Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு அதிர்ச்சி தந்த மாநகராட்சி.. வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொழில் நிறுவனங்களுக்கான நிறும வரியை சென்னை மாநகராட்சி அதிரடியாக உயர்த்துகிறது. இதற்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. எவ்வளவு வரி உயர்வு என்பதை அறிவித்துள்ள சென்னை மாநகராட்சி, ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்காமல் என்றும் அறிவித்துள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: "தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் திருத்தியமைக்கப்பட்ட சட்டப்பிரிவு மற்றும் தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகளின்படி நிறும வரியினை (கம்பெனி வரி) திருத்தியமைப்பது குறித்து அறிவிக்கை வெளியிடப்படுகிறது

Chennai Corporation drastically increased the corporate tax for industrial companies

அதன்படி, 2023-24-ல் 2-ம் அரையாண்டு முதல் திருத்தியமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள நிறுமம் வரியின் புதிய விகிதங்களாக, ஒரு லட்சத்திற்கு குறைவாக முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு அரையாண்டு நிறும வரி ரூ.300 எனவும், ரூ.1 லட்சத்திற்கு மேல் ரூ.600 எனவும், ரூ.2 லட்சத்திற்கு மேல் ரூ.900 எனவும், ரூ.3 லட்சத்திற்கு மேல் ரூ.1,200 எனவும், ரூ.5 லட்சத்திற்கு மேல் ரூ.1,500 எனவும், ரூ.10 லட்சத்திற்கு மேல் மற்றும் அதற்கு மேல் ரூ.3 ஆயிரம் எனவும் உயர்த்தப்பட உள்ளது.

இதேபோல, சென்னை மாநகராட்சி எல்லைக்கு வெளியே தலைமையிடம் அமைத்து சென்னையில் இயங்கும் கிளை நிறுவனங்களுக்கான அரையாண்டு நிறும வரியும் உயர்த்தப்பட உள்ளது.

மேலும், ஒரு நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அல்லது முதன்மை அலுவலகம் சென்னை மாநகரில் இல்லாமல் இருந்தாலும் முதல் ஆண்டிற்கு நிறுமம் வரி ரூ.75 செலுத்தப்பட வேண்டும். எனவே, இதுகுறித்த ஆட்சேபணைகள் ஏதும் இருப்பின், அறிவிப்பாணை வெளியிட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குக்குள் பெறப்படும் பட்சத்தில் சென்னை மாநகராட்சியால் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

இதுகுறித்த ஆட்சேபணைகள் ஏதேனும் இருந்தால் அதனை, கூடுதல் தலைமைச் செயலாளர் / ஆணையாளர். பெருநகர சென்னை மாநகராட்சி, ரிப்பன் கட்டிடம், சென்னை - 600 003 என்ற முகவரிக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது" இவ்வாறு சென்னை மாநகராட்சியின் அறிப்பில் கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+