எல்லா பக்கமும் நாய்க்கடி சம்பவங்கள்.. நாய் வளர்ப்பவர்களுக்கு மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் அட்வைஸ்
சென்னை: சென்னையில் நாய் கடித்து மக்கள் காயமடையும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், நாய் வளர்ப்பவர்களுக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் அட்வைஸ் கூறியுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை கடந்த மே 5ஆம் தேதி இரண்டு நாய்கள் கடித்து குதறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல சென்னை பரங்கிமலை காவலர் குடியிருப்பில் சிறுவன் ஒருவரை வளர்ப்பு நாய் ஒன்று கடித்தது.

தொடர்ந்து, இன்று சென்னை சூளைமேட்டில் பெண் ஒருவரை நாய் கடித்த நிலையில் காப்பாற்ற வந்த அவரது கணவரையும் நாய் கடித்துள்ளது. நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் நாய் வளர்ப்பவர்களுக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் அட்வைஸ் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், "சென்னையில் 2 ராட்வெய்லர் நாய்கள் கடித்து குதறி படுகாயம் அடைந்த குழந்தையை பார்க்கும் போது வேதனையாக உள்ளது. குழந்தையின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அறுவை சிகிச்சை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குழந்தையின் மருத்துவ சிகிச்சைக்கான செலவு குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.
மதுரைக்கு அப்புறப்படுத்தப்பட்ட ராட்வீலர் நாய்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். நாய்க்கடிக்கு ஆளாகுபவர்களின் நிலையை, நாய் வளர்ப்பவர்கள் புரிந்து செயல்பட வேண்டும். நாய்கள் வளர்க்க உரிமம் கட்டாயம், மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லை. மாடு முட்டுவது, நாய் கடிப்பது என்பது தேசிய அளவிலான பிரச்சினை. இதற்கு தேசிய அளவிலான விவாதம் தேவை.
குறிப்பிட்ட சில நாய் இனங்களை இறக்குமதி செய்ய, விற்பனை செய்ய, இனப்பெருக்கம் செய்ய டெல்லி ஐகோர்ட் தடை விதித்தது. டெல்லி உயர்நீதிமன்ற தடைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட உயர்நீதிமன்றங்கள் இடைக்கால தடை விதித்துள்ளன. நாய் உள்ளிட்ட எந்தவொரு விலங்குகளுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க எந்த அதிகாரமும் எங்களுக்கு கிடையாது. நாய் கடித்தால் அதன் உரிமையாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்." எனத் தெரிவித்தார்.
-
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications