சென்னை லோக்கல் ரயிலில் போறீங்களா? இனி கவலையே வேண்டாம்.. வீட்டில் இருந்தபடியே டிக்கெட் எடுக்கலாம்
சென்னை: சென்னை லோக்கல் ரயிலில் பயணம் செய்பவர்கள் இனி வீட்டில் இருந்தபடியே லோக்கல் ரயில் டிக்கெட்டுகளை எடுக்கலாம். இதற்காக ரயில்வே நிலையத்தில் வரிசையில் நிற்க வேண்டியது இல்லை.
சென்னையில் இந்த வசதியை ஏற்படுத்துவதற்காக புதிதாக UTS என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. UTS செயலி மூலம் ஆன்லைன் முன்பதிவை ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளதால், புறநகர் ரயிலுக்கான டிக்கெட்டுகளை வாங்க பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியதில்லை.

பயணிகள் இப்போது பிளாட்பார்ம் டிக்கெட்டுகள், புறநகர் மற்றும் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளுக்கான டிக்கெட்டுகளை தங்கள் வீட்டிலிருந்து மற்றும் ஸ்டேஷனுக்கு வெளியில் இருந்து வாங்கலாம்,. டிக்கெட் முன்பதிவு செய்த இரண்டு மணி நேரத்திற்குள் நிலையத்தை அடைந்து அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
எப்படி புக் செய்வது: UTS செயலியை டவுன்லோட் செய்ய வேண்டும்.
அதில் உங்கள் போன் நம்பர் கொடுத்து லாக் இன் செய்ய வேண்டும் .
அதை லாக் இன் செய்த பின் அதில் எங்கிருந்து செல்ல வேண்டும்.. எங்கே செல்ல வேண்டும் என்பதை குறிப்பிட வேண்டும்.
அதற்கான கட்டணம் காட்டப்படும்.
அதை யுபிஐ, ஆன்லைன் பேங்கிங் மூலம் செலுத்தலாம்., வாலாட் தொகையை ரீசார்ஜ் செய்தும் கூட அதை பயன்படுத்தலாம்.
அதன்பின் டிக்கெட் க்யூ ஆர் கோடு முறையில் காட்டப்படும். அதில் செல்லும் இடம். எங்கிருந்து செல்கிறீர்கள் என்ற விவரம் இருக்கும்.
அதை ரயில்வே நிலையத்தில் டிடி கேட்கும் பட்சத்தில் காட்டி பயணம் செய்யலாம்.
ரயில் புக்கிங் பற்றிய முக்கிய தகவல்: இந்த ரயிலில் பொதுவாக பல்வேறு இருக்கைகள் முன் பதிவில் கிடைக்கும். அதாவது அப்பர், மிடில், லோயர், சைடு அப்பர், சைடு லோயர். இதில் ஒவ்வொருவர் .. ஒவ்வொரு மாதிரியான இருக்கைகளை விரும்புவார்கள்.
உங்களின் வயதுக்கு ஏற்ப இருக்கைகள் உங்களுக்கு ரயில்வே மூலம் ஒதுக்கப்படும். இந்த பெர்த் அனைத்திற்கும் ஒரே விதிகள் கிடையாது. விதிகள் அனைத்திற்கும் தனி தனி. அதாவது நீங்கள் ரயிலில் பயணிக்கும் போது உங்களுக்கு எந்த பெர்த் கிடைக்கிறதோ அந்த பெர்த்துக்கு ஏற்றபடி உங்களுக்கான விதிகள் மாறுபடும். இது தொடர்பாக ரயில்வே துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.
என்ன விதிகள்?: சைடு அப்பர் - நீங்கள் சைடு அப்பரில் இருந்தால் எப்போது வேண்டுமானாலும் தூங்கலாம். அங்கே உங்களுக்கு எந்த தொந்தரவும் கிடையாது. உங்களுக்கு மேல் உள்ள விளக்கை 10 மணிக்கு மேல் இரவில் எரிய விட கூடாது. நீங்கள் பகல் நேரத்தில் சைடு லோயரில் இருக்க விரும்பினால் இருக்கலாம். ஆனால் இரவு 10க்கு மேல் சைடு லோயரில் நீங்கள் அமர கூடாது.
சைடு லோயர் - நீங்கள் சைடு லோயரில் இருந்தால் எப்போது வேண்டுமானாலும் தூங்கலாம். ஆனால் சைடு அப்பரில் உள்ளவர் கீழே அமர விரும்பினால் அவருக்கு பகல் நேரத்தில் மட்டும் இடம் கொடுக்க வேண்டும். அதாவது இரவு 10 மணி வரை மட்டும் இருக்கைகளை பகிர நீங்கள் அனுமதிக்கலாம். அதன்பின் சைடு அப்பரில் உள்ளவர் அவரின் இடத்திற்கு செல்ல வேண்டும்.
லோயர் - நீங்கள் லோயரில் இருந்தால் எப்போது வேண்டுமானாலும் தூங்க முடியாது. 10 மணிக்கு பின்தான் தூங்க வேண்டும். அதுவரை மிடில் சீட்டில் இருப்பவர் உங்களுடன் அமர இடம் கொடுக்கப்பட வேண்டும். மிடில் சீட்டை தூக்காமல், அவரை உங்களுடன் அமர வைக்க அனுமதிக்க வேண்டும். ஒருவேளை மிடில் சீட்டில் இருப்பவர் உங்களை அனுமதித்தால் நீங்கள் பகலிலும் தூங்கிக்கொள்ள முடியும். அதாவது இரவு 10 மணி வரை மட்டும் இருக்கைகளை பகிர நீங்கள் அனுமதிக்கலாம். அதன்பின் மிடிலில் உள்ளவர் அவரின் இடத்திற்கு செல்ல வேண்டும்.
லோயர் பர்த்: இனிமேல் ரயிலில் யாருக்கெல்லாம் லோயர் பர்த் கிடைக்கும் என்பது தொடர்பான விதிகளை இந்திய ரயில்வே நிர்வாகம் வெளியிட்டு உள்ளது. அதன்படி கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு லோயர் பர்த் வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மிடில் பர்த்: நீங்கள் மிடிலில் இருந்தாலும் எப்போது வேண்டுமானாலும் தூங்க முடியாது. 10 மணிக்கு பின்தான் தூங்க வேண்டும். அதுவரை லோயர் சீட்டில் இருப்பவருடன் அமர வேண்டும். மிடில் சீட்டை தூக்கி லோயர் சீட்டில் இருப்பவர்களுக்கு உட்கார முடியாமல் இடையூறு கொடுக்க முடியாது. ஒருவேளை லோயர் சீட்டில் இருப்பவர் உங்களை தூங்க அனுமதித்தால் மட்டுமே நீங்கள் பகலிலும் மிடிலில் தூங்கிக்கொள்ள முடியும். அதாவது இரவு 10 மணி வரை மட்டும் இருக்கைகளை பகிர நீங்கள் அனுமதிக்கலாம். அதன்பின் மிடிலில் உள்ளவர் அவரின் இடத்திற்கு சென்று தூங்க முடியும்.
அப்பர் - அப்பரில் இருப்பவர் யாருடனும் இருக்கையை பகிர வேண்டியது இல்லை. அவர் எப்போது வேண்டுமானாலும் தூங்கலாம். இந்த விதிகளை சக பயணிகள் மதிக்கவில்லை எனில் நீங்கள் ஆர்டிஓவிடம் புகார் அளிக்கலாம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications