Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ம்ஹூம்.. இது சரிப்படாது.. தமிழகம் முழுவதுமே டெஸ்ட்களை அதிகப்படுத்த வேண்டும்.. சுதாரிப்பு அவசியம்!

பரிசோதனைகள் தமிழகம் முழுவதும் அதிகரிக்கப்பட வேண்டும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இது சரிப்படாது.. இப்படியே போனால் நிலைமை சீராகவும் செய்யாது.. ஒட்டுமொத்த தமிழகம் முழுவதுமே டெஸ்ட்களை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்.. ஒவ்வொரு மாவட்டத்திலும் பரிசோதனைகளை பல மடங்கு அதிகரித்தால்தான் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த வைரஸ் தமிழகம் முழுவதும்தான் பரவியிருந்தது.. அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள், மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பால் இந்த பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. அதனால் தொற்று இல்லா மாவட்டங்கள் பல உருவாகின. இதை அனைத்துமே ஏற்றுக் கொள்ளக்கூடியதுதான்.

chennai corona: tests should be increased throughout tamil nadu

ஆனால், தொற்று இல்லா மாவட்டமாக அறிவித்தபோது, அந்த மாவட்டத்தில் உள்ள அனைவருக்குமே டெஸ்ட் செய்யப்பட்டுவிட்டதா? எல்லோருமே பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்களா என நமக்கு உறுதியாக தெரியவில்லை.

நேற்று மாவட்ட வாரியாக தமிழக அரசு டெஸ்ட் பட்டியல் வெளியிட்டது.. அதன்படி, சென்னையில் மேற்கொள்ளப்படும் டெஸ்ட்களில் 100-ல் 14 பேருக்கு தொற்று கண்டறியப்படுகிறது. இந்த அளவுக்கு தொற்று உள்ளது, போதுமான டெஸ்ட்கள் சென்னையில் செய்யப்படவில்லை என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது.
இதில் சென்னைக்கு பக்கத்திலேயே உள்ள திருவள்ளூரின் தொற்று சதவீதம் மிக அதிகம் என்பது கவனிக்கப்பட வேண்டியதாக உள்ளது.

திண்டுக்கல், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, திருப்பூர் மாவட்டங்களில் மிக குறைவான டெஸ்ட்டுகளே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது.. மேலும் தமிழ்நாட்டில் சராசரியாக 10 லட்சம் பேரில் 6420 டெஸ்ட்கள் செய்யப்பட்டுள்ளன... 12 மாவட்டங்களில் மட்டுமே இதை விட அதிக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதை தவிர, மதுரையில் டெஸ்ட்டுகள் போதுமானதாக நடக்கவில்லை என்று எம்பி சு.வெங்கடேசன் பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டி உள்ளார்... "மதுரையில் ஒவ்வொருமுறையும் ஆய்வு கூட்டங்களை நடத்திவிட்டு அதிகமான டெஸ்ட்கள் செய்யப்படுகின்றன என்று வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் மீடியாக்களில் சொல்லி வந்தார்.. இதை நாமும் உண்மை என்றே நம்பி வந்தோம்.. ஆனால் தமிழக அரசு அறிவித்துள்ள புள்ளிவிவரம் என்பது மிகப்பெரிய அதிர்ச்சி அளிக்கின்றது. ஒருநாளைக்கு 250 டெஸ்டுகள் மட்டுமே எடுக்கப்பட்டுள்ளன... இதில் உடனடி மாற்றம் தேவை.. தினமும் 3 ஆயிரம் டெஸ்டுகள்" என்று கோரிக்கையும் வைத்திருந்தார்.

ஒட்டுமொத்தமாகவே டெஸ்ட் குறைவாக இருக்கிறது என்றுதான் அனைவரும் கருத்து முன்வைத்து வருகின்றனர்.. விசிக தலைவர் திருமாவளவனும் சொல்லும்போது,
"தமிழகத்தில் டெஸ்ட்கள் அதிகளவில் இல்லை என்பதால் சமூக பரவல் அதிகரித்துள்ளது-. இதில், கொரோனாவால் உயிரிழந்தோரின் சதவிகிதத்தை அரசு குறைத்து காட்டுவது மிகவும் ஆபத்தானது'என்றும் கூறியிருந்தார்.

அரசின் முழு கவனமும் இப்போதைக்கு சென்னையிலேயே உள்ளதால், மாவட்டங்களில் டெஸ்ட் என்பது குறைவாகவே உள்ளது.. பல மாவட்டங்களில் இந்த டெஸ்ட்டுகள் இன்னும் சில ஆயிரத்தைக் கூட தாண்டவில்லை என்பது வேதனை.. கோவை, சேலம் போன்ற மாநகராட்சிகளில்தான் 20 ஆயிரத்திற்கும் மேல் டெஸ்ட் போயுள்ளது.

அதனால் தமிழகம் முழுவதுமே பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்... அதுவும் போர்க்கால அடிப்படையில் அதிகரிக்க வேண்டும்... அப்போதுதான் தமிழகம் முழுவதும் உள்ள நிலவரம் தெரிய வரும்.. சரி செய்யவும் ஏதுவாக இருக்கும்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+