மொத்த சென்னைக்கு வரப்போகுது அறிவிப்பு.. மாநகராட்சி அடுத்த ஆக்ஷன்.. விளம்பர பேனர்கள் வைக்க முடிவு?
சென்னை: சென்னை மாநகரப் பகுதிகளில் விளம்பர பலகைகளை நிறுவுவதற்கு குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
இந்தியா முழுவதுமே கடந்த சில மாதங்களாக கடும் வெப்பம் வாட்டி வதைத்து வந்தது.. இதன் தாக்கத்தால் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பலத்த காற்று, இடி, மின்னலுடன் மழையும் பெய்தது.. குறிப்பாக மே மாதம் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கனமழை கொட்டி தீர்த்தது.

பெட்ரோல் பங்க்: அந்தவகையில், மே, 13-ம் தேதி புழுதி புயல் வீசியது... இதில் மும்பையின் காட்கோபர் செட்டாநகர் சந்திப்பில் வைக்கப்பட்டிருந்த 120 அடி உயர ராட்சத விளம்பர பலகை பெட்ரோல் பங்க் மீது விழுந்தது. இதில் சிக்கிக்கொண்ட 16 பேர் உடல் நசுங்கி உயிரிழந்துவிட்டனர்.. 70-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்... மாநகராட்சி நிர்வாகம் நடத்திய விசாரணையில், அந்த விளம்பரப் பலகை, மாநகராட்சி அனுமதியில்லாமலேயே வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் ஏற்படுத்தியிருந்த நிலையில், சென்னை மாநகரில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை அகற்றுமாறு மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், மண்டல அதிகாரிகளுக்கு அப்போதே உத்தரவிட்டிருந்தார்.. இதனடிப்படையில் விளம்பர பலகைகளை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக இறங்கினார்கள்.
நீக்கம்: கிட்டத்தட் 460-க்கும் மேற்பட்ட விளம்பரப் பலகைகளை மாநகராட்சி நிர்வாகம் நீக்கியிருக்கிறது. அதில் 30 அடி உயரத்துக்கு மேல் வைக்கப்பட்டிருந்த 250 விளம்பரப் பலகைகள் அடியோடு நீக்கப்பட்டுள்ளன.
எனினும், விளம்பர பலகைகளை வைக்க அனுமதி வேண்டி, 1,100 விண்ணப்பங்கள் சென்னை மாநகராட்சியில் குவிந்திருந்தன.. இந்நிலையில், மாநகராட்சியின் விளம்பர பலகைகளுக்கு அனுமதி வழங்கும் குழுவானது, பரிசீலிப்பது தொடர்பாக கூடி விவாதித்துள்ளது. இந்த கூட்டத்தில்தான், சென்னை மாநகரப் பகுதிகளில் விளம்பரப் பலகைகளை நிறுவுவதற்கு உரிமம் வழங்குவது குறித்தும், ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
அனுமதி?: இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் சொல்லும்போது, "தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாநகராட்சி மண்டல அலுவலர்களுக்கு அனுப்பி, விளம்பரப் பலகை வைக்க உள்ள கட்டிடத்தின் உறுதித் தன்மையை ஆராயவும், காவல்துறையின் தடையின்மை சான்றிதழை பெறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த 2 சான்றிதழ்களும் கிடைத்ததுமே விளம்பரப் பலகைகளுக்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இதன் மூலம் மாநகராட்சிக்கு வருடத்துக்கு ரூ.30 கோடி வருவாய் கிடைக்கும்.. ஆனால், இப்போது வரை எந்த விளம்பரப் பலகைகளுக்கும் உரிமம் தரப்படவில்லை.. யாராவது அனுமதியின்றி விளம்பர பலகை வைத்திருந்தால், அது விதிமீறலாகவே கருதப்படும்" என்று கூறியுள்ளனர்.
-
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
பெங்களூரு, மும்பை எல்லாம் ஓரம் போ.. சம்பள உயர்வு அதிகம் கொடுப்பதில் இந்த சிட்டிதான் டாப்! -
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications