ஸ்டாலினின் கனவு திட்டத்தில் அதிரடி.. சென்னையில் 2 லட்சம் மரக்கன்றுகள்.. உறுதி தந்த கமிஷனர் ககன்தீப்
சென்னையில் 2 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளதாக ககன்தீப் தெரிவித்துள்ளார்
சென்னை: சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 2 லட்சம் மரங்கள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகரம் முழுவதும் மரம் வளர்ப்பு முறையை மாநகராட்சி துரிதப்படுத்தி வருகிறது.. இதற்காக ஆணையர் ககன்தீப் சிங் பேடி பெரும் முயற்சி எடுத்து வருகிறது.
கடந்த மாதம் கூட, 200க்கும் மேற்பட்ட குடியிருப்பு நல சங்கங்களுடன் ஆலோசனை கூட்டம் ஒன்றை மாநகராட்சி கமிஷனர் நடத்தினார்..

வேண்டுகோள்
அப்போது, குடியிருப்பும் நல சங்கங்களும் குறைந்தது ஒரு ஆண்டுக்கு 500 க்கும் மேற்பட்ட மரங்கள் நடவேண்டும் என்றும், 6 அடி உயரத்தில் இருந்தால் அவை பாதுகாப்பாக வளரும் சூழல் இருக்கும் என்றும் அவர்களிடம் கேட்டுக் கொண்டிருந்தார். மேலும், அப்போது அவர் பேசும்போது, சென்னை பசுமையாக இருக்க வேண்டும் என்பது எங்களது நோக்கம், அதற்கு முக்கியமாக மக்களின் பங்கு அதிகம் எங்களுக்கு தேவை... மரம் நடுவது மக்கள் இயக்கம்..

விருதுகள்
மரங்களை நன்றாக பராமரிக்கும் குடியிருப்பு நல்ல சங்கங்களுக்கு மாநகராட்சி சார்பாக விருது வழங்கப்படும் என்றும் உற்சாகப்படுத்தி இருந்தார். இந்நிலையில், சென்னை மாநகரை பசுமையாக்க வருடத்துக்கு 2 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கமிஷனர் ககந்தீப்சிங் தெரிவித்துள்ளார். உலக புகைப்பட தினத்தையொட்டி சென்னையில் பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் சங்கம் சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது...

மரக்கன்றுகள்
ராஜீவ்காந்தி சாலை கூவம் ஆற்றின் கரையோரத்தை பசுமையாக்கும் வகையில், கமிஷனர் ககந்தீப்சிங் பேடி மரக்கன்றுகளை நட்டுவைத்தார்... அதேபோல, புகைப்படக் கலைஞர்களும் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.. இந்த கலைஞர்கள் புகைப்படம் நடுவதை கமிஷனர் கேமராவில் படமெடுத்து அவர்களை கவுரவப்படுத்தினார்.

2 லட்சம்
இறுதியில் நிகழ்ச்சியில் பேசிய அவர், "சிங்கார சென்னை 2.0"திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 2 லட்சம் மரங்கள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.. இதனால் பசுமையும்,சுத்தமான காற்றும் குளிர்ச்சியும் சென்னைவாசிகளுக்கு கிடைக்கும்.. திருவனந்தபுரம், பெங்களூருவில் அதிகளவு மரங்கள் இருப்பதை போன்று சென்னையிலும் காலியாக உள்ள இடங்களில் பொதுமக்கள் பங்களிப்புடன் மரங்கள் வளர்க்கப்படும்" என்று உறுதி தந்தார்.
Recommended Video

மகிழ்ச்சி
சென்னையை மீண்டும் சிங்கார சென்னையாக்குவோம் என்று ஏற்கனவே திமுக தன்னுடைய தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தது.. சென்னையின் பழைய பொலிவை மீட்டு கொண்டு வரும் வகையில், இதற்கான பணிகளும் செயல்படுத்தப்பட்டுள்ளன.. இந்த திட்டத்துக்கு மேலும் முக்கியத்துவம் தரும் வகையில், பட்ஜட் கூட்டத்தொடரில் சென்னைக்கான சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தது. இது சென்னைவாசிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது மாநகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ள 2 லட்சம் மரங்கள் நடும் திட்டமும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications