.15 மணிக்கு புறப்பட்டு இரவு 8.15 மணிக்கு கோவையை அடையும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

வந்தே பாரத் ரயிலுக்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கிவிட்டது. சென்னையில் இருந்து வெறும் ஆறு மணி நேர பயணத்தில் கோவை செல்ல முடியும் என்பதும், சேலத்திற்கு வெறும் 3.45 மணி நேரத்தில் செல்ல முடியும் என்பதால் பெரிய அளவில் வரவேற்பு இருக்கும்.
வந்தே பாரத் கட்டணம்
சரி இந்த வந்தே பாரத் ரயிலில் டிக்கெட் கட்டணம் எவ்வளவு என்பதை பார்ப்போம். இந்த ரயிலில் உணவுக்கான கட்டணமும் டிக்கெட்டில் சேர்க்கப்பட்டுள்ளது. அந்த வகையில், குளிர்சாதன chair car டிக்கெட் கட்டணம் 1215 ரூபாயாகவும், குளிர்சாதன executive chair car டிக்கெட் கட்டணம் 2310 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் உணவு வேண்டாம் என்பவர்களுக்கு முறையே 10 57 ரூபாய் மற்றும் 2116 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. நாளை முதல் இந்த ரயிலில் பயணிகள் செல்ல முடியும். சென்னையில் ஏறினால் சேலத்தில் தான் நிற்கும்,அதன்பிறகு ஈரோடு,திருப்பூரில் நிற்கும் இறுதியாக கோவையில் நிற்கும். தற்போது தமிழகத்தில் உள்ள ரயில்களிலேயே இதுதான் அதிவேக ரயிலாக உருவெடுத்துள்ளது. 500 கிலோ மீட்டர் தூரமுள்ள சென்னை டூ கோவையை வெறும் 5 மணி நேரம் 50 நிமிடங்களில் அடைய முடியும்.













Click it and Unblock the Notifications