சென்னையில் மிக முக்கிய சாலையை.. கண்ட்ரோல் எடுக்கும் மாநகராட்சி.. இது ரொம்ப முக்கியம்.. ஏன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த சில மாதங்களாக மோசமான நிலையில் உள்ள வேளச்சேரி மற்றும் பெருங்குடி எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையங்களை இணைக்கும் சாலையை சீரமைக்கும் பணியை சென்னை மாநகராட்சி மேற்கொள்ள உள்ளது.

ஜனவரியில் தொடங்கும் பணிகள், அடுத்த ஆண்டு கோடை காலத்தில் முடிக்க உள்ளனர். இந்த இடத்தை பொதுமக்களுக்கான ஹேங்கவுட் இடமாக மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டு பணிகள் நடக்க உள்ளன.

metro

வேளச்சேரியில் இருந்து OMR க்கு செல்லும் பல பயணிகளுக்கு போக்குவரத்து நேரத்தை குறைக்கும் வகையில் இந்த சாலை முக்கியமான ஒன்றாகும். CMRL கட்டுமானத்தால் ஏற்படும் போக்குவரத்து மாற்றத்தின் காரணமாக தொந்தரவு இல்லாமல் பெருங்குடியை அடைய இது ஒரு குறுக்குவழியாகும்.

ஆனால், சாலையின் பெரும்பகுதி பள்ளங்களால் நிறைந்து, மழை நாட்களில் சேறும், சகதியுமாக மாறி உள்ளது. மோசமான நிலை காரணமாக இந்த சாலை வெள்ளத்தில் மூழ்கும்நிலையில் உள்ளது. இதனால் வேளச்சேரி - பெருங்குடி இடையே இருவழிப் போக்குவரத்திற்கு பயணிகள் ஒரு வழிப்பாதையை மட்டுமே பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.

இதை மனதில் வைத்து கடந்த சில மாதங்களாக மோசமான நிலையில் உள்ள வேளச்சேரி மற்றும் பெருங்குடி எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையங்களை இணைக்கும் சாலையை சீரமைக்கும் பணியை சென்னை மாநகராட்சி மேற்கொள்ள உள்ளது.

தற்போது அந்த சாலை உரிமை ரயில்வேயிடம் உள்ளது, ஆனால் சென்னை மாநகராட்சி பராமரிப்பு பணிகளை மட்டும் கையகப்படுத்தி, அழகுபடுத்தும் பணிகளை மேற்கொள்ளும். இதற்கான, புரிந்துணர்வு ஒப்பந்தம் தற்போது நிலுவையில் உள்ளது.

தற்போது, ​​நிலப்பரப்பு ஆய்வு நடந்து வருகிறது, அடுத்த 15 நாட்களுக்குள் பணிகள் முடிவடையும். சேதமடைந்த மழைநீர் வடிகால்களும் மாநகராட்சி மூலம் புனரமைக்கப்படும். சிறந்த சாலை மேற்பரப்பு, நடைபாதை, பெஞ்சுகள், கூடுதல் தெரு விளக்குகள் மற்றும் குளங்கள் ஆகியவற்றை சென்னை மாநகராட்சி அமைக்கும். ஜனவரியில் வடகிழக்கு பருவமழை முடிந்த பிறகு தொடங்கும் பணிகள் மார்ச்-மே மாதத்திற்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோடை காலத்தில் இது பொதுமக்களுக்கு திறக்கப்படும்.

சென்னையில் அமைக்கும் மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்க முடிவு செய்துள்ளது. அதேபோல் 7425 கோடி ரூபாயை வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது போக 33500 கோடி ரூபாய் கடனை மத்திய அரசு உலக வங்கிகளிடம் இருந்தும் பெற்று கொடுக்கும். இந்த கடனை சென்னை மெட்ரோ நிர்வாகமே அடைக்கும்.. அதாவது தமிழ்நாடு அரசு அடைக்கும்.

ஆனால் மத்திய அரசு வாங்கித்தருவதால் தமிழ்நாடு அரசின் நேரடி கடன் சுமை குறையும். எளிதாக கடனும் கிடைக்கும். இதன் காரணமாக.. தற்போது சென்னையில் மெட்ரோ பணிகள் தீவிரம் அடைந்து வருகின்றன. திருமங்கலம் உள்ளிட்ட மூன்று இடங்களில் மெட்ரோ கட்டம்-2 திட்டத்தின் கீழ் பல்வேறு மெட்ரோ நிலையங்களை CMRL கட்ட திட்டமிட்டுள்ளது. மெட்ரோ ரயிலோடு சில மாபெரும் கட்டுமானங்களையும் மேற்கொள்ள மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

வழித்தடங்கள் என்னென்ன?: சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ 3 வழித்தடங்களில் கொண்டு வரப்பட உள்ளது. 118.9 கிமீ தூரத்திற்கு இந்த மெட்ரோ பாதை கொண்டு வரப்பட உள்ளது. முதல் கட்டத்திற்கு ஆலந்தூர் எப்படி மையமாக இருந்ததோ இரண்டாம் கட்டத்திற்கு ஓஎம்ஆர் மையமாக இருக்கும். இந்த நிலையில் கோடம்பாக்கம் - பூந்தமல்லி இடையிலான மெட்ரோ ரயில் சேவை, 2025ம் ஆண்டு டிசம்பரில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மெட்ரோ சேவை: இந்த நிலையில்தான் ஓஎம்ஆர் சாலையில் அமைக்கப்படும் மெட்ரோ 2 பணிகள் முடிந்து 2027ல் இங்கே போக்குவரத்து தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 2027க்குள் சிறுசேரி முதல் பெருங்குடியில் உள்ள நேரு நகர் வரை மெட்ரோ இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதில் 20-கிமீ நீளம் கொண்ட மாதவரம் முதல் சிப்காட் வரை - 45.4 கிமீ பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இங்கு நேரு நகர், கந்தஞ்சாவடி, பெருங்குடி, தொரைப்பாக்கம், மேட்டுக்குப்பம், பிடிசி காலனி, ஒக்கியம்பேட்டை, காரப்பாக்கம், ஒக்கியம் தொரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், சோழிங்கநல்லூர் ஏரி I மெட்ரோ, சோழிங்கநல்லூர் ஏரி II மெட்ரோ, செம்மஞ்சேரி 1 மெட்ரோ, செம்மஞ்சேரி 2 மெட்ரோ, காந்தி நகர், நாவலூர் மெட்ரோ, சிறுசேரி, சிறுசேரி SIPCOT I மெட்ரோ மற்றும் சிறுசேரி SIPCOT II மெட்ரோ ஆகிய நிலையங்கள் இந்த பாதையில் அமைக்கப்படும். மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 44.6 கிமீ நீளம் (காரிடார் 5) மற்றும் லைட் ஹவுஸ்-பூந்தமல்லி வரையிலான 26.1 கிமீ ஆகியவை இரண்டாம் கட்ட திட்டத்தில் உள்ள மற்ற இரண்டு வழித்தடங்களாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+