அடங்காத ராசாக்கள்.. பஸ் கூரை மீது ஏறி அடாவடி.. தொங்கியபடி லூட்டி.. மடக்கி பிடித்த போலீஸ்!
பஸ் கூரை மீது டான்ஸ் ஆடிய 2 கல்லூரி மாணவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர்
Recommended Video
சென்னை: அப்படியே தொங்கி கொண்டு.. ஒரு கையால் தட்டி தாளம் போட்டு, பாட்டு பாடினார்கள் 2 மாணவர்கள்.. பிறகு பஸ் மேலே நின்று டான்ஸ் ஆடவும், போலீசார் அவர்களை மடக்கி பிடித்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை போலீஸ் பலமுறை வார்னிங் தந்தும் கல்லூரி மாணவர்கள் பஸ்ஸில் செய்யும் அட்டகாசத்தை தடுத்து நிறுத்த முடியவில்லை.. எத்தனையோ முறை கைது நடவடிக்கை எடுக்கப்பட்டும், இவர்களை வழிக்கு கொண்டு வரவும் முடியவில்லை.

சென்னை மந்தைவெளியில் இருந்து 21 நம்பர் பஸ் ஒன்று பிராட்வே நோக்கி சென்று கொண்டிருந்தது. ராயப்பேட்டை பஸ் ஸ்டாப்பில் பஸ் நின்றதும், நியூ காலேஜ் மாணவர்கள் 20க்கும் மேற்பட்டோர் பஸ்சில் ஏறி கொண்டனர்.
பஸ் கிளம்பி சென்றுகொண்டிருந்தபோது, திடீரென 2 மாணவர்கள் மட்டும் பஸ்ஸின் ஜன்னலை பிடித்து தொங்க ஆரம்பித்தனர்.. பிறகு பஸ்ஸின் பக்கவாட்டிலும் தொங்கினர். அப்படியே தொங்கி கொண்டு ஒரு கையால் பஸ்ஸை தட்டி தாளம் போட்டு, பாட்டு பாட ஆரம்பித்தனர்.. இதை சக நண்பர்கள் பஸ் பின்னாடியே பைக்கில் வந்து பார்த்து ரசித்தனர்.. பிறகு செல்போனிலும் வீடியோ எடுத்தனர்.
அதற்குள் பஸ் அண்ணாசாலை வந்தது.. அப்போது அதே 2 மாணவர்களும், பஸ் கூரை மீது ஏறி டான்ஸ் ஆட ஆரம்பித்தனர்.. இதை பார்த்து பொதுமக்கள் கடுமையான அதிர்ச்சி அடைந்தனர்.. உடனடியாக திருவல்லிக்கேணி போலீசுக்கு தகவலும் தந்தனர். இதையடுத்து, சிம்சன் பஸ் ஸ்டாண்டுக்கு போலீசார் வந்து தயாராக நின்று கொண்டனர்.
அந்த பஸ் பிறகு வந்து நின்றது.. ஆனால் போலீசாரை பார்த்ததும் 2 மாணவர்களும் பஸ்ஸில் இருந்து குதித்து தப்பித்து ஓட முயன்றனர்.. ஆனால் போலீசார் விரட்டி சென்று 2 பேரையும் பொதுமக்கள் உதவியுடன் மடக்கி பிடித்தனர்.. 2 பேர் வீட்டிலிருந்தும் பெற்றோர் வரவழைக்கப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.. இனி இப்படி செய்ய மாட்டோம் என்று எழுதி வாங்கி கொண்டபிறகே போலீசார் அவர்களை விடுவித்தனர்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications