சென்னையில் வீடு கட்டறீங்களா? 1000 சதுர அடிக்கு மேல் கட்டினால் இப்படித்தான்.. வருகிறது புதிய கட்டணம்
சென்னை: சென்னையில் வீடு கட்டுபவர்களுக்கு, முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.. இதுகுறித்து சென்னை மாநகராட்சியின் தீர்மானங்கள் பெரிதும் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

பொதுவாக, எவ்வளவு மனை அளவு வைத்திருக்கிறோமோ, அந்த அளவுக்கு வீடு கட்டிக்கொள்வதற்கான விதிமுறைகள் அனுமதிப்பதில்லை... உதாரணத்துக்கு, 1,200 சதுர அடி மனை வாங்கினாலும்கூட, வீட்டினை இங்கு முழுமையாக கட்ட முடியாது.
அந்த வீட்டை சுற்றி 4 பக்கங்களிலும் இடம்விட வேண்டும்.. எவ்வளவு இடம்விட வேண்டும் என்பதெல்லாம் இடத்துக்கு இடம் மாறுபடும்... அதாவது மாநகராட்சிப் பகுதிகள் என்றால் ஒருவிதம், நகராட்சி என்றால் வேறுவிதம் என்ற வரைமுறைகள் பல உள்ளன.
சென்னை மாநகராட்சி: கடந்த ஆகஸ்ட் மாதம், ஒரு புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டது. அதன்படி, சென்னை மாநகராட்சி, கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் குறைந்தபட்ச வழிகாட்டி மதிப்பு சதுர அடிக்கு ரூ.1000 ஆக நிர்ணயிக்கப்பட்டது.. எப்போதுமே ஏரியாவுக்கு தகுந்த மாதிரி, வழிகாட்டி மதிப்பு இருக்கக்கூடும்..
அந்தவகையில். ஆவடி, தாம்பரம், காஞ்சிபுரம் மாநகராட்சிகளில் குறைந்தபட்ச வழிகாட்டி மதிப்பு ரூ.800-ஆகவும் இதுபோல தமிழகமெங்கும் அறிவிப்புகள் வெளியாகி, மதிப்பை மாற்றி அமைக்கப்பட்டது. எனவே, இதன்மூலம் மதிப்பு குறைவான இடங்களிலும் இனி விலை உயரும் என்றும் கணிக்கப்பட்டது. இப்படிப்பட்ட சூழலில், கட்டிட அனுமதிக்கான கட்டணம் 100 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
திடீர் முடிவு: சென்னையில் நடைபெற்ற மாநகராட்சி மன்ற கூட்டத்தில் இப்படியொரு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.. சென்னையில் கட்டிட அனுமதிக்கான கட்டணங்களை உயர்த்தும் தீர்மானமும் கூட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.. அதன்விவரங்கள் இதுதான்:
"1000 சதுர அடிக்கு மேல் வீடு, கட்டிடங்கள் கட்டினால் 100 சதவீதம் வரை கட்டணம் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.. அதேபோல, ஏழைகளை பாதிக்காத வகையில் 40 சதுர மீட்டருக்கு குறைவான இடத்தில் வீடு கட்டுபவர்களுக்கு 10 சதுர மீட்டருக்கு 90 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
அனுமதி கட்டணம்: அதே போல் 41 முதல் 100 சதுர மீட்டருக்குள் வீடு கட்டுபவர்களுக்கு, 10 சதுர மீட்டருக்கு ரூ.155 கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. நடுத்தர குடும்பத்தினர் நலன் கருதி இந்த கட்டிட அனுமதிக்கான கட்டணம் உயர்த்தப்படவில்லை. 100 சதுர மீட்டருக்கு மேல் அதாவது 1076 சதுர அடிக்கு மேல் வீடு கட்டினால் கட்டிட அனுமதி கட்டணம் 100 சதவீதம் அதிகரிக்கப்படுகிறது.
அதாவது 101 சதுர மீட்டர் முதல் 401 ச.மீட்டர் அளவுக்கு (4316 சதுர அடி) வீடுகள் கட்டும்போது 10 ச.மீட்டருக்கு ரூ.1,050 ஆக இருந்த கட்டணமானது, தற்போது ரூ.2 ஆயிரத்து 100 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது வணிக கட்டிடங்களாக இருந்தால், ரூ.2300 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.. இதேபோல், பழைய கட்டிடங்களை இடிப்பதற்கு அனுமதி கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது" போன்ற தீர்மானங்கள் மாநகராட்சி மன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன..
நடைமுறை: சென்னை மாநகராட்சியின் வருமானத்தை அதிகரிக்க ஏதுவாக இந்த கட்டண திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதன்படி, இப்புதிய கட்டணம், வருகிற 10-ந் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் கூடுதலாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications