சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உதவி பொறியாளரை தாக்கியதாக.. திமுக எம்.எல்.ஏ சங்கர் மீது போலீசில், சென்னை மாநகராட்சி அதிரடி புகார்

Google Oneindia Tamil News

சென்னை: மாநகராட்சி உதவி பொறியாளரை தாக்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டில் திருவொற்றியூர் திமுக எம்.எல்.ஏ கே.பி.சங்கர் மீது சென்னை மாநகராட்சி போலீசில் புகார் கொடுத்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக கே.பி.சங்கரின் கட்சி பதவி ஏற்கனவே பறிக்கப்பட்டுள்ளது.

திருவொற்றியூர் திமுக எம்.எல்.ஏ.வாக இருப்பவர் கே.பி.சங்கர். இவர் கடந்த சட்டமன்றத் தேர்தலில் திருவொற்றியூர் தொகுதியில் சீமானை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். மேலும் இவர் திருவொற்றியூர் மேற்கு பகுதி கழகச் செயலாளராகவும் பொறுப்பு வகித்து வந்தார்.

ஆட்டோ சின்னம் கேட்ட விஜய் மக்கள் இயக்கம்.. மறுப்பு தெரிவித்த மாநில தேர்தல் ஆணையம் ஆட்டோ சின்னம் கேட்ட விஜய் மக்கள் இயக்கம்.. மறுப்பு தெரிவித்த மாநில தேர்தல் ஆணையம்

 மாநகராட்சி உதவி பொறியாளரை தாக்கியதாக குற்றச்சாட்டு

மாநகராட்சி உதவி பொறியாளரை தாக்கியதாக குற்றச்சாட்டு

இதற்கிடையே திருவொற்றியூரில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மாநகராட்சி உதவி பொறியாளரை கே.பி.சங்கரும், அவரது ஆதரவாளர்களும் சில நாட்களுக்கு முன்பு தாக்கியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. சாலை பணிகளை அமைக்க வந்த 13 லாரிகளில் வந்த தார்-ஜல்லிக் கலவையையும் அவர்கள் திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது.

கட்சி பதவி பறிப்பு

கட்சி பதவி பறிப்பு

ஆளுங்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.வே இப்படி செய்யலாமா என்று கே.பி.சங்கருக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இதனை தொடர்ந்து கட்சியின் கட்டுப்பாடுகளை மீறியதால் அவரது பதவி பறிக்கப்பட்டுள்ளது. திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி. சங்கர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி வருவதால் திருவொற்றியூர் திமுக மேற்குப் பகுதிக் கழகச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அதிரடியாக அறிவித்தார்.

போலீசில் புகார்

போலீசில் புகார்

சங்கரின் கட்சி பதவி பறிக்கப்பட்டால் மட்டும் போதாது. அவரின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுகவின் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் வலியுறுத்தி இருந்தனர். இந்த நிலையில் திருவொற்றியூர் திமுக எம்.எல்.ஏ சங்கர் மீது சென்னை மாநகராட்சி போலீசில் புகார் கொடுத்துள்ளது. மாநகராட்சி உதவி பொறியாளரை தாக்கியது தொடர்பாக கே.பி.சங்கர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. அவர் அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு தொடர்பாக போலீசின் ரியாக்ஷன் என்ன என்பது? இனிதான் தெரிய வரும். சங்கரின் கட்சி பதவி பறிக்கப்பட்டால் மட்டும் போதாது. அவரின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுகவின் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் வலியுறுத்தி இருந்தனர். இந்த நிலையில் திருவொற்றியூர் திமுக எம்.எல்.ஏ சங்கர் மீது சென்னை மாநகராட்சி போலீசில் புகார் கொடுத்துள்ளது. இது தொடர்பான புகார் மனுவை சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி மின்னஞ்சல் (இ-மெயில்) மூலமாக காவல் ஆணையருக்கு அனுப்பியுள்ளார். மாநகரட்சி உதவி பொறியாளரை தாக்கியது தொடர்பாக கே.பி.சங்கர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. அவர் அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு தொடர்பாக போலீசின் ரியாக்ஷன் என்ன என்பது? இனிதான் தெரிய வரும்.

 திமுக மேலிடம் அதிருப்தி

திமுக மேலிடம் அதிருப்தி

தனது மீதான குற்றச்சாட்டு குறித்து திருவொற்றியூர் எம்.எல்.ஏ. கே.பி.சங்கர் நேற்று திமுக தலைமையிடம் நேரில் விளக்கம் அளித்து இருந்தார், கட்சிக்கும், ஆட்சிக்கும் களங்கம் ஏற்படும் வகையில் செயல்பட்ட அவர் மீது கட்சி மேலிடம் மிகுந்த அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

English summary
Chennai Corporation has lodged a complaint with the police against tiruvottiyur DMK MLA KP Shankar. complaint is based on an allegation that the corporation assaulted an assistant engineer. KP Shankar has already been stripped of his party post over the issue
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X