திமுக வட்டச் செயலாளரால் உயிருக்கு ஆபத்து! விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர் பரபரப்பு புகார்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக வட்டச் செயலாளரால் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக சென்னை மாநகராட்சியின் 135வது வார்டு விசிக கவுன்சிலர் சாந்தி பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

திமுகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் கூட்டணியில் இருந்து வரும் நிலையில் அதில் விரிசலை ஏற்படுத்தும் வகையிலான நிகழ்வு ஒன்று சென்னையில் நடந்துள்ளது.

திமுகவினருக்கு ஒரு முறை இரு முறை அல்ல பலமுறை கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் அறிவுறுத்தியும் பலரும் அதை கேட்டதாக தெரியவில்லை.

திமுக விசிக

திமுக விசிக

திமுகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் ஒரே கூட்டணியில் இருந்து வரும் நிலையில் இரண்டு கட்சிகளின் தலைமைக்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறார் திமுக வட்டச் செயலாளர் செல்வக்குமார். சென்னை அசோக்நகர் 135வது வார்டு மாமன்ற உறுப்பினராக இருப்பவர் சாந்தி. இவர் தனது வார்டுக்குட்பட்ட பகுதியில் மக்கள் நலப் பணிகளை செய்யச் சென்ற போது அவரை தடுத்து நிறுத்தி ஒருமையில் பேசியதுடன் இந்தப் பக்கமே வரக்கூடாது என மிரட்டி அனுப்பியிருக்கிறார்.

திமுக வட்டச் செயலாளர்

திமுக வட்டச் செயலாளர்

இது குறித்து புகார் தெரிவித்துள்ள விசிக கவுன்சிலர் சாந்தி, திமுக வட்டச் செயலாளர் செல்வக்குமார் அவரது மகளை விட்டு தன்னை செருப்பால் அடிக்க முயன்றதாகவும், நான்தான் கவுன்சிலர் உனக்கென்ன இங்கு வேலை எனக் கேட்டு தன்னை துரத்துவதாகவுமந்தெரிவித்துள்ளார். மேலும், திமுக வட்டச் செயலாளர் செல்வக்குமாரால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும் கூறி அதிர வைத்துள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர் சாந்தி.

திருமா கவனத்திற்கு

திருமா கவனத்திற்கு

ஒரு வட்டச் செயலாளர் செய்த தவறு ஒட்டுமொத்த கட்சிக்கும் நெகட்டிவ் இமேஜை ஏற்படுத்திவிட்டதால் இந்த விவகாரத்தில் திமுக கடும் நடவடிக்கை எடுக்கத் தயாராகிவிட்டது. இதனிடையே திமுக வட்டச் செயலாளர் விசிக பெண் கவுன்சிலரை மிரட்டிய விவகாரம் திருமாவளவன் கவனத்திற்கும் செல்லப்பட்டதாக தெரிகிறது. விசிக பெண் கவுன்சிலர் சாந்தியை திமுக வட்டச் செயலாளர் செல்வக்குமார் மிரட்டல் விடுத்ததற்காக காரணம் வெளியாகவில்லை.

அமைச்சர் மா.சுப்ரமணியன்

அமைச்சர் மா.சுப்ரமணியன்

சம்பந்தப்பட்ட வட்டச் செயலாளரை அமைச்சர் மா.சுப்ரமணியன் அழைத்து கடுமையாக டோஸ் விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. திமுக விசிக நிர்வாகிகள் இடையே ஏற்பட்டுள்ள இந்த பிணக்கு தமிழக அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+